போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கடவுளால் எமக்குத்தரப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம் Arul11 கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கடவுளால் எமக்குத்தரப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம் Untitl11 கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கடவுளால் எமக்குத்தரப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம் Iiiiii12 கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கடவுளால் எமக்குத்தரப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம் Untitl13 கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கடவுளால் எமக்குத்தரப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம் Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கடவுளால் எமக்குத்தரப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம்

Go down

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கடவுளால் எமக்குத்தரப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம் Empty கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கடவுளால் எமக்குத்தரப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம்

Post by Admin Fri Aug 24, 2012 4:59 pm

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கடவுளால் எமக்குத்தரப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம்
[You must be registered and logged in to see this image.]
கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன்.

ஜெனீவா தீர்மானத்தில் இலங்கை தமிழ் மக்களுக்கு அதிக பட்ச அதிகாரத்தை
உள்ளடக்கிய அரசியல் தீர்வை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ள போதிலும்
இலங்கை அரசாங்கம் அதனை வழங்க விரும்பவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்
தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சித்தாண்டி முருகன்
ஆலய முன்றலில் நடைபெற்ற கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து
கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமது
மக்கள் தங்கள் பாரம்பரிய வாழ்விடங்களில் தங்களை தாங்களே ஆளக்கூடிய
சுயாட்சியுடனான அரசியல் தீர்வை அடைய வேண்டும் என்பதில் இன்னும்
உறுதியுடனும் நம்பிக்கையுடனும் உள்ளார்களா என்பதை சர்வதேச சமூகம்
உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறது.
இதனை சர்வதேச சமூகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இத்தேர்தலில் 95
சதவீதமான தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவளிப்பதன் மூலம்
ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற முடியும். அதுமட்டுமன்றி உரிமைப் போராட்டத்தில்
தமிழர்கள் எத்தனை இழப்புக்களைச் சந்தித்தாலும் உறுதியுடனும்
வைராக்கியத்துடனும் தொடர்ந்தும் இருக்கிறார்கள் என்பதை சர்வதேச
சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் மீண்டும் ஒரு முறை
நிரூபித்துக்காட்டக் கூடியதாயிருக்கும்.

கடந்த 60 வருடங்களுக்கு
மேலாக தமிழ் மக்கள் தமது உரிமைக்காக போராடிக்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள்
எடுக்கப்போகும் தீர்மானம் ஒரு திருப்பு முனையாக அமையும்.

தமிழ்
மக்களைப் பொறுத்தவரை இனப்பிரச்சினைக்கு தீர்வாக நிலைத்து நிற்கக்கூடிய
அரசியல் தீர்வொன்றையே எதிர்பார்க்கின்றார்கள். இதனை சர்வதேச சமூகமும்
வலியுறுத்துகிறது. இந்நிலையில் இந்தத்தேர்தலில் தமிழ் மக்கள் எடுக்கும்
முடிவு சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பை பலவீனப்படுத்துவதாக அமைந்து
விடாமல் பலப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

நடைபெறவுள்ள கிழக்கு
மாகாணசபைத் தேர்தல் கடவுளினால் எமக்கு தரப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம். இதில்
நீதி நியாயத்தில் நாம் வெற்றியீட்ட வேண்டும். என்பது கடவுளின்
விருப்பமாகவுள்ளது. இதனை சரியாக உணர்ந்து கொண்டு செயற்படுவது எமது
கடமையாகும்.

வீரகேசரி - 18-08-2012

ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் ஒருபோதும் அமுல்ப்படுத்தாது

சுமந்திரன் எம்.பி.

சர்வதேச நெருக்கடிகளை சமாளிக்க ஜனாதிபதி தனக்கு சார்பான ஒரு ஆணைக்குழுவை
நியமித்தார். அக்குழுவின் அறிக்கையை நாம் ஆராய்ந்து பின்னர் அதனை அரசு
நடைமுறைப்படுத்துமானால் அதனை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தோம். நாம் அரசிடமும்
சர்வதேசத்திடமும் கோரி வரும் பல விடயங்கள் அவ்வறிக்கையில்
உள்ளடக்கப்பட்டுள்ளதனால் அரசாங்கம் அதனை அமுல்ப்படுத்தாது என
எம்.ஏ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

வரோதய நகர் மைதானத்தில்
நடைபெற்ற கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு
உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

அரசினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள விடயங்களை
அமுல்ப்படுத்துமாறே இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் கோரி நிற்கின்றன. மஹிந்த
ராஜபக்ஷ ஒரு ஜனநாயக ரீதியான தலைவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என
சர்வதேச நாடுகளில் அவர் உரையாற்றுகின்ற போது கூறுகின்றார். உண்மை தான்,
ஆனால் அவர் சிங்கள மக்களால் மாத்திரம் தெரிவான ஒரு தலைவர், அவரை வட
கிழக்குத் தமிழ் மக்கள் ஆதரிக்கவில்லை. காலா காலமாக வந்த தேர்தல் முடிவுகளை
பாருங்கள். அவற்றிலெல்லாம் எமது மக்கள் அவரை நிராகரித்துள்ளனர் எனவும்
நாம் சர்வதேசத்திடம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

எமது திருகோணமலை
வேட்பாளர் சுரேஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நாம் விடுவிக்க பல
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அவரை குடிவரவு குடியகல்வு தொடர்பான
சட்டம் ஒன்றின் கீழ் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சட்ட
விதியிலும் ஒரு சிறப்பு விதி உள்ளது. தேர்தல் தொடர்பானது அதனடிப்படையில்
அவரை விடுவிக்குமாறு சட்டமா அதிபரிடம் பேசினோம். அவர் தற்போது விடுதலை
செய்ய வேண்டிய காலமாக இருந்த போதிலும் அவரை விசேட புலனாய்வுத்துறை இன்னும்
விசாரித்து முடிக்கவில்லை. அவர்கள் முடித்தால் தான் நீதிமன்றிற்கு ஆஜராக
முடியும் என தெரிவிக்கப்படுகிறது. ஆகவே அவர் தொடர்பாக நாம் பல
அணுகுமுறைகளைப் பின்பற்றி வருகின்றோம்.

நாம் இந்த அரசுடன் நடத்திய
இரு தரப்பு பேச்சுவார்த்தையில் 18 முறை பங்கெடுத்துள்ளோம். இதனை பல்
கட்சிக்குழுவில் பேசுவது நல்லது என அரசு ஒரு கட்டத்தில் கூறியது.
இந்தியாவுடன் நடந்த சந்திப்பின் போது மிக விரைவில் இரு தரப்பு பேச்சை
முடிவுக்கு கொண்டு வாருங்கள் என வலியுறுத்தியது. ஆனால் தெரிவுக்குழுவிற்கு
நாங்கள் வர மறுக்கிறோம் என அரசு தற்சமயம் பிரசாரம் செய்கிறது.


ஆனால் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஒரு போதும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.
நடந்து முடிந்த பேச்சுவார்த்தையின் படி சில நியாயமான விடயங்களை அரசு
நிறைவேற்ற வேண்டும் என்றே கோரி வருகின்றோம். இதனை இந்தியா உட்பட சர்வதேச
நாடுகளும் இந்த முக்கியமான விடயங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே அரசு
தொடர்ந்தும் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக இழுத்தடித்தே வருகிறது
எனவும் சுட்டிக் காட்டினார்.தினக்குரல் - 19-08-2012

தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுக்கவும் கள்ள வாக்குகள் போடவும் திட்டம்

அரியநேத்திரன் எம்.பி.குற்றச்சாட்டு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில்
எமக்கெதிரானவர்கள் தமது பிரச்சாரத்தைக் கைவிட்டு தமிழ் மக்கள் வாக்களிப்பதை
தடுப்பதற்கும் திட்டமிடுவதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்
அரியநேத்திரன் குற்றம் சாட்டியுள்ளதுடன் தேர்தல் நேர்மையாகவும்
சுதந்திரமாகவும் நடைபெறுவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கையெடுக்க
வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

இது குறித்து அவர்
தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும்
கூட்டமைப்புக்கு எதிராக 12 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவை
குறித்து நாம் பொலிஸில் ஆதாரத்துடன் முறையிட்டுள்ளோம். எமது முறைபாடுகள்
குறித்து நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் எமது வெற்றி உறுதியாகியுள்ளது.

நாம் செல்லும் இடமெல்லாம் மக்கள் அலைமோதுகின்றனர். தமிழ் மக்கள் உரிமையைப்
பெற வேண்டுமென்பதில் தீர்க்கமாகவுள்ளதால் எமக்குப் பலம் சேர்க்க
முன்வந்துள்ளனர். இந்நிலையில் எமக்கு எதிரான சக்திகள் எமது வெற்றியைத்
தட்டிப்பறிப்பதற்கு தமது பிரசாரத்தைக் கைவிட்டு தமிழ் மக்களை
வாக்களிக்கவிடாது தடுப்பதற்கு கள்ளவாக்குகள் போடுவதற்கும்
திட்டமிடுகின்றனர்.

இதனைத் தடுத்து நிறுத்துவதற்கும் தேர்தல்
நேர்மையாகவும் சுதந்திரமாகவும் இடம்பெறுவதற்கு தேர்தல்கள் ஆணையாளர்
நடவடிக்கையெடுக்க வேண்டும். எதிர்வரும் புதன்கிழமை தேர்தல் ஆணையாளருடனான
கட்சிப்பிரதிநிதிகள் சந்திப்பின் போது எமது கட்சிக்கு எதிராக இடம்பெற்ற
சம்பவங்கள் மற்றும் எதிர்காலத்தில் தேர்தல் நேர்மையாக இடம்பெறுவதற்கான
11யோசனைகளை முன்வைக்கவுள்ளோம் என்றார்.

வீரகேசரி - 20-08-2012

ஓரினத்தின் உரிமைக்கான போராட்டத்தை பயங்கரவாதம் என்று சித்தரித்ததை இன்று சர்வதேசம் பொய்யாக்கி விட்டது

மல்வத்தையில் த.தே.கூ.வேட்பாளர் கண்ணதாசன்

ஓரினத்தின் உரிமைக்கான போராட்டத்தை பயங்கரவாதம் என்று அரசு
சித்தரித்துவந்ததை இன்று சர்வதேசம் பொய்யாக்கிவிட்டது. ஐ.நா.மனித உரிமை
குழு முன் அரசு மண்டியிட வேண்டி வந்து விட்டது. எனவே இச்சந்தர்ப்பத்தில்
எமது ஒற்றுமையை நன்றியாக சர்வதேசத்திற்கு காட்ட ஒன்றிணைவோம்.


இவ்வாறு மல்வத்தையில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரசார
கூட்டத்தில் உரையாற்றிய த.தே.கூட்டமைப்பு வேட்பாளர் இரா.கண்ணதாசன்
(ஆசிரியர்)வேண்டுகோள் விடுத்தார். அங்கு அவர் மேலும் பேசுகையில்


எந்த ஒரு நாட்டிலும் அம்மக்களின் இனக்குழுமத்தின் உணர்வுகள், உரிமைகள்
மறுக்கப்படும் போது அவ் இனம் தம் இருப்பைக் காக்கும் பொருட்டு சாத்வீகப்
போராட்டத்தை நடத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

இலங்கையில்
தமிழினம் போராட்டமானது சுமார் 60 வருட கால வரலாற்றைக் கொண்டது. சர்வதேச
ரீதியாக எம் இனப்போராட்டத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது என்பது கடந்த 30
வருடங்களில் தான் என்பதை அகில உலகமும் அறியம். ஆனால் இப் போராட்டத்தை
பயங்கரவாத செயற்பாடாக அரசாங்கம் சித்தரித்து வந்தது அது இன்று
சர்வதேசத்தின் பார்வையில் பொய்த்து விட்டது. எமது தமிழ்த் தேசிய
இனத்தவர்கள் அன்று இலங்கையின் சுதந்திரத்திற்காக பல்வேறு வழிகளில்
பங்களிப்பு செய்து வந்திருக்கின்றனர். ஆனால் அவ் அர்ப்பணிப்பான சேவையை,
பங்களிப்பை இனத்துவ ரீதியில் பார்த்தமையால் தான் இன்று இலங்கை அழிந்த
நிலையிலிருப்பதற்குக் காரணமாகும்.வீரகேசரி - 21-08-2012

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வின் அவசியத்தை சர்வதேசம் முன் எழுப்பும் சந்தர்ப்பமே கிழக்கு தேர்தல்

கூட்டமைப்பு எம்.பி.சுமந்திரன் கூறுகிறார்.அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வுடனான தீர்வு தமிழ் மக்களுக்கு வேண்டுமெனும்
பெரிய கோஷத்தை சர்வதேசத்திற்கு முன்னால் எழுப்பும் சந்தர்ப்பமாக திருப்பு
முனையாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலை மாற்றுவோம்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறுகிறார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
தேர்தல் பிரசாரக் கருத்தரங்கு ஒன்று கல்முனையில் நடைபெற்ற போது அதில்
கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஏகாம்பரம் தலைமையில் கல்முனை வை.எம்.சீ.ஏ.மண்டபத்தில் இப்பிரசாரக் கருத்தரங்கு நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'மாகாண சபைகளை முன் கூட்டியே கலைக்கும் அதிகாரம், மாகாண சபைகளுக்குப்
பகிரப்பட்ட அதிகாரமென்பது மேல் நீதிமன்ற, உயர் நீதிமன்றத் தீர்ப்புகள்
மூலமும் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு விடயமாகும்.

மத்திய அரசுக்கோ, ஜனாதிபதிக்கோ இதில் எந்த விதமான பங்களிப்பும் இருக்க முடியாதெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இம்முறை மூன்று மாகாண சபைகள் ஒரே இரவில் கலைக்கப்பட்டுள்ளன.
சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு மாகாண ஆளுநர்களுக்கு ஒரே நாள் திடீரென்று ஓர்
எண்ணம் கலைக்க வந்துள்ளது. அந்த மூன்று மாகாண சபை முதலமைச்சர்களுக்கும் அதே
நாள் பளிச்சென்று அதே எண்ணம் உருவாகியுள்ளது.

இதற்கென கோடிட்ட இடத்தில் கையொப்பமிட்டுக் கொடுத்து விட்டு வந்தவர்தான் கிழக்கிலிருந்த முதலமைச்சர்.

இரண்டு மாதங்களுக்கு முதல் அவருடைய மாகாண சபையே எடுத்த தீர்மாணத்திற்கு
விரோதமாக ஜனாதிபதி சொல்லி விட்டாரென்பதற்காக கையெழுத்துப் போட்டுக்
கொடுத்து விட்டு வந்து விட்டார்.

மாகாணத்திற்கு முற்று முழுதாகப்
பகிரப்பட்டுள்ளது என்ற அதிகாரத்தை இந்த முதலமைச்சர் பாவித்த விதம் நம் முன்
கிழக்குத் தேர்தலைத் தந்துள்ளது.

என்ன செய்கிறார்?


ஜனநாயக விழுமியமுள்ள நாடுகளின் அழுத்தம் வரும் பொழுது இலங்கை ஜனாதிபதி
ஜனநாயகத்தைக் காட்டியெ அந்த அழுத்தங்களைத் தணிக்க முயற்சிக்கிறார்.

ஜனநாயக முறையொன்றைக் காட்டித்தான் அந்த அழுத்தங்களைக் குறைக்கலாம்
மழுங்கடிக்கலாமென்றால் ஜனநாயக நாடுகள் ஏற்றுக் கொள்ளும் முறைமையைப் பாவிக்க
வேண்டுமென்பதால் தான் ஜனாதிபதி தேர்தல்களை நடத்துகின்றார்.

எதிரொலி

இதன் எதிரொலியாகப் பல நாடுகள் ஜனாதிபதி பலமாகவிருக்கிறார். மக்கள் அவர்
மக்கமுள்ளனரே என்ற அபிப்பிராயத்தையும் கொண்டுள்ளனர். இலங்கை ஜனாதிபதி ஒரு
சர்வாதிகாரியென்று பட்டம் சூட்ட சர்வதேச சமூகத்தினால் முடியாமலிருக்கிறது.
ஏனெனில் தேர்தலிகளில் இன்னமும் வெற்றி பெறுகிறார் என்பதற்காக.

நாம் கூறுவது.

நாம் அவர்களுக்குக் கூறி வருவது, ஆம் தேர்தலில் வெற்றி பெறுகிறார். ஆனால்
நடந்து முடிந்த அத்தனை தேர்தல்களனிலும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் அவரை
நிராகரித்தே வருகின்றனர் என்பது தான். தென்னிலங்கையில் அவர் பெறும்
வெற்றியை ஜனநாயக வெற்றியாக ஏற்றுக்கொள்ள முடியாதென வலியுறுத்திச்
சொல்லியுள்ளோம்.

இன்னொரு தேசிய இனம் இன்னொரு மக்கள் முற்று
முழுதாக ஜனாதிபதியையும் அரசையும் நிராகரிக்கும் பொழுது அவர்களுடைய
ஜனநாயகத்தைத் தீர்ப்பு என்ன என்பதை சர்வதேசம் கருத்தில் கொண்டு தீர்வைக்
கொண்டு வர வேண்டும் என நாம் திரும்பத் திரும்ப எம் மக்களுடைய வாக்கின்
படிகளை மேற்கோள் காட்டி செல்லும் காரணத்தால் தான் இன்று சர்வதேசம் அதனை
ஏற்றுக் கொண்டுள்ளது.வீரகேசரி - 21-08-2012

அரசின் கழுத்தில் தூக்குக் கயிறு இறுக்குவதா! தளர்த்துவதா?

கிழக்கு மக்கள் தீர்மானிக்க சந்தர்ப்பம் என்கிறார் செல்வம் எம்.பி

'அரசின் கழுத்தில் தூக்குக் கயிறு போடப்பட்டுள்ளது. இதை இறுக்குவதா அல்லது
தளர்த்துவதா என்பதைத் தீர்மானிப்பதற்கு கிழக்கு வாழ் தமிழப் பேசும்
மக்களுக்குக் கிடைத்துள்ள சந்தர்ப்பமாக கிழக்கு மாகாண சபைத் தேர்தல்
அமைந்துள்ளது.

இவ்வாறு ரெலோ அமைப்பின் தலைவரும் வன்னி மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் அரசுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் இந்த அரசை ஆட்டம்காணச் செய்துள்ளது.

தாம் இழைத்த குற்றங்களை மூடிமறைக்கவும், தட்டிக்கழித்தும் தம் பக்கம்
நியாயமுள்ளது எனக்காட்டி சர்வதேசத்தை ஏமாற்றும் கபட நோக்குடனும் தான் ஒரு
வருடகாலத்திற்கு முன்பாகவே கிழக்கு மாகாண சபைத் தேர்தலை அரசு
நடத்துகின்றது.

கதவை தட்டியது

இறுதி போரின் போது
முள்ளிவாய்க்காலில் எம் தமிழினத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அட்
டூழியங்கள், மனித உரிமை மீறல்கள், மக்கள் அழிவுகள் சர்வதேசத்தின் கதவைத்
தட்டியுள்ளது.

முள்ளிவாய்க்காலில் ஆடு, மாடுகளை விடவும் மோசமான இந்த அரசும் அதன் படைகளும் எம் மக்கரளைச் சின்னாபின்னமாக்கியது.

இறந்த உடல்களைக் கூட புதைப்பதற்கு வாய்ப்பின்றி அந்த உடல்கள் மீது
வீழ்ந்து, கடந்து சென்ற பெரும் துயரை மக்கள் அனுபவித்ததும் மட்டுமன்றி,
நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட நம் உறவுகள் அங்கு உயிருடன் புதைக்கப்பட்ட
சம்பவங்கள் இன்னும் ஆறாத்துயராகவுள்ளன.

நிமிர்ந்து நடந்தாலே சாவு
என்ற நிலையில் நம் மக்கள் பட்ட அவலங்களுக்கெல்லாம் காரணமான இன்றைய அரசு
இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

இன்று வன்னியில்
தாய், தகப்பன், பிள்ளை என பலதரப்பினர் உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன்
எத்தனையோ இளம் விதவைகள் அனாதைகள் உருவாக்கப்பட்டுள்ள சோகங்கள் எப்போது எம்
நெஞ்சைவிட்டு அகலப் போகிறது.

எமது இந்த சோகங்கள் மனித உரிமை
மீறல்கள் சர்வதேசத்தின் கதவுகளைத் தட்டியதால் அரசு குற்றக்கூண்டில் இன்று
சர்வதேசத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த முறை


அடுத்து வரவிருக்கும் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில்
எதிர்நோக்கிவிருக்கும் இன்னும் கூடிய நெருக்கடி நிலையைத் தளர்த்தும்
உபாயமாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை அரசு முன்வைத்து பக்கவாத்தியத்திற்காக
மேலும் இரு மாகாண சபைகளுக்கான தேர்தலையும் அரசு நடத்துகின்றது.

தூக்குக் கயிறு

இன்று ஐ.நா மனித உரிமைப் பேரவை அரசுக்கு எதிராக நிறைவேற்றியுள்ள
தீர்மானங்கள் அரசின் கழுத்தில் போடப்பட்டுள்ள தூக்குகக் கயிறாகவுள்ளது.

எனவே இந்தத் தூக்குக் கயிற்றை இறுக்கி அரசுக்குப் பாடம் புகட்டுவதா,
அல்லது தளர்த்தி அரசின் பக்கமே நியாயமுள்ளது எனக்காட்டச்
சந்தர்ப்பமளிப்பதா?

இதனைக் கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களே தீர்மானிப்பதற்குச் சந்தர்ப்பமாக கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அமைந்துள்ளது.வீரகேசரி - 22-08-2012

தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறவில்லை.

சர்வதேசத்தில் மையங்கொண்டுள்ளதென்கிறார் கூட்டமைப்பு வேட்பாளர் ஜெயசிறில்'தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலுடன்
முற்றுப்பெறவில்லை. அது நந்திக்கடலையும் தாண்டி சர்வதேசத்தில் மையம்
கொண்டுள்ளது.'

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை
மாவட்ட வேட்பாளர் கே.ஜெயசிறில் நேற்று காரைதீவில் ஆதரவாளர் மத்தியில்
தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், சர்வதேச பிடிக்குள்
சிக்கியுள்ள இலங்கை அரசு இனியும் சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாது. ஐ.நா
மனித உரிமைப் பேரவையின் மீளாய்வுக் கூட்டமானது எதிர்வரும் நவம்பர் மாதம்
நடைபெறவுள்ளது. அப்போது ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை சம்பந்தமாகவும்,
அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட தீர்மானம் தொடர்பாகவும் கட்டாயம் இலங்கை
அரசு பதிலளித்தே ஆகவேண்டும்.

60 வருடங்களாகத் தொடரும் எமது
இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கக்கூடிய காலம் தொலை தூரத்தில்லில்லை.
இராஜதந்திரரீதியில் செல்லும் விடுதலைப் பயணத்தை வெற்றியடையச் செய்ய
வேண்டுமாயின் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றியடையச்
செய்வதே முறையாகும். அங்கு அவர் உரையாற்றுகையில் :-

'நாம்
அபிவிருத்திக்கு எதிரானவர்களல்லர். ஆனால் எமது தன்மானம் தமிழ்த் தேசியம்,
சுயநிர்ணய உரிமைகளை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது.

முஸ்லிம் மக்களையும் அரவணைத்து கிழக்கில் நாம் அரசோற்ற வேண்டும்.தினக்குரல் -22-08-2012

அபிவிருத்திக்கு முன் எமது மண்ணிலிருந்து இராணுவத்தினர் வெளியெற வேண்டும்

மாவை சேனாதிராஜா

தமது உரிமைப் போராட்டத்தில் தோற்றுப்போனவர்கள் அல்ல என்பதை கிழக்கு மாகாண
சபைத்தேர்தலில் அரசாங்கத்தை வெட்கப்படச் செய்யும் அளவிற்கு தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பை தமிழ் மக்கள் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெறச் செய்ய
வேண்டுமென்று யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத்
மிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

திருகோணமலை பிரதேச செயலக பிரிவிலுள்ள சாம்பல் தீவுக்கிராமத்தில் நடைபெற்ற
தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இக்கருத்தை மாவை சேனாதிராஜா
தெரிவித்தார். மாவை சேனாதிராஜா மேலும் கூறியதாவது இன்று
முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் தமிழர் தோற்றுப்போனவர்கள் என்ற எண்ணத்தில்
சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சி வடக்கு கிழக்கில் புத்தர் சிலைகளை வைத்து எம்
மண்ணை பகரித்து வருகின்றது. புத்தர் சிலைகள் பாரம்பரிய தமிழர் தாயகத்தில்
விதைக்கப்பட்டு வருவதையே காணுகின்றோம். அபிவிருக்கிக்கு முன்னர் எமது
மண்ணிலிருந்து இராணுவம் வெளியெற வேண்டும்.

மண் முதலில் எமக்கு சொந்தமாக எமது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

உலகின் ஜனநாயகத்தை பேணும் நாடுகள் இலங்கைத் தமிழரின் பிரச்சினைக்கு
நிலையானதும் நிலைத்து நிற்கக்கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றைக்
காணவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கத்
தொடங்கிவிட்டது. போரின் இறுதிக்கட்டத்தில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்
மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் மீது கடும் போக்கைக்
கடைப்பிடிப்பதற்கு ஐ.நா வின் மனித உரிமை பேரவை மற்றம் சர்வதேச அமைப்புக்கள்
தயாராகி வருகின்றன. அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறசவிருக்கும் ஐ.நா
மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கம் ஆபத்தான விளைவுகளை
எதிர்நோக்கவேண்டிய சூழல் உருவாகி வருகிறது. இந்த நிலையில் எதிர்வரும்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கப்போகும் தீர்ப்பு தமிழ்
மக்கள் மீது சாதகமான அணுகுமுறையை மேற்கொண்டு வரும் சர்வதேசச் சமூகத்தின்
சிந்தனைக்கு உரமூட்டுவதாக அமையவேண்டுமே தவிர, அதனை பலவீனப்படுத்துவதாக
அமைந்து விடக்கூடாது என்றும் மாவை சேனாதிராஜா கூறினார்.

வீரகேசரி - 23-08-2012

மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களை கைப்பற்றும்

அரியநேத்திரன் எம்.பி.கூறுகிறார்.

எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு
அதிகபடியான ஆசனங்களை கைப்பற்றுவதுடன் தமிழத் தான் முதலமைச்சராக வருவார்
என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என மட்டக்களப்பு மாவட்ட
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன்
தெரிவித்தார்.

இன்று கிழக்கு மாகாணத்தில் அரசும் அரசை
சார்ந்தோரும் அபிவிருத்தி என்ற கோசங்களுடன் எம்மை ஏமாற்றி எமது இனத்தின்
உரிமையினைப் பெற்றுக்கொள்ள மறுக்கின்றனர். யார் ஆட்சி செய்தாலும்
அபிவிருத்தி நடைபெறும். அதில் மாற்றமில்லை. இன்று கிழக்கு மாகாணம்
அபிவிருத்தி செய்யப்பட்டு இருக்கின்றது. இது அரசின் நிதி அல்ல
வெளிநாடுகளில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியே.

இதனை நானும் எனது கட்சியும் செய்து வருகின்றோம் என அரசை சார்ந்தோர் கவிபாடுகின்றனர்.

எமது தமிழ் மக்கள் காலத்தில் சிந்திய கண்ணீரும் இழந்த இழப்புக்கும் எந்தப்
பயனும் இன்றி தவிக்கும் நிலையில் இந்த தேர்தல் வந்திருக்கின்றது. இதில்
எமது இனம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆதரித்து வெற்றியடையச் செய்து
உரிமையினைப் பெறவேண்டும். இல்லாவிடின் எமக்கு எந்தப்பயனும் இல்லை. இதனை
விடுத்து அரசுக்கோ அல்லது மாற்றுக் கட்சிக்கோ வாக்களித்து தமிழ்
கூட்டமைப்பின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுமானால் எமது தலையில் நாமே
மண்ணை அள்ளி வைத்து மூடுவதற்கு ஒப்பாகும்.

எனவே அந்த அபிவிருத்தி
என்ற பசப்பு வார்த்தைக்கு ஏமாற வேண்டாம். யார் வந்தாலும் அபிவிருத்தி
நடைபெறும். இதற்கு நல்ல உதாரணம் இருபது வருடமாக வடமாகாண சபைத் தேர்தல்
நடைபெறவும் இல்லை. முதலமைச்சரும் இல்லை. இந்நிலையில் இந்த மாகாணம் கிழக்கு
மாகாணத்தினை விட வெளிநாட்டின் நிதியினூடாக இரட்டிப்பான அபிவிருத்தி
கண்டிருக்கின்றது.

இது யார் செய்தது. முதலமைச்சரா இல்லை என்பதை எமது மக்கள் புரிய வேண்டும்.

அந்த வகையில் இன்று அபிலாசைகளை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள எதிர்வரும்
மாகாணசபைத் தேர்தலில் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து தமிழ் தேசியக்
கூட்டமைப்பினை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றார்.சுடர் ஒளி - 23-08-2012

மாகாணசபையை அர்த்தமுள்ள சபையாக மாற்றும் நோக்கத்துடனேயே கூட்டமைப்புப் போட்டியிடுகின்றது!

கூட்டமைப்பின் திருமலை வேட்பாளர் இந்துராணி தெரிவிப்பு

'கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நாம் ஒதுங்கி நிற்க முடியாது. துணிவுடன்
இறங்கி மாகாணசபை ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும். வல்லவனுக்குப் புல்லும்
ஆயுதம் என்பார்கள். மாகாணசபை எனும் புல்லை எடுத்து ஆயுதமாக மாற்றுவோம்.

இவ்வாறு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வேட்பாளராகத் திருகோணமலை மாவட்டத்திலிருந்து போட்டியிடும் டாக்டர் திருமதி
இந்துராணி தர்மராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை
வருமாறு :- இக்கட்டான சூழலில் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது.
மக்களை ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணத்துடன் உரிய காலத்துக்கு முன்னர் அரசு
தேர்தலை நடத்துகின்றது. கள நிலைவர சூழ்நிலை அரசின் எண்ணத்திற்கு மாறாகத்
திசை திரும்பிவிட்டது. எமக்குச் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்
மக்கள் இதனைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும். அரசியலில்
நிலைமைகளை அனுசரித்துக் காய்களை நகர்த்த வேண்டும் என்பது போன்று
சந்தர்ப்பங்களை பயன்படுத்தி வெற்றிகண்டாக வேண்டும்.

சர்வதேச
அரசியல் நிலைவரத்தை அனுசரித்து எமக்கு சாதகமாகப் பயன்படுத்த வேண்டும்.
வருகின்ற சந்தர்ப்பங்களைத் தவறவிட்டால் ஏமாந்து நிற்கவேண்டிய நிலைக்கு
ஆளாகுவோம். ஏற்கனவே பல வாய்ப்புகளை இழந்து விட்டோம். வரலாற்றிலிருந்து
பாடங்களைக் கற்கவேண்டும். மாகாண சபை நிர்வாகத்தை முன்னர் கையாண்டவர்கள்
துணிச்சலுடன் செயற்படவில்லை.

யார் யாரோ போட்ட தாளத்திற்கு
ஆடினார்கள். சொந்தக் கருத்துகளுக்கொ, சொந்த அதிகாரத்துக்கோ
இடமிருக்கவில்லை. இருந்த சொற்ப அதிகாரத்தைக்கூட அவர்களால் நடைமுறைப்படுத்த
முடியவில்லை. இன்று ஒரு கொள்கை, நாளை வேறு ஒன்று என்ற நிலையில் அன்றைய
மாகாணசபை நிர்வாகம் செயற்பட்டது.

எனவேதான், மாகாணசபை அர்த்தமுள்ள
சபையாக மாற்றும் நோக்கத்துடனே தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
போட்டியிடுகின்றது. இன்று சர்வதேச அரசியல் நிலைவரம் எமக்குச் சாதகமாக
உள்ளது. இதனை யுக்தியுடன் நாம் பயன்படுத்தி மாகாணசபையைக் கைப்பற்றுவோம்
என்றும் திருமதி இந்துராணி தர்மராஜா தெரிவித்தார்.வீரகேசரி - 24-08-2012

வடக்கு முதலமைச்சருக்கு தமிழ்நாடு செங்கம்பள வளவேற்பு வழங்கி விட்டால் தமிழுலகமே ஈழத்தழிழ் பக்கம் சாய்ந்து விடும்!

கிழக்கு மாகாணத் தேர்தலை முதலில் வைப்பதற்கு வடக்குத் தேர்தல் பற்றிய
நியாயமான பயங்களே காரணம் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை
மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உருப்பினருமான குணசேகரம் சங்கர்
தம்பிலுவில் சந்தைச் சதுக்கத்தில் இடம் பெற்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின்
மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசுகையில் கூறினார்.

கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் வேட்பாளர் சங்கர் மேலும் உரையாற்றுயில்,

வடக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னரே நடத்தினால் அதில் சகல அதிகாரமும்
ஆளுமையும் கொண்ட ஒரு தமிழத் தெரிவாவார். சர்வதேசத்தின் பார்வை வடக்குப்
பக்கம் திரும்பும். தமிழர் உரிமைகள் வென்றெடுப்பதற்கான களம் அமைக்கப்படும்.

இதனை தமிழ்நாடு அரசாங்கம் முதலமைச்சரும் செங்கம்பள வரவேற்பளித்து
வெளிப்படுத்தும் தமிழ்நாடு அப்படிச்செய்தால் முழு இந்தியாவும் வடக்கு
முதலமைச்சருக்கு வரவேற்பளிக்கும். அந்த நிலையில் முழு தமிழ் உலகமும் தமிழர்
பக்கம் சாயும்.

இது இலங்கை அரசுக்கு எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தும் இதனை அரசாங்கம் விரும்புமா?

வடக்கு தேர்தலை நடாத்தித் தமிழர்களிடம் ஆட்சி ஒப்படைக்கும் பட்சத்தில்
கிழக்கு மக்களும் அதன் பின்னெ அணி திரள்பவர்கள் என்பது அவர்களுக்குத்
தெரியும். எனவே தான் இலங்கை அரசு முதலில் கிழக்குத் தேர்தலை நடாத்த
முன்வந்துள்ளது.

இத்தேர்தலை வெறும் தேர்தலாக பார்க்காமல் வரலாற்று ரீதியாக தமிழழனின் புதிய அத்தியாயம் எழுதப்படும் ஒரு களமாகப் பார்க் வேண்டும்.

இராஜ தந்திர போராட்டம்.

கடந்த யுத்தத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டு வரும் 03 வருட இராஜதந்திரப்
போராட்டத்தை உலகில் ஜனநாயகத்தை நேசிக்கின்ற ஜனநாயக பெரிய நாடு அமெரிக்கா
உள்ளிட்ட பல பிரபல நாடுகள் ஆதரிக்கின்றன. இன்றும் அதற்காக குரல் கொடுத்து
வந்தன.

அதன் ஓரங்கமே ஜெனிவாத்தீர்மானமாகும். அமெரிக்கா கொண்டு
வந்த போர்க்குற்றச்சாட்டு தீர்மானம் வெற்றியளித்தமை இலங்கை அரசுக்கு பாரிய
அடியாகும். ஆனால் ஜனநாயக உரிமைகளை மதிக்காத சீனா, வடகொரியா போன்ற சில
நாடுகளே அரசாங்கத்திற்கு கைகொடுத்தன.

எதிர்வரும் நவம்பரிலும்
அடுத்த மார்ச் மாதத்திலும் ஐ.நா சபையில் இலங்கை அரசுக்கு எதிரான மனித
உரிமை மீறல் பிரெரணைகள் கொண்டு வரப்படவிருக்கின்றன. அது இலங்கை அரசுக்கு
மேலும் ஒரு நெருக்கடியைக் கொடுக்கும்.

ஐ.நாவில் பிரேரனையை கொண்டு
வரும் போது கிழக்கில் தமிழர் ஆட்சி நடைபெறுவதை நாம் உறுதிப்படுத்த
வேண்டும். அதற்கு வீட்டிற்கு வாக்களிப்பதே புத்திசாலித்தனமானது ஆகும்.

ஐ.நா அமைர்வு இலங்கை அரசுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும் என்பதில்
துளியளவும் ஐயமில்லை. குறைந்த பட்ச அதிகாரத்தைகூட பகிர்ந்தளிக்க முடியாத
இலங்கை அரசாங்கத்துடன் வெறுமனே பேச்சுவார்த்தை என்று கூறி காலத்தைக்
கடத்துவது பொருத்தமா? அது எம்மையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றுவதாக
முடியும்.வீரகேசரி - 24-08-2012

தமிழ் பேசும் மக்கள் தமது கட்சிகளுக்கு வாக்களித்து பேரினவாதங்களுக்கு பாடம் புகட்டவும்

கூட்டமைப்பு வேட்பாளர் அமிர்தலிங்கம்

கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் சுயநிர்ணய உரிமையோடு
தங்களைத்தானே ஆளுகின்ற நிலைமை எதிர்காலத்தில் உருவாக வேண்டும். எனவே தமிழ்
பேசும் மக்கள் தமது கட்சிகளுக்கு வாக்களித்து பேரினவாதிகளுக்கு பாடம்
புகட்ட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்
அருள்நாயகம் அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

அம்பாறை மல்வத்தை
பிரதேசத்தில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுடனான
சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

கடந்த 62 ஆண்டுகளாக தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு செவிசாய்க்காமல்
இருந்ததால் அதனை சர்வதேசத்தினரிடம் கொண்டு சென்றுள்ளோம். இன்று வடக்கு
கிழக்கில் தமிழர்களது பூர்வீக நிலங்களை அபகரித்து தமிழ் பேசும் மக்களின்
ஆலயங்கள், பள்ளிவாசல்கள் என்பவற்றை உடைத்து அழித்து வருவதுடன் மூலைக்கு
மூலை இராணுவ முகாம்களும் புத்தர் சிலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் மக்கள் பெரும்பான்மை வாழுகின்ற வடக்கு, கிழக்கு மாகாணத்தை தமிழ்
பேசும் மக்கள் தான் சுயநிர்ணய உரிமையோடு ஆழ வேண்டும். இதனை இல்லாது ஒழிக்க
பேரினவாத கட்சிகள் திட்டமிட்டு செயற்படுகின்றது.

இந்த பேரினவாதிகளின் திட்டத்திற்குசில தமிழ் பேசும் சு
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum