போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
கல்லறைகள் கருத்தரிக்கும் (காணொளி): “துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்” Arul11 கல்லறைகள் கருத்தரிக்கும் (காணொளி): “துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்” Untitl11 கல்லறைகள் கருத்தரிக்கும் (காணொளி): “துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்” Iiiiii12 கல்லறைகள் கருத்தரிக்கும் (காணொளி): “துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்” Untitl13 கல்லறைகள் கருத்தரிக்கும் (காணொளி): “துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்” Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

கல்லறைகள் கருத்தரிக்கும் (காணொளி): “துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்”

Go down

கல்லறைகள் கருத்தரிக்கும் (காணொளி): “துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்” Empty கல்லறைகள் கருத்தரிக்கும் (காணொளி): “துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்”

Post by Admin Wed Aug 22, 2012 5:45 pm

கல்லறைகள் கருத்தரிக்கும் (காணொளி): “துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்” Maaviirai_illam_2009மீண்டும் தாயக
மண் மீட்கப்படும். அதே துயிலும் இல்லங்கள் மீண்டும் நிறுவப்படும். அவை மத
வேறுபாடற்ற, சாதி வேறுபாடற்ற, கோயில்களாகும். மறைந்த போராளிகளின் உயிர்கள்
அந்தக் கோயில் தெய்வங்களாகும்.



  • இரட்டைவாய்க்கால், ,விசுவமடு, ,முள்ளியவளை, கிளிநொச்சி, வன்னிவிளாங்குளம், ஆலம்குளம், ஈரப்பெரியகுளம், முளங்காவில், ஆட்காட்டிவெளி, பண்டிவிருச்சான், அளம்பில், உடுத்துறை, கோப்பாய், சாட்டி, கொடிகாமம், ஈச்சம்குளம், எள்ளாம் குளம், புதுவையாறு, மணலாறு, புடிமுகாம், தரவை, தாண்டியடி, சுண்டலடி, வாகரை, ஆலங்குளம், திருமலை, மாவடி முன்மாதிதி, கஞ்சிகுடிச்சாறு, பெரியகுளம், தியாகவனம், கோட்டைமாவடி

என்கின்ற எங்கள் மாவீரர்களின் கோவில்கள் நிச்சயம் கருத்தரிக்கும்,

கல்லறைகள் கருத்தரிக்கும் (காணொளி): “துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்” Kallarai_20090821

மயானங்கள் புதைகுழிகள் துயிலும் இல்லங்கள்


  • இறந்த உடல்களை அடக்கம் செய்யும் இடங்கள் என்ற வகையில் மயானங்கள் –
    புதைகுழிகள் – துயிலும் இல்லங்கள் மூன்றுக்கும் ஒரே அர்த்தமே. ஆனால்
    ஒவ்வொன்றும் தனித்துவம் உடையவை. அவைகளின் தாற்பரியங்களும் வேறுபட்டவை.

மயானங்கள் – புதைகுழிகள் – துயிலும் இல்லங்கள் மூன்றும் வெவ்வேறுதான்.
ஏனெனில், உண்மையில் துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்.

மயானங்கள்

இயற்கையாகவோ அன்றி இயல்பான சூழலில் அனர்த்தமாகவோ இறந்தவரை அடக்கம்
செய்யும் இடம் அல்லது ஈமக்கிரியைகள் செய்யும் இடமே மயானம். தீயிட்ட உடலின்
சாம்பலைக் கடலில் கரைத்து இயற்கையுடன் இணைப்பது, அடக்கம் செய்த இடத்தில்
சமாதியோ அல்லது சிலுவையோ அமைத்து திவசங்களின் போது அந்த இடத்தைக் கோயிலாகக்
காண்பது, இஸ்லாமிய மதத்தவர் போல ஒன்றுமே நிறுவாமல் இயற்கையுடன் இணைப்பது –
பள்ளிவாசலில் சிலைகள் படங்கள் எதுவும் இல்லை – அனைத்துமே இயற்கையுடன் –
இறைவனுடன் – உடலைச் சங்கமமாக்கும் சம்பிரதாயம், மரபு.

தமிழினத்தில் பல மதங்கள் இருந்தாலும் அவை யாவும் இச் சமயத் தத்துவத்தில் ஒத்துப் போகின்றன.

புதைகுழிகள்

போர் விதிகளை வரையறை செய்துள்ள சாசனமான, ‘ஜெனீவா ஒப்பந்தம்”, இரண்டாம்
உலகப் போரின் பின்னர் அனைத்துலக நாடுகளாலும் ஏற்றுக் கைச்சாத்திடப்பட்டது.
இதில் மருத்துவ மனைகள், கல்விக் கூடங்கள், அகதி முகாம்கள், வழிபாட்டுத்
தலங்கள் போன்றவை தாக்கப் படக்கூடாதவையாகவும், பொதுமக்கள், உதவி
நிறுவனங்கள், நோயாளிகள் போன்ற பலர் தாக்கப் படக்கூடாதவர்களாகவும்
வகைப்படுத்தி விதிகளாக ஆக்கப்பட்டுள்ளன. போர்க் கைதிகள் எவ்வாறு நடத்தப்பட
வேண்டும் என்பது கூட விதியாக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகள் அனைத்தினது மீறல்களையும் கடந்த 50 ஆண்டுகளாகத் தம்மை ஆளும்
அரசினாலும் மற்றவர்களாலும் சந்தித்த, இன்னும் சந்தித்துக் கொண்டிருக்கின்ற
ஒரே இனம் என்ற வரலாற்றுச் சாதனைக்கு இலங்கைத் தமிழினம் கின்னஸ் சாதனைப்
புத்தகத்தில் இடம் பெற வேண்டும். இந்த விதிகள் அனைத்தினது மீறல்களையும்
செய்தவர்கள் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்து – பூசி மெழுகி – உடல்
அடக்கம் செய்யும் இடம் தான் புதைகுழிகள். துரையப்பா விளையாட்டரங்கு,
செம்மணி, கைதடி இன்னும் எத்தனையோ? ஏன்றோ ஒருநாள் இவை அனைத்தும்
தோண்டப்படும். அன்று உண்மை அம்பலமாகும் மயானத்துக்குப் போனவர்கள் நாலு
பேருக்கு நன்றி சொன்னால் போதும். ஆனால் புதைகுழிக்குள் போனவர்கள் படைப்
பிரிவினர்களுக்கும் அவர்களுக்கு அதிகாரம் இட்டவர்களுக்கும் பதில் சொல்லும்
வரை போகவே மாட்டார்கள். உடல் தானே புதைக்கப்பட்டது. உயிரில்லையே.

துயிலும் இல்லங்கள்

கல்லறைகள் கருத்தரிக்கும் (காணொளி): “துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்” KallaRai_2009


  • போர்கள் நடந்து முடிவில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நினைவுத்
    தூபிகள் போரிட்ட நாடுகளின் நகரங்களில் முக்கிய இடங்களில் நிறுவப்படும்.
    அவற்றில் போரில் உயிர் நீத்தவர்களின் பட்டியல் செதுக்கப் பட்டிருக்கும்.
    ஆனால் போர் நடந்து முடியும் முன்னரே போரில் மரணித்த மீட்கப் பட்ட
    வீரர்களின் உடல்களைப் புதைத்தும், உடல்கள் மீட்கப்படாத மரணித்த வீரர்களை
    நினைத்தும் வேறு வேறு கிராமங்களில் தேர்ந்தெடுத்த இடங்களில் தூபிகளை
    அமைத்து – எம் வீரர்கள் மரணிக்கவில்லை. அவர்கள் இந்த இல்லங்களில்
    துயில்கிறார்கள். அவர்களின் உடல்கள் இங்கே விதைக்கப்பட்டிருக்கின்றன – என்ற
    ஒரு புதிய சித்தாந்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கினர். இந்தச்
    சித்தாந்தத்தை விளக்கிட ‘விரித்திட விரித்திடப் பொருள் பலவாய் வெளிவந்தன
    வந்தன வந்தனவே” என்று பாரதியின் ‘தம்பி கழற்றிடக் கழற்றிட துணி புதிதாய்
    வளர்ந்தன வளர்ந்தனவே” பாஞ்சாலி சபத வரிகளிடம் அடி எடுக்கலாம் எனத்
    தோன்றுகிறது.

உடல்கள் விதைகள் என்றால் விதைத்த சில நாட்களில் அவை முளைத்துவிடும்.
அதாவது ஒரு போராளி மரணத்தைத் தழுவும் போது பல போராளிகளல்லாதோர் மனங்களில்
அந்த விதை வேர் விடுகிறது. போராளிகள் முளைப்பார்கள். ஓரணு உயிரினம் பலவாக
Multiple Fission of cells என்ற வகையில் பெருகுவது போல. இது மேலே சொன்ன
சித்தாந்தத்தின் ஒரு விரிவு.

அருச்சுனன் அபிமன்யுவுக்குச் சுபத்திரையின் கர்ப்பத்தில் இருக்கும் போதே
வியூகங்களை உடைத்துச் செல்வதைக் கற்பித்தது போல, எத்தனையோ தமிழ்த்
தாய்மாரின் கர்ப்பத்திலேயே ஒரு போராளி மரணத்தைத் தழுவும் போது, அவன்
வித்துடல் துயிலும் இல்லங்களில் தகுந்த மரியாதையுடன் விதைக்கப் படும்போது,
பல போராளிகள் வேர் விடுவார்கள். இது மேலே கூறிய சித்தாந்தத்தின் வேறொரு
விரிவு.

எம் இன விடுதலைக்கு இந்த இளம் வயதில் போராளிகள் வாழ்வை அனுபவிக்காது
உயிரைக் கொடுத்தார்களே! நாம் என்ன செய்தோம்? ஏன்ற வினாவை துயிலும்
இல்லங்களுக்குச் செல்பவர்களின் உயிர்களில் கரைத்துவிடுகிறது. வேர்
விடுகிறது. போராளிகள் மரணிக்கவில்லை. என்றால்தானே மறைந்த போராளிகளின்
உயிர்கள் அங்கு செல்பவர்களின் உயிர்களுடன் உறவாட முடியும். இது மேலே கூறிய
சித்தாந்தத்தின் பிறிதொரு முடிவு.

கல்லறைகள் கருத்தரிக்கும் (காணொளி): “துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்” Maverar-illam%20kilinochi_2009

கல்லறைகள் கருத்தரிக்கும் (காணொளி): “துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்” Maveerar_bild_20090822


  • மாவீரர் துயிலும் இல்லங்கள் இலங்கை இராணுவத்தினரால்
    சிதைக்கப்படுகின்றன. என்ற செய்தி ஒரு புறம் கோயில்கள் இடிக்கப்படுகின்றன
    என்ற வேதனை மறுபுறம். இச்செய்கையின் விளைவு செய்தவர்களுக்குத் தெரியாமல்
    இருக்கிறதே என்ற அவர்களின் அறியாமையைப் பார்த்த பரிதாபம். மறைந்த
    போராளிகளின் விதைகளில் முளைத்த மரங்கள் வெட்ட வெட்டத் துளிர்ப்பவை. அந்த
    மரங்கள் வேரோடு சாய்த்தாலும் நிலத்திலிருந்து முழுமையாகப் பிடுங்கப்படாத
    தும்பு வேர்களிலிருந்தும் முளைப்பவை.


‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி”
ஆனால், போராளிகளோ இருந்தால் ஆயிரம் பொன். இறந்தாலோ பல்லாயிரம் பொன்.
நினைவுகள் சிதைக்கப்பட்டால் கோடி பொன் என்பது புதுமொழி. இல்லை இல்லை. மேலே
கூறிய சித்தாந்தத்தின் இன்னுமொரு விரிவு.


  • ஒரு கோயில் கட்டுவதன் தாக்கத்தை விட அதை இடிப்பதன் தாக்கம் பல மடங்கு
    கூடியது. தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதிக்கு கண்ணகி சிலை உடைக்கப்பட்டதன்
    தாக்கத்தைப் போன்றது. இதற்கு உதாரணமாக குழந்தையின் கையில் கரடிப் பொம்மை
    (Teddy Bear) என்று வேறொருவர் கூறியதைக் கலைஞரால் மெல்லவும் முடியவில்லை.
    விழுங்கவும் முடியவில்லை. எப்படி அது சமிக்கும். இதே நிலையில் தான் ஈழத்
    தமிழ் நெஞ்சங்கள் மாவீரர் துயிலும் இல்லங்கள் இலங்கை இராணுவத்தினரால்
    சிதைக்கப்படுகின்றன. என்ற செய்தியைக் கேட்டுக் கொதிக்கின்றன.


மீண்டும் அந்த மண் மீட்கப்படும். அதே துயிலும் இல்லங்கள்
மீண்டும் நிறுவப்படும். அவை மத வேறுபாடற்ற, சாதி வேறுபாடற்ற,
கோயில்களாகும். மறைந்த போராளிகளின் உயிர்கள் அந்தக் கோயில் தெய்வங்களாகும்.


மயானங்கள் – புதைகுழிகள் – துயிலும் இல்லங்கள் மூன்றும் வெவ்வேறானவை. ஏனெனில் துயிலும் இல்லங்கள் – ஈழத் தமிழரின் கோயில்கள்.

[You must be registered and logged in to see this link.]

கல்லறைகள் கருத்தரிக்கும் (காணொளி): “துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்” Maaveerarnall_20090916
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈழத் தமிழரின் கண்ணீரை துடைக்கும்வரை பட்டம் வேண்டாம்
» மாவீரர் துயிலும் இல்லம் என்பது ஈழக்கனவுக்காக போராடி வீழ்ந்த மாவீரர்களின் தடங்கள் மட்டுமல்ல. எமது இனத்தின் வரலாற்றை எழுதும் கல்லறைகள்.
» கல்லறைகள் வினை திறக்கும். (Maveerar song)
» தமிழரின் மறைந்த இசைக்கருவி
» அளம்பில் துயிலும் இல்லத்தில் பறந்த புலிக்கொடி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum