Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
யாரறிவார் வன்னிப் பெருந்துயரை...!
போர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
யாரறிவார் வன்னிப் பெருந்துயரை...!
யாரறிவார் வன்னிப் பெருந்துயரை...!
********************************
1. இராணுவத் தேரும், அரசியற் குதிரையும், இராஜதந்திரப் பாகனும்.
'அனைத்தும் அரசியலுக்கு கீழ்ப்பட்டவை. எல்லாவற்றையும் அரசியலாகப் பார்'
என்று அரசியல் பற்றி தத்துவஞானி ஒருவரால் கூறப்பட்ட மகுட வாக்கியம் அரசியல்
நுழைவாயிலுக்கான அகரமாய் உள்ளது.
யுகம் கடந்த விஞ்ஞானியான அயன்ஸ்
ரீனே அணுகுண்டின் பிதாமகனாய் இருந்த போதிலும், அணுகுண்டைப் பிரயோகிப்பது
பற்றிய தீர்மானத்தை அரசியல்வாதியே எடுக்கின்றான். எப்படியோ விஞ்ஞானம்
அரசியலுக்கு கீழ்ப்பட்டும், கட்டுப்பட்டுமே இயங்க வேண்டியுள்ளது.
'சட்டிக்குள் மசியும் கீரைக்குள்ளும் அரசியல் உண்டு' என்ற வாக்கியம்
மிகவும் கருத்துக்கு எடுக்கப்படக் கூடியது. அதாவது கீரைக் கறிக்குள் அரசின்
வரியிருக்கின்றது. நிலவரி தொடக்கம் தானிய வரி உட்பட சந்தை வரியீறாக
கீரைக்குள் அரசியல் இருப்பதைக் காணலாம். பிறப்புப் பதிவது தொடக்கம்
இறப்புப் பதிவது வரை, மணம் செய்வது தொடக்கம் பிரசவிப்பது வரை, வாழ்வு
அரசியற் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டிருப்பதையே காணலாம். ஆதலால் எதனையும்
அரசியலாகப் பார்க்கும் அணுகு முறை எதிலும் தலையாயது.
விஞ்ஞானமாயினும் சரி, இராணுவமாயினும் சரி அவை எதுவும் அரசியற்
தீர்மானத்திற்கு கட்டுப்பட்டவையாகும். நடந்து முடிந்த தமிழின வன்னிப்
பேரழிவை வெறுமனே இராணுவ அர்த்தத்தில் புரிந்து கொள்ளாமல், அதிகம் அரசியல்
அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள அரசின் வெற்றி ஓர் இராணுவ
வெற்றியல்ல. உண்மையில் அது சிங்கள அரசின் ஓர் அரசியல் இராஜதந்திர வெற்றியே
ஆகும். அவர்களது இராணுவ வெற்றியானது அவர்கள் தடம் அமைத்த அரசியல்
வியூகத்துள் நிகழ்ந்த வெற்றியாகும்.
பார்வைக்கு சிங்கள அரசின்
வெற்றி இராணுவ வெற்றி போல் தோன்றினாலும், உண்மையில் அது அவர்களுக்கோர்
அரசியல் வெற்றியாகவும், தமிழர் தரப்புக்கோர் அரசியல் தோல்வியாகவுமே
அமைந்துள்ளது. இராணுவத் தேரை சிங்களத் தலைவர்கள் அரசியற் குதிரை பூட்டி
இராஜதந்திர சாரியால் சவாரி செய்துள்ளார்கள். பார்வைக்கு தேர் வென்றது போல
தோன்றினாலும், உண்மையில் குதிரையின் பாய்ச்சலே பிரதானமானது. மகாபாரத
யுத்தத்தில் கிருஷ்ணர் தனது அக்குரோணி சேனைகள் அனைத்தையும் துரியோதனனிடம்
கொடுத்துவிட்டு, தான் மட்டும் தேரோட்டியாய் பாண்டவர் பக்கம் நின்றதாகக்
கூறப்படும் அந்த ஐதீகக் கதையில் அரசியல் அர்த்தம் இருக்கின்றது. இக்கதை
வரலாறு அல்லாத ஓர் ஐதீகமேயாயினும் இதன் அரசியல் அர்த்தம் கவனத்திற்குரியது.
தேர்ச் சாரதியின் பக்கமே வெற்றி பெற்றதாக கதை முடிகிறது.
சிங்களத் தலைவர்களிடம் பிரபாகரன் மட்டும் தோற்கவில்லை என்றும், பல
நூற்றாண்டுகளாக தமிழ் தலைமைகள் அனைத்துமே தோல்வியடைந்து வருகின்றன என்றும்
கூறப்படுவதுண்டு. இராமநாதன்கள் முதல் செல்வநாயகங்கள் ஈறாக பிரபாகரன்கள் வரை
தொடர்ந்து ஈழத்தமிழர் தோல்வியடைந்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டு வரும்
பிரபலமான அரசியல் கூற்றானது அதிகம் கருத்தில் எடுக்கத் தக்கதாகும்.
'காலில் கல்லடித்து விட்டது என்பதை விடவும், கால் கல்லுடன் மோதிவிட்டது'
என்று கூறுவதன் மூலம் காயத்திற்கான தன் பக்க நியாயத்தை கண்டறியும்
அணுகுமுறையை கருத்தில் எடுத்தலும் அவசியம்.
எம்மத்தியில் நிகரற்ற
வீரம் வெளிக்காட்டப்பட்டது, அளப்பெரிய தியாகம் புரியப்பட்டது, சொல்லிடவியலா
அர்ப்பணிப்பும் காணப்பட்டது. ஆயினும் எம்மைச் சிங்கள அரசே நூற்றாண்டுக்
கணக்காய் வெற்றி கொள்ளும் வரலாறு நீடிக்கிறது. எமது தலைமுறையில் இதற்கு ஒரு
முடிவு கட்டியாக வேண்டும்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வல்ல,
இராணுவத்தீர்வே இறுதியானது எனக் கூறியோர் அரசியல் வியூகத்தால்
சுற்றிவளைத்து இராணுவச் சப்பாத்துக்களுக்குள் தமிழரைக் கொண்டு
வந்துவிட்டார்கள். குதிரையின் முதுகில் ஏறியிருந்து அதன் தலையைத் தடவி
சவாரி செய்வது போல் இப்போது தமிழரின் முதுகில் ஏறிநின்று தலையைத்
தடவுகிறார்கள். இராணுவச் சப்பாத்துக்களையே தமிழருக்கு பானம் பண்ணுவதற்கான
பாத்திரமாக கையளிக்கிறார்களே தவிர, கௌரவமான வேறு எவ்வகைத் தங்க, வெள்ளி
பாத்திரங்களையும் தீர்வாக கையளிக்கப் போவதில்லை.
வன்னித் தமிழனப்
படுகொலை யுத்தத்தில் 90,000 மக்களைக் காணவில்லை. 2006 ஆம் ஆண்டில் யுத்தம்
தொடங்கிய போது அங்கு 3,80,000 பேர் இருந்ததாக அரசாங்க உத்தியோகபூர்வ
அறிக்கைகள் கூறுகின்றன. இதனை பல அரசாங்க உயர் அதிகாரிகள்
உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் யுத்தம் முடிந்து தடுப்பு முகாமில் 2,70,000
பேர் இருப்பதாக அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. பின்பு 2,61,000
பொதுமக்களும், 11,000 சரணடைந்த போராளிக் கைதிகளும் இருப்பதாக இறுதியாக
அறிவித்தது. அதாவது தடுப்பு முகாங்களில் இருந்து பின்பு பிடிக்கப்பட்ட
இளைஞர், யுவதிகள் தொகையுடன் இத் தொகை இவ்வாறு அறிவிக்கப்பட்டது.
சரணடைந்த போராளிகளுள் ஒரு பெரும் தொகையினர் வன்னியின் கணக்குக்கு வெளியிலே
இருந்து ஏற்கனவே இணைந்து போராளிகளாய் இருந்தோரும் அடங்குவர். எப்படியோ
3,80,000 பேருக்கு நாம் கணக்குக் கண்டாக வேண்டும். எஞ்சி இருக்கும்
2,70,000 பேருக்கும் அப்பால் (போராளிகள் தொகை உள் நீங்கலாகவோ அன்றி புற
நீங்கலாகவோ என்ற சர்ச்சை ஒரு புறம் இருக்கட்டும்) 1,10,000 பேருக்கு
கணக்குக் கண்டாக வேண்டும். இதில் குறைந்தது 90,000 பொது மக்கள்
கொல்லப்பட்டுவிட்டனர் என்ற அபாயகரமான கணக்கு எமக்கு தெரியவரும். இன்றைய
தகவல் யுகத்தில் படுகொலை செய்யப்பட்வர்களது சரியான தொகையை கண்டறிவதில்
கஸ்டம் இருக்க மாட்டாது.
சமாதான காலத்தில் கட்டுமானப்பணி,
நிர்வாகப்பணி போன்ற பணிகளின் அடிப்படையில் வன்னிக்கு வேலை தேடி
வந்தவர்களும், அவர்களது குடும்பங்களும் என ஒரு பெரிய தொகையின் கணக்கு
உள்ளது. இத்தொகையினர் எத்தகைய அரசாங்கப் பதிவுகளிலும் இல்லை. மேலும்
பிள்ளைகள் இயக்கத்தில் போராளிகளாக இருப்பதன் பெயரில் வன்னிக்கு வெளியே
இருந்து உள்வந்தோரும், இராணுவ அச்சுறுத்தலுக்கு அஞ்சி அவ்வாறு உள்வந்தோரும்
என அரச பதிவுக்குட்படாத இன்னொரு தொகையினரும் உண்டு.
மேலும்
படுகாயம் அடைந்திருப்போர், வீட்டுக்கு வீடு மரணமடைந்திருப்போர், தம்
சொத்துக்களையும் குடியிருப்புக்களையும் இழந்திருப்போர் என பாதிப்பின்
பரிதாபம் வன்னிக்குள் நீடிக்கும் அதேவேளை வன்னிக்கு வெளியே உள்நாட்டிலும்,
வெளிநாட்டிலும் வாழ்வோர் வன்னியில் மாண்டு போன தமது சொந்தங்களால் துயருறும்
அளவும் கருத்திற்கெடுக்க வேண்டிய பெரும் கணக்குகளாகும். அதாவது வன்னிப்
படுகொலையால் பாதிக்கப்படாதவன் என்று ஒரு தமிழன் இருக்க முடியாத அளவிற்கு
வன்னிப் படுகொலையின் கொரூரம் அமைந்துள்ளது.
சிங்கள அரசியல்
கலாச்சாரத்தின் படி தமிழ் மக்களுக்கு எந்தவித நியாயமான தீர்வையும்
அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அரசியல் மதிப்பீட்டில் கலாச்சாரத்தின்
வலிமை முக்கியமானது. இந்தியாவின் கருவியாக தமிழரைப் பார்ப்பதன்
வெளிப்பாடாகவே தமிழருக்கு எதிரான சிங்கள இனவாத அரசியல் காணப்படுகிறது. எனவே
சிங்கள அரசியல் கலாச்சாரம் என்பது இந்திய எதிர்ப்பின் அடிப்படையிலான
தமிழின எதிர்ப்பாக உள்ளது. இந்த வகையில் தமிழரை ஏமாற்றுவதை, தமிழரைத்
தோற்கடிப்பதை, தமிழரை அழிப்பதை தமது அரசியற் கலாச்சாரமாக சிங்கள இனவாதிகள்
கொள்கின்றனர். ஆதலால் அவர்களிடம் இருந்து தமிழர்கள் தமக்கு உரியதான
உரிமைகள் எதனையும் ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது. சிங்கள தலைவர்களிடம்
இருந்து நன்மையை எதிர்பார்ப்பதானது கண்களை கறுப்புத் துணிகளால் இறுக்கிக்
கட்டிக் கொண்டு வானவில்லை ரசிப்பதற்கு ஒப்பானது. இது ஈழத்தமிழருக்கு
மட்டுமல்ல இந்திய அரசுக்கும் பொருந்தும்.
இருப்பதில் இருந்துதான்
அடுத்ததைத் தேடவேண்டும் என்பதற்கு இணங்க இராஜதந்திர அணுகுமுறைகளை நாம்
நிராகரிக்கப் போவதில்லை. ஆதலால் சிங்களத் தலைவர்களிடம் எதையாவது
எதிர்பார்ப்பதாயின் மேற்கண்ட விளக்கமும் அதற்கு பின்னணியாய் இருக்க
வேண்டியது அவசியம். எமது மக்களை ஆயிரக்கணக்கான ஆண்டு கால தோல்வியில்
இருந்து விடுவிக்க நாம் நல்மனத்துடனும், ஐக்கிய உணர்வுடனும், ஜனநாயக
எண்ணங்களுடனும் பரந்துபட்ட மனித நேயச் சிந்தனையுடனும் செயற்பட வேண்டியது
அவசியம்.
2. புள்ளிவிபரங்கள் இரத்தம் சிந்தாது
வன்னி
மண்ணுக்கென ஒரு தனிமிடுக்கு வரலாற்றில் உண்டு. 1995 ஆம் ஆண்டு 'றிவரஷ'
இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து யாழ்ப்பாண மக்களும், மட்டக்களப்பு மக்களும்
வன்னி மண்ணில் வன்னி மாந்தருடன் சங்கமிக்கத் தொடங்கினர். அந்த
சங்கமிப்பில் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்கள்
திரண்டு இலட்சக் கணக்கில் வன்னி மக்கள் என அழைக்கப்படலாயினர். இந்த மக்களே
ஒன்றரை தசாப்த காலமாய் யுத்தத்திற்கு நேரடியாய் முகங்கொடுப்போர் ஆயினர்.
வெளியுலகில் இருந்து பிரித்து அறுக்கப்பட்ட வன்னிக்கு உலகம்
இருண்டிருந்தது. வெளியுலகின் கண்ணிற்கு ஒரு பாதாள உலகாய் அது
காட்சியளித்தது. நெருக்கடிகள், துன்பங்கள், இழப்புக்கள்,
அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் என்பனவற்றிற்கு மத்தியில் எதிர்காலம் பற்றிய
நம்பிக்கைக் கீற்றுடன் மக்கள் வாழ்ந்தனர்.
அரசு பொருளாதாரத்
தடைகளை விதித்தது. வெளியுலகத்துடன் வன்னிக்கான தொடர்புகளை அறுத்தது.
மருந்தில்லை, உரிய உணவில்லை, கல்வியில்லை, அறிவியல் கதவுகள் அனைத்தும்
மூடப்பட்டன. வெறுமனே ஜீவாதார வாழ்வுக்கான அரிசி, பருப்பு என்பவற்றுடன்
வன்னியின் கால்நடைகளும் மக்களைத் தக்கவைத்தன. அனைத்து சுமைகளும் மக்களின்
தலைகள் மேல் சுமத்தப்பட்டன. எல்லாத் துயரங்களும் மக்களுக்கே என்ற நிலை
ஏற்பட்ட போதிலும் மக்கள் சளையாது துயரத்திற்கு முகம் கொடுத்தனர்.
வன்னி அடையாள அட்டை என்றாலே அவர்கள் பாவக்கிரகத்து தீண்டத்தகாத மக்கள் என
அரசு முத்திரை குத்தியது. உணவுத் தடையாலும், பொருளாதாரத் தடைகளாலும்,
மருத்துவத் தடைகளாலும் மற்றும் பெரும் இயற்கை நோய்களாலும் துயரத்திற்கு
தள்ளப்பட்ட மக்கள் மீது விமானக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. எறிகணைகள்
மக்களை பதம் பார்த்தன. இராணுவ நடவடிக்கைகள் மக்களை ஊர்விட்டு ஊர் துரத்தின.
மரணம் வீட்டுக்கு வீடு தவறாது நிகழ்ந்தது.
போராளிகளாய் பிள்ளைகள்
யுத்தகளத்தில் சமராடினர். பெற்றோரும் மற்றோரும் யுத்தகளங்களில்
பதுங்குகுழி அமைப்போராய் எந்நேரமும் மரணத்தை தழுவுவோராய் காணப்பட்டனர்.
இத்தனை துயரங்களின் மத்தியிலும் அவர்கள் மனம் சலிக்கவில்லை.
தாங்க
முடியாத பொருளாதார சுமைகளும், யுத்த சுமைகளும் அவர்களின் முதுகை ஒன்றரை
தசாப்தமாய் அழுத்திக்கொண்டே இருந்தது. குறைந்த வளத்துடனும் இத்துணை
நெருக்கடிகளுடனும் மக்கள் வாழ்ந்த போதிலும் அவர்கள் அன்புக்கு
குறைவற்றோராய் இலட்சியப் பற்றுமிக்கோராய் போராட்டத்தை நேசிப்போராய்க்
காணப்பட்டனர்.
முழுத் தமிழீழ மக்களின் போராட்டச் சுமையையும்
வன்னியில் வாழ்ந்த 4,00,000 மக்களே பெரிதும் சுமந்தனர். சிங்கள
ஆட்சியாளர்கள் தாம் கொண்டிருந்த முழு அளவிலான இந்திய எதிர்ப்பையும், தமிழின
எதிர்ப்பையும் 4,00,000 வன்னிமக்கள் மீதே முழுமையாய் பிரயோகித்தனர்.
வன்னியின் வீழ்ச்சி தமிழரின் வீழ்ச்சியாயும், தமிழரின் வீழ்ச்சி
எதிர்காலத்தில் இந்தியாவின் வீழ்ச்சியாகவும் அமையக்கூடிய அபாயம் உண்டு.
இவ்வாறு புரிந்துகொண்டால் வன்னி மக்கள் இப்பிராந்தியத்தின் சமாதானத்தையே
தம் முதுகில் சுமந்திருக்கிறார்கள் என்ற உண்மையை வரலாறு எதிர்காலத்தில்
தெரிந்து கொள்ளும். இக்கருத்துப் பின்னணியில் வன்னிப் படுகொலையை நாம்
பார்க்க வேண்டும்.
கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களையும்,
ஒன்றரைத் தசாப்தமாய் தொலைந்து போன அவர்களது வாழ்வின் வசந்தங்களையும்,
மறைந்து போன பிஞ்சுகளையும், இளசுகளையும் அவர்களின் அபிலாசைகளையும் புரிந்து
கொள்ள எமக்கு ஓர் இதயம் வேண்டும். 'புள்ளிவிபரங்கள் இரத்தம் சிந்தாது'
என்ற கூற்றுக்கிணங்க புள்ளிவிபரங்களைக் கடந்து துயரங்களைப் புரிந்து
கொள்ளக் கூடிய ஒரு மனமும் அதற்கான ஒரு பண்பட்ட உள்ளமும் வேண்டும்.
எல்லா வெற்றிக்கும் தளமாய் அமைந்தவர்கள், எல்லாச் சுமையையும் முதுகில்
சுமந்தவர்கள், தோல்வியின் வாயில் இரையாய்ப் போயினர். யாரறிவார் வன்னி
மண்ணின் பெரும் துயரை....!
3. சிங்கள இராணுவத்தின் பாலியல் சுகபோக முகாம்.
யாராலும் இதுவரை முக்கியத்துவப்படுத்தப்பட்டிராத சிங்கள இராணுவத்தின்
செயல் திட்டம் ஒன்று இங்கு கவனத்திற்குரியது. பெண் போராளிகளை உயிருடன்
கைப்பற்றுவதும், அவர்களை சிங்கள இராணுவத்தினரின் பாலியல் தேவைக்கு
பலாத்காரமாய் பயன்படுத்துவது என்பதுமே அத்திட்டமாகும்.
இரண்டாம்
உலக மகா யுத்த காலத்தில் தாம் வெற்றி கொண்ட இடங்களில் பெண்களை கைது செய்து
தமது இராணுவத்திற்கான சுகபோக முகாங்களை யப்பானிய இராணுவம் அமைத்துக்
கொண்டது. இதுவரை இது உலகில் மிகப் பெரும் கண்டனத்திற்குரிய மனிதாபிமான
பிரச்சினையாய் உள்ளது. (Japanese military comfort women) [You must be registered and logged in to see this link.].
அதனைவிடவும் மோசமான முறையில் 21ஆம் நூற்றாண்டில் சிங்கள பௌத்த இராணுவம்
தமக்கென சுகபோக முகாம் திட்டம் ஒன்றைச் செயற்படுத்தியுள்ளது.
காவல் கொட்டில்களிலும், எல்லைக் காவல் நிலையங்களிலும், யுத்த களங்களிலும்
மற்றும் சுற்றி வளைப்புகளிலும் பெண் போராளிகளை இராணுவம் தமது இராணுவ
உத்திகளைப் பயன்படுத்தி உயிருடன் பிடிப்பதில் அக்கறையாய் இருந்துள்ளது.
அவ்வாறு பிடிக்கப்படும் பெண்களை முழு நிர்வாணமாகவே எப்போதும் அவர்கள்
வைத்திருந்துள்ளனர்.
பெண் போராளிகளை இவ்வாறு அவர்கள் பிடித்ததும்,
தாம் பலாத்காரம் புரியப்போகும் செய்தியை எல்லையில் இருக்கும் ஏனைய ஆண்
போராளிகளுக்கு அறிவித்துவிட்டு அவர்களது வோக்கிரோக்கியில் கேட்கக்
கூடியவாறு பெண்கள் மீது பலாத்காரத்தைப் புரிவார்கள். அப்போது பெண்களின்
அந்த அலறல் ஒலிகளை ஆண் போராளிகளுக்கு வோக்கிரோக்கி வாயிலாக கேட்கச்
செய்துவிட்டு தமது அட்டகாசமான வார்த்தைப் பிரயோகங்களை சிங்களத்திலும்,
தெரிந்த தமிழிலும் பேசிக்காட்டுவார்கள். அவ்வாறு இராணுவத்தினர் பேசும்
போதும் இழிவான வார்த்தைகளையும், தமது குதூகலத்தையும் வெளிப்படுத்துவது
வழக்கம்.
இரட்டைவாய்கால் படுகொலைக் காலத்தில் படகின் மூலம்
தப்பியோடிய போது ஒரு போராளியின் மனைவி படையினரால் பிடிக்கப்பட்டார்.
அப்பெண்ணை பற்றிய ஒரு நேர்முகப் பாலியல் வர்ணனையை வானொலியில் துடுப்பாட்ட
வர்ணனை (commentary) சொல்வது போல கொச்சைத் தமிழில் வோக்கி வாயிலாக படையினர்
செய்தனர். வன்னி வாய் பேசத் தொடங்கும் போது இத்தகைய கொரூரங்கள் மேலும்
மேலும் வெளிவரும். இராணுவத்தினரே தமது ரசிப்புக்காக இவற்றை ஒளிநாடாக்களாக
வைத்துள்ளதுடன் இவற்றை அவர்கள் வெளியிலும் பரவவிட்டுள்ளார்கள்.
பூலான்தேவியை தாகூர்கள் தமது வீட்டில் நிர்வாணமாக பணியாற்றச் செய்தது போன்ற
சில சம்பவங்களை மட்டும் கேட்டு கண்ணீர் விட்ட எமது இதயங்கள் எமது தமிழ்
பெண்களுக்கு நடந்திருக்கும் வெளிவராத இக்கதைகள் வெளிவரும் போது ஒரு
பூலான்தேவியென்ன அதைப் போல் ஆயிரக்கணக்கான பூலான்தேவிகளை நாம் கண்ட துயரம்
எமது மனங்களில் வடுவாய் வளரும். யாரெல்லாம் இதற்கு பதில் சொல்வார்கள்?
புனைகதைகளும், கற்பனைத் திரைப்படங்களும் கண்டிராத பெரும் பாலியல்
கொடுமைகளும்; சித்திரவதைகளும் பௌத்தம் பேசும் இலங்கைத் தீவில் ஈழத்தமிழ்
பெண்கள் மீது அரங்கேறியுள்ளன. ஊடகவியலாளர்களும், தகவல்பட
தயாரிப்பாளர்களும், புலனாய்வு நிபுணர்களும், அறிவியல் ஆய்வாளர்களும், மனித
உரிமை ஆர்வலர்களும் முனைப்புடன் ஈடுபட்டு இத்தகைய மனித குல விரோத பாலியல்
கொடுமைகளையும், அநாகரிகங்களையும் வெளிக்கொணரும் காலம் வெகு தூரத்தில்
இருக்காது என்று நீதி நியாயத்தின் பெயராலும், தர்மத்தின் பெயராலும்,
ஜனநாயகத்தின் பெயராலும் நம்புவோமாக.
சொல்லியழ எவருமின்றி!
யுத்தத்தின் சுமையை கிழக்கும், வன்னியும் பெரிதும் சுமந்தன. கிழக்கு
விதவைகள் நிறைந்த பூமியாய் மாறியது. வீட்டுக்கு வீடு கொல்லப்பட்ட
குடும்பங்களாய் முதலில் கிழக்கு மாறியது. இராணுவம் அதிகம் வாய் வைத்ததும்,
கடித்து குதறியதும் முதலில் கிழக்கைத்தான். யுத்தத்தின் முழு வடுக்களும்
கிழக்கில் படிந்திருந்தது. எதிரி கிழக்கைக் குறிவைத்து என்னவெல்லாம் செய்ய
முடியுமோ அத்தனையும் செய்து முடித்தான்.
அடுத்து எதிரியின் கவனம்
வன்னி மண்ணில் பாய்ந்தது. தமிழீழத் தேர் வன்னி மக்களின் முதுகில் உலகை வலம்
வந்தது. பின்னாளில் ஈழப் போரின் முழுச் சுமையையும் வன்னி மக்கள் முதுகில்
சுமந்தனர். இலட்சியத்திற்காக உயிர், பொருள், உடமை, உழைப்பு, எண்ணம்,
உணர்வு, சிந்தை, செயல், பந்தம், பாசம், அனைத்தையும் அம்மக்கள்
ஈழப்போரட்டத்திற்கு ஆகுதியாக்கினர்.
எதிரியோ தனது அனைத்து
வளங்களையும் மஹிந்த சிந்தனையின் பெயரால் ஒருங்கு திரட்டி உலகை அரவணைத்தும்,
வன்னியை தனிக்கப்பிடித்தும் தனது கோரப் பற்களை வன்னியின் மீது
கவ்வவிட்டார். தனது அறிவையும், ஆற்றலையும், சூழ்ச்சியையும், தந்திரத்தையும்
கொண்டு, உலகை தன் கையில் கதாயுதமாய் ஏந்திய எதிரி, அப்பாரிய கதாயுதத்தால்
வன்னி மண்ணை ஓங்கி உதைத்தார். மண்ணும் மக்களும், பயிர்களும் உயிர்களும்,
காடும் வயலும், பொன்னும் பொருளும், ஊரும் பெயரும் என அனைத்தையும் எதிரி தன்
யுத்தத் தேர்க்காலுக்கு இரையாக்கினார். வன்னி மக்கள் தேர்க்காலில்
சிதைந்து ஊர முடியாத அட்டைகளாய் நசியுண்டு இழுபட்டனர்.
சொந்தங்களை
இழந்தனர். பந்தங்களையும் பாசங்களையும் இழந்தனர். சொத்துக்களையும்
பத்துக்களையும் இழந்தனர். பத்து என்பதில் மானமும், மரியாதையும் தமிழர்
ஏற்றிப் போற்றும் அனைத்து விழுமியங்களும் அடங்குகின்றன. எதிரி தன் கோரப்
பற்களை பாலியல் பலாத்காரத்தில் தெளிவாக பதித்துக் கொண்டான்.
மேலங்கிக்காக போராடப் புறப்பட்டு, கோவணத்தையும் பறிகொடுத்த கதையாய் தமிழ்
மக்களின் துயரம் உள்ளது. இதில் வன்னிமக்களின் துயரம் உச்சாணிக் கொம்பாய்
காட்சியளிக்கிறது. வன்னி என்பது ஒரு நிலநூல் சொல்லாக மட்டுமன்றி, தமிழீழப்
போராட்டத்தின் ஒரு குறியீட்டுப் பதமாகவும் மாறிய சொல் அது. தமிழீழம் எனும்
இலட்சியத்தையும், உலகத் தமிழினத்தின் கனவையும் காவிநின்ற மண்ணாயும்,
மக்களாயும், பதமாயும் வன்னி அமைந்தது.
கடித்துக் குதறப்பட்ட அந்த
மக்கள் இன்று எதிரியின் காலடியில் வீழ்ந்து கிடப்போராய், கைவிடப்பட்டோராய்,
அன்னியர்களின் தயவுக்கு கையேந்தி நிற்போராய் காட்சியளிக்கின்றனர். இந்த
மக்களின் துயரத்தை வரலாறு சரிவரப் பதிவுசெய்ய வேண்டும். எல்லாத் துயரும்
அவர்களுக்கே என்று எழுதி வைத்தாற் போல, துயரப்பட்ட அந்த மக்களை நோக்கி,
எல்லாக் கவனமும் அந்த மக்களுக்கே என்று முதலில் நாம் எமது வளங்கள்
அனைத்தையும் அங்கு திருப்ப வேண்டும்.
'சுவர் இருந்தாற்தான்
சித்திரம் வரையலாம்'. சிதைக்கப்பட்டிருக்கும் கிழக்கையும், வன்னியையும்
கவனத்தில் எடுத்து அவர்களுக்கான வேலைத்திட்டத்தை முதலில் வகுப்பதே தமிழீழப்
போராட்டத்தின் தலையாய பணியாய் தற்போது அமைய வேண்டும்.
வன்னிப்
பெருந்துயரை எப்படிப் பதிவது. அது ஏடு தாங்காப் பெருந்துயரம். கடலாலும்,
காட்டாலும், இராணுவ வேலியாலும் சுற்றி மூடிக் கட்டப்பட்டிருந்தவர்கள் வன்னி
மக்கள். இத்தகைய ஒரு கூட்டுக்குள் இருந்தும் அவர்கள் கூவத் தவறவில்லை.
போரட்டத்திற்காக அனைத்துக் கடப்பாடுகளையும் அவர்கள் ஏற்றார்கள். எதிரியின்
அனைத்துவகைத் திணிப்புகளையும் சுமந்தார்கள். எதிரியின் அனைத்து வகை
பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் தமது பொருளாதாரத்தைப் போராட்டத்திற்கு
ஈய்ந்தளிக்க அவர்கள் தயங்கவில்லை. தங்கள் தலைப் பிள்ளைகளை போராட்டத்திற்கு
உரமாக்கினார்கள். விரும்பியும், விரும்பாமலும் போராட்டத்திற்கான
ஆள்பற்றாக்குறைக்கு அவர்கள் தம் பிள்ளைகளை மேலும், மேலும் கொடுக்க
நேர்ந்தது. எல்லாவற்றையும் இலட்சியத்துக்காகவே சுமந்தார்கள்.
பிள்ளைகள் மட்டும் களங்களில் நின்று போராடினார்கள் என்றில்லை. எல்லா
வகையிலும் அவர்கள் போராட்டத்திற்கு முதுகு கொடுத்தார்கள். இயக்கம் அழைப்பு
விடுத்த அத்தனை படைகளுக்கும் முது வயதிலும் அவர்கள் பங்காளியானார்கள்.
அதிகாலையில் முதியவர்கள் ஆண், பெண் வேறுபாடிறின்றி கொட்டனுடன் பயிற்சி
எடுக்கும் காட்சிகளை மனித குல வரலாறு வன்னி மண்ணிற்தான் பதிவு
செய்திருக்கிறது என்பதை எமது கண்கள் காணத் தவறக்கூடாது. பிள்ளை
போர்க்களத்தில், தாயோ பயிற்சிக் களத்தில் என வரலாறு நகர்ந்தது.
இத்தனை தியாகங்களையும் செய்த இந்த மக்களின் முதுகெலும்பில் ஓடிய இந்தப்
போராட்டம் ஏன் தோல்வி கண்டதென்பது ஒரு துயரமான கேள்வி. எங்கள் கண்களை
நாங்களே துடைத்துக் கொண்டு, ஏன் தோல்வி கண்டோம்? ஏன் குற்றுயிராய்க்
கிடக்கிறோம்? இனி எப்படி எழும்பி நடக்கப் போகிறோம்? போன்ற கேள்விகளை நாம்
தவறாமல் கேட்டு, எம்மை நாம் சுதாகரிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு
நான் நேரில் கண்ட ஒரு நிகழ்வை இங்கு கூறுகிறேன். புதுக்குடியிருப்பு
நோக்கிப் போகும் A 32 வீதியது. ரெட்பானா கழிந்து, புதுக்குடியிருப்பு
நோக்கி போகும் அந்த வீதியில் உள்ள தேராவில் குளம் வீதியை முற்றிலும் மேவிப்
பாய்கிறது. போக்குவரத்து அவ்விடத்தில் முற்றிலும் தடைப்பட்டுப்
போய்விட்டது. காட்டுக்குள்ளால் ஒரு புதிய பாதையை சில தினங்களுக்குள்
அமைத்து முடித்தாயிற்று. ஆனால் பாதை சேறும் சகதியும், முள்ளும் தடியும்
நிறைந்ததாய் உள்ளது. அப்போதும் இராணுவம் தமது எறிகணைகளை கண்துஞ்சாது
வீசிக்கொண்டிருக்கிறது.
புதுக்குடியிருப்புப் பக்கமிருந்து
காட்டுப் பாதையினால் எனது உறவினரைத் தேடி வந்து கொண்டிருக்கிறேன். அப்போது
காட்டுப்பாதை கடந்து குளம் மூடியுள்ள விளிம்பு வீதியில் ஏறுகிறேன். அந்த
வேளை வீதியைக் குளம் மூடியிருக்கும். அந்த விளிம்பில் குந்தியவாறு, 40 வயது
மதிக்கத்தக்க ஒருவர் அழுத வண்ணம் இருக்கிறார். நான் அவரை அணுகுகிறேன்.
அவரது தோளில் கையை வைத்தவாறு அவரை வினவுகிறேன்.
அப்போது அவர்
பெரிதாக அழத்தொடங்கினார். அழுது கொண்டு ஆற்றவியலாத் தன் கொடிய துயரை
நைய்ந்த குரலில் சொல்லத் தொடங்குகிறார். ரெட்பானா பிரதேசத்ததின்
முற்பகுதியில் அவர் குடியிருந்தார். எறிகணை வீச்சில் இருந்து தப்புவதற்காக
அங்கு மக்கள் இடம் பெயரத் தொடங்கினர். அதில் இவரது குடும்பமும் ஒன்று.
அவ்வாறு இவரது குடும்பம் ஓடி வந்து கொண்டிருந்த போது அகோர எறிகணைவீச்சு
நிகழத் தொடங்கியதால், வீதியோரத்தில் ஏற்கனவே புலம் பெயர்ந்த ஒரு
குடும்பத்தின் வீடு இருந்தது. அந்த வீட்டுக்குள் ஒரு சிறிய பதுங்குகுழி
இருந்தது. அப் பதுங்கு குழிக்குள் தாயும், தந்தையும், மூன்று பிள்ளைகளும்
என இக்குடும்பம் பதுங்கிக் கொண்டது.
சிறிது நேரம் கழிந்ததும்
பதுங்குழியில் இருந்த ஒரு பிள்ளை தண்ணீர் கேட்டது. தகப்பன் அவ்வீட்டுக்
கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்றார். அவ்வேளை ஓர் எறிகணை அந்த சிறிய
பதுங்கு குழியின் மீது வீழ்ந்து வெடித்தது. தந்தை ஓடி வந்தபோது தாயும்,
மூன்று பிள்ளைகளும் அச்சிறிய பதுங்கு குழியில் துடிதுடித்து இறந்தனர்.
தந்தை பின்வருமாறு சொன்னார். 'எனது கையால் எனது மூன்று பிள்ளைகளையும்,
எனது மனையையும் அந்த பங்கருக்குள் மூடிப்போட்டு வந்திருக்கிறேன். எப்படி
ஐயா நான் தாங்குவேன். கொடிய கடவுள் என்னையேன் கொல்லவில்லை?'
மரணச்சடங்கு எதுவுமின்றி, கூட நிற்பார் யாருமின்றி, சொல்லியழ எவருமின்றி மூன்று பிள்ளைகளுக்கும், தாய்க்குமான புதைகுழி மூடப்பட்டது.
ஆனால், சில வாரங்களின் பின்பு, புதைப்பார் அற்று கைவிடப்பட்ட நிலையில்
ஆங்காங்கே பிணங்கள் அநாதரவாய் கிடந்த காட்சியைக் கண்ட போது
புதைக்கப்பட்டோர் பாக்கியவான்களோ! என்று மனம் வியந்தது.
யாருக்காக யார் அழுவது?
'ஏமாந்துவிட்டோம் - எதிரி எம்மை ஏமாற்றிவிட்டான்' என்று காலத்துக்கு காலம்
தமிழ்த் தலைமைகள் தமிழ் மக்களுக்கும், உலகிற்கும் கூறிவருவது வழக்கம்.
ஆனால் தொடர்ந்து ஏமாறுகிறோம் என்றால் தவறு எதிரியிடம் அல்ல - எம்மிடந்தான்
இருக்கிறது.
இலட்சிய வேட்கையுடன் எழுவதும், பின்பு எதிரியின்
காலடியில் மூச்சையற்று வீழ்வதும் எமது வரலாறாய் உள்ளது. கானல் நீரை வானத்து
தேவதைகளாக எண்ணி முன்பின் பாராது ஓடிப் போவதும், பின்பு கையறு நிலையில்
வெட்கித் தலைகுனிவதும் எமது அரசியல் வாழ்வாய் தொடர்கிறது.
குறைவற்ற இலட்சியப் பற்றும், அளவற்ற தியாகமும், நிகரற்ற அர்ப்பணிப்பும்
நிரம்பிய மக்கள் நாம். ஆனால் தோல்வியையும், வேதனைகளையும், தலை
குனிவுகளையும் தவிர வரலாற்றில் இதுவரை வேறு எதனையும் அறுவடை செய்ததில்லை.
வீழ்ச்சிக்கும், தோல்விக்கும், துயருக்கும், இழப்புக்கும் பின்பு நாம்
அதற்கான உண்மைகளைக் கண்டறிவதற்குப் பதிலாக எதிரியை திட்டித் தீர்ப்பதிலும்,
விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்று வரட்டு வியாக்கியானம் அளிப்பதிலும்
அளப் பெரிய நேரத்தையும், சக்தியையும் செலவழிக்கின்றோம்.
நாங்கள் ஏன் காலம் காலமாய் தோற்கிறோம்?
ஏன் எதிரிகளின் காலடியில் கதியற்று வீழ்கிறோம்?
எங்கள் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் ஏன் வீண் போகின்றன?
ஏன் எந்த வெற்றியையும் அடையவோ அன்றி, அடைந்தவற்றைத் தக்க வைக்கவோ முடியாதவர்களாய் இருக்கிறோம்?
தோல்விகளுக்கான பொறுப்புக்களை எதிரியில் சுமத்துவதா?
அல்லது நாங்கள் ஏற்பதா?
யார் பொறுப்பு?
இத்தகைய கேள்விகளுக்கு நாம் நியாயபூர்வமாகவும், நாகரீகமாகவும் பதில் காணத்
தவறுவோமேயானால் தோல்விகளை இன்னும் நூற்றாண்டுக் கணக்கில் காவிச்செல்ல
நேரும். அதற்காக வரலாறு எம்மை எள்ளி நகையாடும்.
வன்னிப்
படுதோல்வியும், வன்னி இனப்படுகொலைகளும் 21 ஆம் நூற்றாட்டில் ஒரு புதிய
அத்தியாயத்தையும், ஒரு புதிய படிப்பினையையும் வரலாற்று அரங்கில்
தோற்றுவித்துள்ளது.
ஈழத்தமிழ் மக்களின் நூற்றாண்டுக் கணக்கான
சங்கிலித் தொடர் தோல்விக்கான காரணங்களுள் ஒன்று சர்வதேச அரசியல் பற்றிய
பார்வையும், பொருத்தமான ஒரு வெளியுறவுக் கொள்கை பற்றிய நோக்கு நிலையும்
நூற்றாண்டுக் கணக்காய் தமிழ் தலைமைகளிடம் இருக்கவில்லை என்பது.
முள்ளிவாய்க்காலில் இனவாதமும், சர்வதேச சக்திகளும் ஒரு பரிசோதனையை நடாத்தி
முடித்துள்ளன. இதனை ஓர் உள்நாட்டு பரிமாணத்தில் மட்டும் விளங்காது சர்வதேச
அரசியல் ஒழுங்கிலும், 'சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு' என்ற படச்சட்டக்
கட்டுக்குள்ளும் வைத்து விளங்க வேண்டிய அவசியம் எம்முன் உண்டு.
எல்லாவற்றுக்கும் அப்பால் எம்மிடம் எது எஞ்சியிருக்கிறதோ அதுதான் அடுத்த
கட்ட வரலாற்றை காவிச் செல்லப் போகிறது. எனவே எஞ்சியிருப்பதைப் பற்றிய
மதிப்பீடும், காவக்கூடிய சுமையும், செல்லக் கூடிய தூரமும், செல்வதற்கான
வழிவகைகளும், செல்வதற்கேற்ற ஏதுக்களும் பற்றிய கணிப்பீடு மிகவும் சரியாக
அமைய வேண்டும். இவற்றின் அடிப்படையில் யதார்த்தபூர்வ அடியெடுப்புடன்
மட்டுமே நாம் பயணிக்க முடியும்.
வன்னிப் பெருநிலத்தில் எல்லாவகைப்
பரிசோதனைக் களமாகவும் எங்கள் மக்கள் ஆக்கப்பட்டார்கள். அக்கினிக்
குண்டுகளுக்கு எங்கள் மக்கள் இரையானார்கள்.
இறந்துபட்டோர் பற்றிய
துயரம் ஒருபுறமும், அக்கினிக் குண்டுக்கு ஆகுதியாய் இறக்கப் போகின்ற
இனியவர்கள் பற்றிய துயரம் இன்னொரு புறமுமாய் வன்னி வாழ் மக்கள் தங்கள்
துன்ப துயரங்களை சுமந்தார்கள். என்நெஞ்சில் கனக்கும் துன்பங்களையும்,
துயரங்களையும் நான் எழுத்தில் வடிப்பது ஒரு வரலாற்றுப் பதிவாக மட்டும்
இருப்பதற்கல்ல. இத் துன்பத்துக்கு முடிவுகட்ட வேண்டிய தீர்வு காணும்
பொறுப்பின் பொருட்டுமாகும்.
என்னுடன் நெருங்கிப் பழகிய ஒரு
குடும்பத்தின் காலம் ஓராண்டு மட்டுமே. ஆயினும் அக்குடும்பம் என் இதயத்தில்
பதித்த தாக்கம் பெரிது. அவள் க.பொ.த. உயர்தர மாணவி. மிகவும் அழகாகவும்
துடுக்காகவும் இருப்பாள். அவள் பிறந்த அன்று அவளின் தாய் இறந்துவிட்டாள்.
அவளுக்கு இரண்டு அக்காக்களும், இரண்டு அண்ணாக்களும் இருந்தனர். தந்தை அவளை
மிகவும் செல்லமாக வளர்த்தார். அவளது ஓர் அக்கா யாழ் பல்கலைக்கழக பட்டதாரி.
அவள் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தில் பணிபுரிந்தாள். மற்றைய அக்கா மணமாகி
விட்டார். ஓர் அண்ணன் கடற்புலிப் போராளி. மற்றைய அண்ணன் க.பொ.த. உயர்தரம்
கல்வி கற்றுக்கொண்டிருந்தான்.
இவளது ஆசை தான் ஒரு மருத்துவராய்
வரவேண்டும் என்பது. மிகவும் கெட்டிக்காரி. வெட்டொன்று துண்டிரண்டாய் பேசும்
இயல்புள்ளவள். ஆங்கிலத்தில் உரையாடக்கூடிய அறிவிருந்தது. எல்லோருக்கும்
இவளே வீட்டில் செல்லம். ஆனால் கட்டாய ஆட்சேர்ப்பில் குடும்பத்தில்
இன்னொருவர் இணைய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டது. தாயின்றி தாம்
செல்லமாக வளர்த்த இவளை போராளியாக்க யாரும் தயாராய் இருக்கவில்லை. மற்றைய
அண்ணன் தங்கையைக் காப்பற்ற வேண்டும் என்பதற்காக போராளியாகினான்.
இப்போது குடும்பத்தில் இரண்டு ஆண்பிள்ளைகளும் போராளிகள் ஆகிவிட்டனர். ஆனால்
அண்ணன் போராளியானது தங்கையையும், ஏனைய சகோதரிகளையும் பெரிதும் வாட்டியது.
இப்போது இரு அண்ணன்களும் போராளிகள் என்ற போராளி அட்டை கையில் இருப்பதால்
இவள் வெளியே நடமாடுவது சாத்தியப்பட்டது. இந்நிலையில் அவள் அவ்வப்போது
என்னைப் பார்க்கவும், என்னுடன் ஏதாவது பேசி ஆறுதல் பெறவும் வருவாள். இவளது
பட்டதாரி அக்கா என்னைக் கண்டதும் தன் போராளித் தம்பிமாரைப் பற்றி சொல்லிக்
கண்கலங்கத் தொடங்குவாள்.
தற்போது தொடர்ச்சியான இடப்பெயர்வு
நிகழ்ந்து கொண்டிருந்தது. சில நாட்களே ஓரிடத்தில் தங்கலாம் எனும் நிலை.
இப்போது நாம் இடம் பெயர்ந்து சுதந்திரபுரத்தில் அரசாங்கம் அறிவித்த
'பாதுகாப்பு வலயத்தில்' இருக்கிறோம். உணவு, நீர், கழிப்பிட வசதியின்மை என்ற
பிரச்சினை ஒருபுறம் இருக்க, ஓயாது கூவி விழும் எறிகணை வீச்சுக்கள்.
இந்த எறிகணையில் ஒன்று இவளது கூடார வீட்டின் மீது வீழ்ந்தத

Similar topics
» யாரறிவார் வன்னிப் பெருந்துயரை...!
» யாரறிவார் வன்னிப் பெருந்துயரை...!
» யாரறிவார் வன்னிப் பெருந்துயரை...!
» யாரறிவார் வன்னிப் பெருந்துயரை...!
» "வன்னிப் போரில் கொன்றது போல எல்லாத் தமிழர்களையும் கொல்ல வேண்டும்!- வவுனியா வைத்தியசாலையில் இராணுவச் சிப்பாய் அட்டகாசம்"
» யாரறிவார் வன்னிப் பெருந்துயரை...!
» யாரறிவார் வன்னிப் பெருந்துயரை...!
» யாரறிவார் வன்னிப் பெருந்துயரை...!
» "வன்னிப் போரில் கொன்றது போல எல்லாத் தமிழர்களையும் கொல்ல வேண்டும்!- வவுனியா வைத்தியசாலையில் இராணுவச் சிப்பாய் அட்டகாசம்"
போர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum