Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
''புலிகள் புத்திசாலிகள், பயங்கர திறனுள்ள எதிரிகள், தந்திரமானவர்கள், பலம் உள்ளவர்கள்!'' :-அதிகாரி குல்வந்த் சிங்..! ‘’போர் முனையில் தமிழக நிருபர்களின் அனுபவங்கள்’’
போர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1

''புலிகள்
புத்திசாலிகள், பயங்கர திறனுள்ள எதிரிகள், தந்திரமானவர்கள், பலம்
உள்ளவர்கள்!'' :-அதிகாரி குல்வந்த் சிங்..! ‘’போர் முனையில் தமிழக
நிருபர்களின் அனுபவங்கள்’’
யாழ்ப்பாண யுத்தத்தை நேரடியாகப் பார்க்க,
23.10.1987 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாட்டு நிருபர்கள் தனி விமானத்தில்
அழைத்துச் செல்லப்பட்டார்கள். அந்நிருபர்கள் தங்கள் அனுபவங்களைக்
கூறியுள்ளனர்.
முராரி (டெக்கான் ஹெரால்டு)
''எங்களை
ஏற்றிச் சென்ற ஐ.ஏ.எஃப். விமானம் பலாலி விமான தளத்தில் எங்களை நேராக
இறக்கிவிட்டது. அங்கு இருந்து ஒரு ஹெலிகாப்டரில் மண்டைத் தீவுக்கு வந்து,
அங்கு இருந்து யாழ்கோட்டை வாயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். கோட்டை
மதில் சுவரில் இருந்து நாங்கள் யுத்தத்தைப் பார்க்க அனுமதிக்கப்பட்டோம்.
நாங்கள் இருந்த இடத்தில் இருந்து சுமார் 300-ல் இருந்து 500 மீட்டர்
தூரத்துக்குள் யுத்தம் நடந்துகொண்டு இருந்தது. புலிகள் பக்கத்தில் இருந்து
சரமாரியாகத் துப்பாக்கிச் சத்தம் வந்துகொண்டு இருந்தது. நம் இந்தியப்
படையினர் மெதுவாக முன்னேறி துப்பாக்கியால் சுடுவதும் கேட்டது. எது புலிகள்
பக்கத்திய குண்டு, எது நம் அமைதிப் படையின் குண்டு என்பதன்
வித்தியாசத்தையும் நம் இந்திய அதிகாரிகள்தான் விளக்கினார்கள்.
யாழ்நகர் முக்கால் பகுதி வரையிலும் சென்று இந்திய ராணுவம் புலிகளை
வெற்றிகரமாக முறியடித்ததாக அன்று எங்களுக்குச் சொல்லப்பட்டது. 'இன்று யாழ்
நகரையே இந்தியப் படை கைப்பற்றிவிட்டது. ஆனாலும், காடுகளில் போய்
மறைந்துகொள்ளும் வாய்ப்பு இருப்பதால், கொஞ்சம் சந்தடி அடங்கியதும்
மறுபடியும் கெரில்லா யுத்த முறையை ஆரம்பிக்கப் புலிகளால் முடியும்’ என்று
இந்திய அதிகாரிகளே ஒப்புக்கொண்டார்கள்.
எனக்கு என்னவோ அங்கு உள்ள
போர் நிலைமைகளைப் பார்த்தபோது நம் இந்திய வீரர்களிடம் கொஞ்சம் உற்சாகம்
குறைந்து இருக்கிறார் போல் படுகிறது. இந்திய அரசு, புலிகளை எப்படியாவது
சந்தித்துப் பேசி அவர்களையும் சமாதான வழிக்குக் கொண்டுவருவதுபற்றியும்
யோசிக்க வேண்டும். ஏனென்றால், புலிகள் இன்றி யாழ்ப்பாணப் பிரச்னைக்கு
நிரந்தரத் தீர்வு இருக்க முடியாது.''
கே.வி.நாராயணன் (யூ.என்.ஐ)
'நாங்கள் போனபோது நடந்துகொண்டு இருந்த சண்டையில், மன்னிக்கவும்... யுத்தம்
என்று சொல்ல வேண்டும் அல்லவா? பட்டாசு வெடிப்பது போன்ற சத்தங்களை மட்டுமே
எங்களால் கேட்க முடிந்தது. எந்த நிருபராவது, 'புலிகள் கண்ணி வெடி வைப்பதைப்
பார்த்தேன்... அதைப் பார்த்தேன், இதைப் பார்த்தேன்’ என்று
சொல்வார்களேயானால் அது முழுப் பொய். ஏனென்றால், பி.பி.சி. நிருபர் ஒருவர்
அப்படி எழுதியிருக்கிறார். இதுவரையில் நடந்த எந்த யுத்தத்திலும், ஏன்
வியட்நாமிலும் கூடத் தங்களின் சொந்த ரிஸ்க்கில் நிருபர்கள் யுத்தத்தை
நேரிலேயே பார்த்திருக்கிறார்கள். ஆனால், இங்கே யாழ்கோட்டை வாயிலோடு
எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது அநியாயம்.''
வின்சென்ட் டிசௌஸா (தி வீக்)
''ரொம்பவும் தாமதமாகத்தான் புலிகளின் கண்ணி வெடிகளைத் தந்திரமாக
முறியடிக்க நம் வீரர்கள் கற்றிருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்தியப்
படை முன்னேறி இருந்தாலும், புலிகள் அனைவரையும் நிராயுதபாணிகளாக்கும் என்று
சொல்ல முடியாது. ஏனெனில், யாழ்நகரில் இருந்து படகுகள் மூலம் மற்ற
தீவுகளுக்குச் சுலபமாகப் போக முடியும் என்பதை எங்களால் பார்க்க முடிந்தது.
எனவே, அப்படித் தப்பிச் செல்லும் புலிகள் மீண்டும் போர் தொடுப்பார்கள்
என்பதில் சந்தேகம் இல்லை. யாழ் நகரின் தெருக்களில் மருந்துக்குக்கூட மனித
நடமாட்டம் இல்லை. பொதுமக்களோடு மக்களாக மறைந்து இருக்கும் புலிகளை அடையாளம்
கண்டுகொள்வது இந்தியப் படைக்கு மிகப் பெரிய பிரச்னையாக இருக்கும்.
நாங்கள் ஹெலிகாப்டரில் பலாலிக்குத் திரும்பிக்கொண்டு இருந்தபோது யாழ்
நகரின் நாலைந்து இடங்களில் புகை மண்டலங்களைக் காண முடிந்தது. அவை எல்லாம்
வெட்டவெளியில் நம் இந்திய ராணுவம் வெடிக்கும் வெடிகள் என்றும், அதன் மூலம்
ஏற்படும் புகையில், நம் வீரர்கள் வெற்றிகரமாக நுழைந்து புலிகளைத் தந்திரமாக
முறியடிப்பார்கள் என்றும் எங்களுக்குச் சொல்லப்பட்டது. ஆனால், அன்றைக்கும்
நம் ஊர் டி.வி-யில் நாலைந்து வருடங்களுக்கு முன் இடிந்துபோன
கட்டடங்களையும் நம் இந்தியப் படை ஏற்படுத்திய புகை மண்டலங்களையும்
காட்டி... 'வன்முறையாளர்கள் எல்.டி.டி.இ-யினரால் சேதமாக்கப்பட்ட இடங்கள்’
என்று செய்தி வாசித்தார்கள்!''
வெங்கடரமணி (இந்தியா டுடே)
''
'கைப்பற்றினோம்’ என்ற வார்த்தைக்கு இவர்கள் அகராதியில் என்ன அர்த்தம் என்றே
எனக்குப் புரியவில்லை. காரணம், ஓர் இடத்தைக் கைப்பற்றினால் அங்கு இந்திய
வீரர்கள் இருக்க வேண்டும் அல்லவா?! அப்படி இவர்கள் கைப்பற்றியதாகக்
குறிப்பிட்ட எந்த இடத்திலும் இந்திய வீரர்களை நாங்கள் பார்க்கவில்லை.
நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு மேலாகப் பறந்தபோது, என்னால் ஒரே ஒரு
சைக்கிளையும் ஒரு பாதசாரியையும் மட்டுமே பார்க்க முடிந்தது. ஊரடங்குச்
சட்டம் அமுலில் இருக்கிறது என்பதால், பொதுமக்கள் நட மாட்டம் இல்லை. சரி...
ஆனால், அந்த இடங்களைக் கைப்பற்றித் தங்கள் பாதுகாப்பில் வைத்திருப்பதாகச்
சொல்லும் இந்திய வீரர்கள் என்ன ஆனார்கள்? அவர்களில் ஒரு தலையையும்
காணோமே!''
பாலசந்தர் (நியூஸ் டைம்)
''இந்திய ராணுவம் இன்று
என்று இல்லை... என்றைக்குமே புலிகளை அடக்கிவிட முடியாது. 'கோபமாக இருக்கும்
யாழ் மக்களுக்குச் சோறும் மருந்தும் கொடுத்துச் சாந்தப்படுத்திவிடலாம்’
என்று இந்திய அரசு நினைக்குமானால், அது தவறான அனுமானம். நம் மக்கள்போல்
இல்லை யாழ் மக்கள். அந்த ஊரில் இருக்கும் சாதாரண ஆள்கூடப் புத்திசாலி. நான்
22 நாட்களுக்கும் மேலாக அங்கே தங்கி இருந்ததில் புரிந்துகொண்ட உண்மை இது.
அவர்கள் ஒப்பந்தம் கையெழுத்தானதும் வெகு நாளைக்குப் பின் அமைதியான வாழ்க்கை
என்பதால் சந்தோஷப்பட்டார்கள். இந்திய சமாதானப் படையைப் பூரிப்போடு
வரவேற்றார்கள். ஆனால், அத்தனையும் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்துக்குள்ளாகவே
தலைகீழானது. அப்போது முதல் ஆங்காங்கே திறக்கப்பட்ட புலிகளின் அரசியல்
அலுவலகத் திறப்பு விழாக்களில், ஜெயவர்த்தனாவையும் இந்திய சமாதானப்
படையையும் அவர்கள் பகிரங்கமாகத் தாக்கியதை என்னால் காண முடிந்தது.
ஆனால், ஒன்று சொல்ல வேண்டும்... வெறுப்புகள் அனைத்தும் தமிழர்களின்
இடங்களில் சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பது போன்ற
நியாயமான கோரிக்கைகள் தகர்த்தெறியப்பட்டபோதுதான்.
பிறகு, திலீபன் மரணமும் புலிகளின் தற்கொலையும் 'புலிகள்தாம் நம்மைக்
காப்பார்கள்’ என்ற ஆழமான நம்பிக்கையை யாழ் மக்கள் மனத்தில் பதித்துள்ளது
ஆரம்பத்தில் புலிகளைப் பற்றிய குறைகளை இந்திய சமாதானப் படையுடன் யாழ்
மக்கள் பகிர்ந்துகொண்டதையும் நான் பார்த்திருக்கிறேன். அந்த மக்களின் அப்போ
தைய மனநிலையை இந்திய ராணுவம் தனக்குச் சாதகமாக உபயோகப்படுத்தி இருக்க
வேண்டும். ஒப்பந்த ஷரத்துக்களுக்கு உத்தரவாதம் அளித்து, தற்காலிக
கவுன்சிலைக் கூடிய சீக்கிரம் அமைத்து இருக்குமானால், பொதுத் தேர்தல்களில்
யாழ் மக்களேகூட பிரபாகரனைத் தோற்கடித்திருப்பார்கள்; ஆனால், இந்தியா அந்த
சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிட்டது!''
எல்லோரிடம் இருந்தும் பொதுவாகப் பேசித் தெரிந்துகொண்டவை:
நம் ராணுவ அதிகாரிகளே ஒப்புக்கொள்வதற்கு இணங்க, புலிகளிடம் இருக்கும்
ஆயுதங்கள், வெடிகள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவை. நவீனமானவை.
இதுவரை கிழக்கத்திய நாடுகளில் இதுபோன்ற அதி முன்னேற்ற ஆயுதங்களை நம் ராணுவ
அதிகாரிகள் பார்த்ததே இல்லை என்று வியந்தார்கள்.
புலிகளின்
தகவல் தொடர்புச் சாதனங்களும் 'பக்கா’வாக இருக்கின்றன. எல்லாமே ரிமோட்
கன்ட்ரோல்தான். இதனால் தப்பித்தலும் பொதுமக்களிடையே ரகசியப் பிரசாரமும்
புலிகளுக்கு வெகு சுலபம்.
''புலிகள் புத்திசாலிகள்... பயங்கர
திறனுள்ள எதிரிகள்... தந்திரமானவர்கள், பலம் உள்ளவர்கள்!'' என்று வர்ணித்து
இருக்கிறார் அதிகாரி குல்வந்த் சிங்.
''இதுவரை இந்தியா நடத்திய
எந்த யுத்தத்திலும் இவ்வளவு இந்திய வீரர்கள் மாண்டது இல்லை. 'இந்தப்
போரில்தான் 153 வீரர்கள் இறந்துபோனார்கள்; 538 வீரர்கள் படுகாயம்
அடைந்துள்ளார்கள்; 47 வீரர்கள் காணாமல் போயிருக்கிறார்கள் (இதுகூட அன்றைய
கணக்கின்படிதான். அதாவது, போர் தொடங்கிய 14 நாட்களுக்குள் இத்தனை இழப்பு).
இந்தப் போரில்தான் நிறைய இளநிலை ராணுவ அதிகாரிகளை இந்தியா இழந்துள்ளது''
என்றும் ராணுவ அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
''இது கடுமையான
யுத்தம்... கடந்த ஐந்து நாட்களாக ஒரு விநாடிகூடத் தூங்காமல் இருக்கிறோம்...
சிரித்துக்கொண்டே எங்களை நோக்கி நடந்துவரும் சின்னச் சின்ன சிறுவர்களும்
கையில் இருக்கும் கண்ணி வெடியை எங்கள் டிரக்கில் வீசி எறிந்துவிட்டு மாயமாக
மறைகிறார்கள்.
பெண்கள் திடீர் என்று புடைவைக்குள் இருந்து வெடி
நிறைந்த சிமென்ட் பைப்புகளைத் தூக்கி அடிக்கிறார்கள். இந்த நிலை யில்,
இந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் திகைக்கிறோம்''
என்று இந்திய வீரர்கள் கூறி இருக்கிறார்கள்

Similar topics
» புலிகள் அழிக்கப்படவில்லை - தமிழீழத்திற்கான போர் தொடரும் - காசி ஆனந்தன் ஐயா உறுதி!!!
» "முள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்! காட்டின் நடுவே நீச்சல் குளம்! மார்க்ஸின் ஈழ அனுபவங்கள்!- 3"
» இதயம் பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம் ...srilankan war crime photos
» "தமிழ் அரசாங்க உயரதிகாரியின் மனைவியை நிர்வாணமாகப் புகைப்படம் எடுக்கும்படி கூறிய இந்தியப்படை அதிகாரி (அவலங்களின் அத்தியாயங்கள்- 31) –நிராஜ் டேவிட்"
» "வன்னிப்போர் அவலங்களின் கதைகளை ஓவிய நாவலாகத் தயாரிக்கும் UNஇன் முன்னாள் அதிகாரி"
» "முள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்! காட்டின் நடுவே நீச்சல் குளம்! மார்க்ஸின் ஈழ அனுபவங்கள்!- 3"
» இதயம் பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம் ...srilankan war crime photos
» "தமிழ் அரசாங்க உயரதிகாரியின் மனைவியை நிர்வாணமாகப் புகைப்படம் எடுக்கும்படி கூறிய இந்தியப்படை அதிகாரி (அவலங்களின் அத்தியாயங்கள்- 31) –நிராஜ் டேவிட்"
» "வன்னிப்போர் அவலங்களின் கதைகளை ஓவிய நாவலாகத் தயாரிக்கும் UNஇன் முன்னாள் அதிகாரி"
போர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum