Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
களத்தில் இனப்பற்று
Page 1 of 1
களத்தில் இனப்பற்று
களத்தில் ….
**************
இனப்பற்று
ஆனையிறவுச் சமரில் ஈடுபட்ட பெண் போராளிகளை , கலை பண்பாட்டுக் கழக தலைமையகத்தில் கலைஞர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
சண்டை தொடர்பாக பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
கதைத்து முடித்தபின் – ஒரு நிலையில் ….
ஒவ்வொரு போராளியாக அவர்களை இயக்கத்துடன் இணையவேண்டும் என்ற என்ணத்தை
விளைவித்த காரணிகளைப்பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்கள். பெண் போராளிகளும்
சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
சூரியா என்றொரு பெண் போராளி , தனது தலையையும் , கையையும் அடிக்கடி அசைத்தபடியே
” நான் திருகோணமலை குச்சவெளியைச் சேர்ந்தவள். சரி , இனி நான்
இயக்கத்திற்கு ஏன் வந்தனான் எனச்சொல்லத் தேவையில்லை , உங்களுக்குத்
தெரியும் தானே திருகோணமலையில் என்னென்ன நடந்தது ” என்று தனது இடத்தின் ,
இராணுவ அட்டூழியங்களை , இலகுவாக வெளிப்படுத்திவிட்டு இருந்தாள்.
அடுத்ததாக நாதினி என்று அராலியைச் சேர்ந்த பெண் போராளி எழுந்தாள். அராலி யாழ்மாவட்டத்திலுள்ள கிராமம்.
” நீர் என்ன மாதிரி , உமது ஊருக்கு இராணுவம் வந்ததாலா வெளிக்கிட்டீர் ” என்று நகைச்சுவை உணர்வுடன் ஒருவர் கேட்டார்.
” அராலிக்கு இராணுவம் வந்தாத்தான் இயக்கத்துக்கு வரவேணும் என்று இல்லை.
இராணுவம் எங்க வெளிக்கிட்டாலும் அங்கும் தமிழர்கள்தானே இருக்கின்றார்கள் ”
தனது இனத்தின் மீதான பற்றை எளிமையாக வெளிப்படுத்திவிட்டு நாதினி சிரித்துக்கொண்டே அமர்ந்தாள்.
தோழமை
கலை பண்பாட்டுக் கழக தலைமைச் செயலகத்திற்கு கலைஞர்கள் சிலர் , ஆணையிரவில்
சண்டையிட்ட போராளிகளை சந்தித்து அவர்களின் அனுபவங்களைக் கேட்பதற்காக
வந்திருந்தார்கள்.
உரையாடல் நீண்ட நேரம் நடந்தது , குகன் என்று
ஒரு போராளி தன் அபாயம் நிறைந்த அனுபவங்களை அழகாகச் சொல்லி முடித்தான்.
அவனிடம் ” இந்தப்போர் முனையில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் எதையாவது
சொல்ல முடியுமா ? ” என்று கலைஞர் தரப்பில் இருந்து ஒருவர் கேட்டார்.
அவன் சிறிது நேரமாக சிந்தித்தபின் சொன்னான் ” பெரிதாக ஒன்றும் இல்லை ஒன்றைச் சொல்லலாம். ”
” எனக்கு அருகில் – 5 அல்லது 6 யார் தள்ளி – அவ்ரோ போட்ட குண்டொன்று விழுந்தது – ஆனால் வெடிக்கவில்லை ” என்று விட்டு நிமிர்ந்தான்.
எல்லோரும் வியப்புடன் சிரித்தார்கள் , அப்போ கலைஞர் ஒருவர் ” அது
வெடித்திருந்தா இன்று நீர் இதில் நிற்கமாட்டீர் ” என பலமான சிரிப்புடனே
சொல்லி முடித்தார்.
” நான் சாகிற பிரச்சினை இல்லை , என்னோடு ஏழு – எட்டு பொடியள் நிண்டவங்கள் , அவர்களும் செத்திருப்பார்கள் ”
ஒரு விடுதலைப்புலி தனது உயிரை விட தன் தோழர்களை அளவு கடந்து நேசிப்பதை இலகுவாகச் சொல்லிவிட்டு அமையாக அமர்ந்தான்.
பகிடி
ஆனையிறவு தடைமுகாமின் பின்பக்கமாக இருக்கும் காவல் நிலை ஒன்று – பரந்த
வெட்டைக்கு நடுவே இருந்த அந்தக் காவல் நிலையில் , வெயிலுக்கும் –
வெப்பத்திற்க்குக்கும் நடுவே போராளிகள் – தாக்குதலுக்கு தயாரான வேலைகளை
செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் குளிப்பதானால் 3 மைல்கள் பின்னால்
வரவேண்டி இருந்தது. அதனால் 10 அல்லது 15 நாட்களாக ஒருவருமே
குளிக்கவில்லை.ஒருநாள் கேசவன் என்ற ஒரு தோழன் பொறுப்பாளனிடம் சென்றான்.
” பத்துப்பதினைந்து நாளாகக் குளிக்கேலை , இன்றைக்காவது குளிக்க விடுங்கோ ” என்றான்.
” தம்பி , இந்த நேரத்தில குளிகவேனும் என்கிறாய் தற்செயலாக இராணுவத்தினர்
வெளிக்கிட்டா என்ன செய்யிறது எங்கட திட்டங்களே தவிடு பொடியாகிவிடும் ”
என்றான் பொறுப்பானவன். அவனிடமிருந்து கொஞ்ச நாளாக இந்தப்பதில் தான்
வருகிறது , இன்றும் இதைத்தான் சொல்வான் என்பது எல்லோருக்கும் தெரியும்.
குளிக்கக்கேட்ட கேசவன் வேறுபக்கம் திரும்பிக் கொண்டே சொன்னான்.
” இப்ப குளிக்கவிடாதீங்கோ பிறகு செத்தப்பிறகு உடல் மணத்தில மக்கள் அஞ்சலி
செய்யவும் பக்கத்தில வராதுகள் ” என்றான். சுற்றி இருந்த தோழர்கள்
சிரித்தார்கள். அவனது வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு பக்கத்திலிருந்த ஒரு
தோழன் சொன்னான்.
” பரவாயில்லை மச்சான் நீ உப்பளப் பக்கமாகத்தானே
இறங்குகிறாய் , செத்தாலும் பரவாயில்லை உப்புக்கை பழுதாகாமல் கிடப்பாய்.
எல்லாம் முடிந்தபிறகு நாங்களே உன்னை எடுத்து அடக்கம் செய்யிறம் “ என்று
சிரித்துக்கொண்டே சொன்னான் குளிக்கக்கேட்க வந்த தோழனும் சிரித்துக் கொண்டே
தனது வேலைகளைப் பார்க்கப் போய்க்கொண்டிருந்தான்.
இப்படித்தான் கடினமான சூழலுக்குள்ளும் சிரிப்புடனும் – மகிழ்ட்சியுடனும் அவர்கள் எதிரியைச் சுற்றி நின்றார்கள் .
- விடுதலைப்புலிகள் இதழ் ( ஆவணி – புரட்டாசி : 1991 )
” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

Similar topics
» இலங்கைக்கு எதிராக ரஜினி ரசிகர்களும் போராட்டக் களத்தில் குதித்தனர்
» "தொடரும் “டெசோ” நாடகம்! சோனியாஜியும் களத்தில் குதித்தார்!! சரியான போட்டி – உலகத் தமிழர்களே பார்த்து ரசியுங்கள்!!! ம.செந்தமிழ்"

Permissions in this forum:
You cannot reply to topics in this forum