போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
பயணம்...... Arul11 பயணம்...... Untitl11 பயணம்...... Iiiiii12 பயணம்...... Untitl13 பயணம்...... Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

பயணம்......

Go down

பயணம்...... Empty பயணம்......

Post by Admin Sun Dec 02, 2012 8:21 am

பயணம்
********
[You must be registered and logged in to see this image.]
ஏற்கெனவே ஒரு பிள்ளையை இந்த மண்ணின்
விடுதலைக்காக உவந்தளித்த ஒரு மாவீரர் குடும்பத்திலிருந்து போராடுவதற்கு
இரண்டாவது வீரனாக வந்திருந்தான் அவன்.
போர
ாட்ட அறிவும் திடமும் அவனுள் பெருகியிருந்தது.

அவன் தன்னைக் கரும்புலியாக இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேயிருந்தான்.
இடைவிடாது அவன் விடுத்துக்கொண்டிருந்த வேண்டுகை அவனின் முயற்சியின் பயனாக ஒருநாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இப்போது அவனொரு 'கரும்புலிவீரன்". அதுவும் ஒரு மறைமுகக் 'கரும்புலிவீரன்".
எதிரியின் தலைநகரத்தில் மிக முக்கியமான இலக்கின் மீதான தாக்குதலுக்கு அவன் தெரிவாகினான்.

அவனிடமிருந்த சாரதியத்திறமையில் நம்பிக்கை வைத்து அந்தத் தாக்குதலுக்கான
வெடிகுண்டு வாகனத்தைச் செலுத்தும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்பட்டது.
தளத்திலிருந்து தாக்குதல் களத்திற்கு அவன் புறப்பட வேண்டும்.

எல்லாம் சரிவந்து இங்கிருந்து ஒருநாள் புறப்பட்டுப் போனவன்;; பயணம் தடைப்பட்டு மீளவும் முகாம் வர வேண்டியதாயிற்று.
ஆனால், அங்கே களத்தில் அந்தத்தாக்குதலுக்கான ஒழுங்குபடுத்தல்களை அங்கிருந்தவர்கள் தொடர்ந்து மேற்கொண்டபடியிருந்தனர்.
அடுத்த பயணம் சரி வரும் வரையில்... அவன் இங்கிருக்க வேண்டும்.
அந்த நாட்களில் அவனுக்கு இங்கு மேலதிகப் பயிற்சி வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.
எதிரியின் தலைநகரத்து நவீனத்தெருவில் - சனநெரிசல் மிக்க பகுதியூடாகக்
குண்டூர்தியைச் செலுத்தி; தாக்குதல் இலக்கின் மீது... மோதி வெடிக்க
வேண்டும்.

அவனுக்கான மேலதிகப் பயிற்சி இங்கு ஆரம்பமாகிவிட்டது.
மல்லாவியின் தெருக்களில்; அவன் அசுர வேகத்தில்; வாகனம்; செலுத்தும் பயிற்சியைப் பெற்றுக் கொண்டிருந்த ஒருநாள்.

வெயில் சுட்டெரிக்கும் அன்றைய நாள் காலையில் தொடங்கிய பயிற்சி மதியத்தைத்
தாண்டியும் தொடர் வயிறு பசியில் விறாண்டத் தொடங்கியது. அவன் அதை
வெளிக்காட்டாது தொடர்ந்தும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.
அவனுக்கு அப்போது பயிற்சியளித்துக் கொண்டிருந்த அந்தத் தளபதிக்கும் கூட
கடுமையான பசி.
கடையில் வேண்டிச் சாப்பிடு வதாக இருந்தால், இருவரிடமும் ஒரு சதம் காசும் கிடையாது.

ஒருவரின் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டிருக்க - வெட்கத்தை விட்டு அந்தத் தளபதி தான் கேட்டார்.

'மச்சான் சரியா பசிக்குதடா...."
உனக்கு தெரிந்தாக்கள் யாரும் இஞ்சயிருந்தால் சொல்லு... போய்ச் சாப்பிடுவம்....
முகத்தைத் திருப்பித் தளபதி யைப் பார்த்தவன்....
புளுதியைக்கிளப்பி விரைந்து கொண்டிருந்த வாகன இயந்திர ஒலியினூடே சத்தமாக அவசர அவசரமாக மறுத்தான்
இல்ல மாஸ்டர்..
எனக்கு இஞ்ச யாரையும் தெரியாது...

என்ன நினைத்தானோ தெரியாது சற்றுத்தூரம் சென்ற பின்...
ஒரு வீட்டு வாசலில் கொண்டு போய் வாகனத்தை நிறுத்திவிட்டு.... அந்த வீட்டை உற்றுப் பார்த்தான்....
அது வீடல்ல ஓலைக் குடிசை.
வறுமையின் அத்தனை சாயலையும் அப்படியே விழுங்கியபடி மயான அமைதி கொண்டு
குந்தியிருந்தது. உள்ளே போவதா... விடுவதா? அவனுக்குள் தயக்கம்
எழுந்திருக்கும் போல.... தாமதித்தவன் பின்னர் தனக்குத்தானே ஏதோ நியாயம்
கற்பித்தவனைப் போல உள்ளே கூட்டிப் போனான்....

ஆட்கள் வரும்
சத்தத்தைக் கேட்டு எட்டிப் பார்த்த அவனின் தங்கையைப் போன்ற ஒரு தங்கை...
ஏதோ சொல்ல... அவனின் தாயைப் போன்ற ஒரு தாய்... முற்றத்திற்கு வந்தாள்....
முகத்தில் மலர்ச்சியும் - சோகமும் - தவிப்பும் நிறைந்த உணர்வோடு அவர்களை அவள் மௌனமாக வரவேற்றாள்.

எந்த வார்த்தைகளுமின்றி அங்கே மௌனம் மட்டும் தான் நிரம்பிக் கிடந்தது.
குடிசையின் திண்ணையில் தளபதி பசி மயக்கத்தில் அமர... தயங்கித் தயங்கி அந்தக் கரும்புலி வீரனும் அமர்ந்தான்.

அவனின் அம்மாவைப் போன்ற அம்மா எதுவுமே பேசவில்லை...
தங்கையைப் போன்ற தங்கை அவளும் எதுவும் பேசவில்லை....
உள்ளேயிருந்து அப்போது தான் வெளியே வந்த அவனின் தம்பியைப் போன்ற தம்பி அவனும் கூட ஒன்றுமே பேசவில்லை....
சரி... இவனாவது ஏதாவது பேசுவானென்றால் அதுவுமில்லை...
முற்றத்தில் நின்ற முட்கள் நிறைந்த அந்தத் தேசி மரத்தின் இலைகள்... அந்த அம்மாவின் கைகளுக்குள் சிக்குண்டு நசிந்து கொண்டிருந்தது.
அவளினுள்ளே அவளை அழுத்திக் கொண்டிருக்கும் துயர மனதைப் போல...
அந்த மௌனப் பொழுதை அந்த அம்மாதான் கலைத்தாள்.
வந்தவர்களுடன் எதுவுமே பேசாது சின்னவனை அழைத்து.... அவனின் காதுக்குள் ஏதோ சொன்னாள்....

குடிசைக்குள் போன சின்னவன் கையிலெடுத்த பேணியோடு படலையைத் தாண்டிப்
போனான். ஆனால், அவன் போக விருப்பமின்றிப் போய்க்கொண்டிருக்கின்றான் என்பதை
அவனின் நடை உணர்த்தியது.

பலமுறை இப்படிப் போயிருப்பான் போல.
இம்முறையும் எப்படி இப்படிப் போவதென்ற தயக்கம் அவனுள்ளே இருந்திருக்க வேண்டும்...
போனவன்... போகும்போது கொண்டுபோன தயக்கத்தையும் வெட்கத்தையும்
தூக்கியெறிந்துவிட்டுத் துள்ளியோடி வர... அம்மாவின் முகத்திலும்
மலர்ச்சி...
அந்த மௌனப் பொழுதுக்குள் அவர்களுக்கிடையே ஆயிரமாயிரம் போராட்டங்கள் உள்ளே நடந்து முடிந்ததை அவனும் - அவர்களும் நன்கு அறிவர்...
அம்மா தேசிமரத்து இலைகளைக் கைவிட்டு அவர்களுக்காகவே காய்த்திருப்பது போல
கிளைகளில் தொங்கும் தேசிக்காயைப் பிடுங்கிக் கொண்டு உள்ளே போனாள்......
அவர்களால் அவ்வளவுதான் அப்போது முடியும்...

பேணி நிரம்பிய
தேசிக்காய் தண்ணீரோடு அந்த அம்மா வெளியே வந்தாள்... அவளின் விழிகள் இதை
ஏற்றுக்கொள்ளுங்கள் என்று... கெஞ்சுவது போலிருந்தது.
அந்தக் கரும்புலிவீரனுக்கு அம்மாவின் ஏழ்மையைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாமலிருந்திருக்கும் போல...

முழங்கால்களில் கைகளை ஊன்றித் தலையைக்கவிழ்த்துவிட்டு... நிலத்தைப்
பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அம்மா அருகில் வந்தது கூடத் தெரியாது....
கூடப்போன தளபதிக்கு எல்லாம் விளங்கிவிட்டது.
தேசிக்காய் தண்ணீரை வாங்கிக் குடித்த அந்தத் தளபதி கண்களாலேயே நன்றி சொல்லிவிட்டு கரும்புலி வீரனிடம் சொன்னார்....
'நான் வெளியில் நிக்கிறன் நீ அவையோடு கதைத்துவிட்டு வா..."
இப்போதும் அவசர அவசரமாக அதை மறுத்தான்.
இல்ல மாஸ்டர் கதைக்க ஒண்டுமில்லை... நானும் வாறன்... என்று சொல்லியபடி வெளியில் வந்தவன்; வாகனத்தை வேகமாக ஓட்டத்தொடங் கினான்...

பயிற்சி முடிந்து அவனின் பயண நாளும் வந்தது.
இனி அவன் இங்கிருந்து புறப்பட வேண்டும்.
எல்லோரிடமும் கையசைத்து விடை பெற்றுக்கொண்டிருந்தான்.
இந்தப் பயணம் உறுதியானது. இனி அவன் திரும்பி வரப்போவதில்லை.
புறப்படும் வேளையில் எல்லோரிடமும் விடைபெற்ற அவன்....
தான் ஆழமாக நேசித்த அவனின் அந்த அம்மாவைப் போன்ற அம்மாவிடம் போகவில்லை....
அவனின் தங்கையைப் போன்ற தங்கையிடம் போகவில்லை....
அவனின் தம்பியைப் போன்ற தம்பியிடம் அவனிடமும் போகவில்லை...
ஏன்...?
அந்த அம்மா அவனின் அம்மாவைப் போன்ற அம்மா இல்லை...
அவள் அவனின் தங்கையைப் போன்ற தங்கையில்லை...
அவன் அவனின் தம்பியைப் போன்ற தம்பியுமில்லை...
அவர்கள் அவனின்...
அம்மாவும்...
தங்கையும்...
தம்பியும் தான்...
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» "காலநிலை சீர்கேட்டிற்கு மத்தியில் ஈழப்பற்றாளனின் விடுதலை நோக்கிய பயணம்"
» "கிளாறவுஸ் மாநிலத்திலிருந்து வெற்றிகரமாகத் தொடங்கப்பட்ட வைகுந்தனின் விடுதலை நோக்கிய பயணம்"
» "இலங்கைக்கு பயணம் செய்யும் பிரித்தானியக் குடிமக்களுக்கு புதிய எச்சரிக்கை"
» "எமது நிலம் எமக்கு வேண்டும் – மனிதநேயப் பயணம் தொடர்கிறது மிதிவண்டியில்"
» "சுவிஸின் பதினேழு மாநிலங்களைக் கடந்த விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம்"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum