போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம்: வைகோ Arul11 பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம்: வைகோ Untitl11 பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம்: வைகோ Iiiiii12 பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம்: வைகோ Untitl13 பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம்: வைகோ Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம்: வைகோ

Go down

பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம்: வைகோ Empty பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம்: வைகோ

Post by Admin Sun Aug 19, 2012 8:07 pm

பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம்: வைகோ

[You must be registered and logged in to see this image.]

சென்னை ஆக.19: முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை மனித நேயத்தோடு விடுதலை
செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ வேண்டுகோள்
விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்த அறிக்கை:


தங்களின் பூர்வீகத் தமிழ்ஈழத் தாயகத்தில் கொலைபாதக சிங்களப் பேரினவாத
அரசுகளால் வதைபட்டு இரத்தச் சொந்தங்களைச் சிங்களர் கொடுங்கரங்களில்
பலிகொடுத்து தாய்த் தமிழகம் தங்கள் மனக்காயங்களுக்கு மருந்து போடும்;
இரணங்களைப் போக்கி நிழல் கொடுக்கும் என்று நம்பி உரிமையோடு தமிழகம் வந்த
நம் தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் குறிப்பாக வாலிபப் பருவத்தினர்
இங்கு தமிழகத்தில் போலீசார் விசாரணை என்ற பெயரால் துன்புறுத்தப்படுவதும்
புலிகள் மீதான தடையை நியாயப்படுத்துவதற்காக பொய்வழக்குகள் புனையப்பட்டு
சிறையில் அடைக்கப்படுவதும் கடந்த பல ஆண்டுகளாகவே தொடரப்படும் வாடிக்கையாகி
விட்டது. தமிழ்நாட்டுக்கு வந்துள்ள தங்கள் பெற்றோர் - உற்றாருடன் அகதி
முகாம்களில் உடன்வாழும் ஆறுதலை இழந்து சிறைகளிலும் சிறப்பு முகாம்கள்
எனப்படும் மன உளைச்சல் கூடாரங்களிலும் அடைக்கப்படுவது மனித உரிமைகளுக்கும்,
மனித நேயத்துக்கும் முற்றிலும் எதிரான அடக்குமுறையாகும்.


இப்படித் துன்பப்படும் ஈழத் தமிழ் அகதிகள் நீதிமன்றங்களில் முறையிட்டு
வழக்காடி பிணை விடுதலைப் பெற்றாலும் தமிழகத்தின் உளவுத்துறை கியூ பிரிவு
போலீஸார் மேலும் பொய் வழக்குகள் போட்டு சிறப்பு முகாமெனும் கொட்டடிகளில்
பூட்டுவது அநீதியானது. இரக்கமற்ற அடாத செயலாகும்.

உலகத்தின் பல
நாடுகளுக்கு அகதிகளாகச் செல்லும் ஈழத் தமிழர்களுக்கு அந்த நாடுகளில்
இத்தகைய துன்புறுத்தலோ அடக்குமுறையோ இல்லை. ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக
நாகரிகத்தாலும், இரத்த பந்தத்தாலும் உறவுகளான கோடானு கோடித் தமிழர்கள்
வாழும் தமிழ்நாட்டில் அவர்களைக் கைது செய்வதும் முகாம் சிறைகளில்
பூட்டுவதும் குருதி வடியும் ஈழத் தமிழர்கள் நெஞ்சில் ஈட்டியைப்
பாய்ச்சுவதாகும். இப்படி அடைக்கப்பட்டவர்கள் தங்களை விடுவிக்கக் கோரி தம்மை
வருத்திக் கொண்டு அறவழி உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்தினர். சாகவும்
துணிந்து ஜூன் 16 முதல் ஜூலை 5 வரை 21 நாள் செங்கல்பட்டு சிறப்பு முகாமில்
காலவரையற்ற பட்டினிப் போர் நடத்தினர். அனைவரையும் விடுவித்து திறந்தவெளி
அகதிகள் முகாம்களுக்கு அனுப்பி வைப்பதாக தமிழக அரசின் காவல்துறை,
வருவாய்த்துறை அதிகாரிகளும் வாக்குறுதி தந்தனர். ஆனால், கண்துடைப்பாக ஒரு
சிலரை மட்டும் விடுவித்து விட்டு மற்றவர்களை விடுவிக்காமல் கொடுத்த
வாக்குறுதியையும் காப்பாற்றத் தவறி விட்டனர்.

ஈழத் தமிழரான
செந்தூரன் எனும் இளைஞர், எங்களை விடுவிக்காவிடில் நான் உயிர் விடுவேன் என
உறுதியாக உண்ணாநிலைப் போரைத் தொடர்ந்தபோது நான் உள்ளிட்ட பலரும்
மருத்துவமனையில் இருந்த அவர்களைத் தமிழக அரசு எப்படியும் விடுவிக்கும் எனச்
சொல்லிப் பட்டினிப்போரை நிறுத்துமாறு வற்புறுத்தி கேட்டுக் கொண்டதால்
போராட்டத்தைக் கைவிட்டனர்.

ஈழ வாலிபர் செந்தூரனை தேவக்கோட்டையில்
கைது செய்து ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்கு வந்தார் என வழக்கு பதிவு
செய்து 2011 ஜூலை 18 இல் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்தனர்.

ஆறு மாதம் கழித்து 2012 ஜனவரி 16-இல் தமிழக கியூ பிரிவு போலீசார் அவரைக்
கேரளாவுக்குக் கொண்டு சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா தப்ப முயன்றார் என
கேரள சிறையிலே காவல் வைக்க ஏற்பாடு செய்தனர். இரண்டு மாதங்கள் கழித்து
மார்ச் 14-ஆம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்டவரை கேரள போலீசார் தங்களிடம்
ஒப்படைக்க வேண்டுமெனக் கேட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். இது தமிழக கியூ பிரிவு போலீசாரின்
அக்கிரமமான நடவடிக்கை ஆகும். கடந்த ஜூன் 3-ஆம் தேதி அன்று சட்டவிரோதமாக
தப்ப முயன்றார்கள் என்று கேரளத்தின் கொல்லம் போலீசாரால் கைது செய்யப்பட்ட
151 பேரில் 14 பேர் கேரளத்தில் சிறை வைக்கப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும்
விடுவிக்கப்பட்டு தமிழகத்தின் திறந்தவெளி முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
நேற்றைய தினம் கொல்லம் முதல் வகுப்பு நீதிபதி 12 பேரை விடுதலை செய்து
விட்டார். இன்னும் இரண்டு பேர் விடுதலை செய்யப்பட உள்ளனர். அவர்களைச்
சிறையிலே இருந்து வெளியே கொண்டு வந்து உறவினர்கள் சந்திக்கின்ற வகையில்
தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பதினான்கு பேர்களும் செந்தூரனைப் போல
ஆவணமின்றி இந்தியாவுக்கு வந்தவர்கள்.

தற்போது அவர்கள் தங்கள்
சொந்த நாட்டிற்குச் செல்ல விரும்புவதால் அப்படி அனுப்பிவைக்கவும்
நீதிமன்றம் ஆணையிட்டுவிட்டது. காவல்துறை அடக்குமுறையால் சிறையில் வாடும்
செந்தூரனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். திறந்த வெளிமுகாமிலோ அல்லது
இலங்கைகே செல்ல விரும்பினாலோ அங்கே அனுப்புவதற்கு தமிழக அரசு முன்வர
வேண்டும். தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை, அடக்குமுறையை எதிர்த்து தமிழக
மக்களின் மனச்சாட்சியைத் தட்டுவதற்காக கடந்த ஆறாம் தேதி முதல் உணவை மறுத்து
வருத்திக் கொண்டு செந்தூரன் உண்ணாநிலை அறப்போரை பூவிருந்தவல்லி சிறப்பு
முகாமில் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த முறை அவர் 21 நாட்களுக்கு
மேல் உண்ணாவிரதம் இருந்தபோது விடுவிப்போம் என்ற கூறிய தமிழக அரசு அதற்கு
மாறாக வஞ்சகமாக செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து பூவிருந்தவல்லி
சிறப்பு முகாமில் அடைத்தனர். இந்தக் கொடுமைகளைக் கண்டித்து தான் உயிரைத்
துறப்பதே மேல் என்று முடிவு செய்து நாளை (20.08.2012) முதல் சொட்டுத்
தண்ணீரும் பருகாமல், தியாக தீபம் திலீபனின் வழியில் அறப்போரைத் தொடர்வேன்
என்று அறிவித்துவிட்டார். அவர் உயிருக்கு ஊறுநேருமானால் அதற்கு தமிழக
காவல்துறையும், தமிழக அரசும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

எனவே
ஈழத்து இளைஞர் செந்தூரனை உடனடியாக விடுவித்து திறந்த வெளிமுகாமிற்கு
அனுப்பிவைக்க தமிழக அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தூரனையும்,
பூவிருந்தவல்லி செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வதைபடும் தமிழ் ஈழ
இளைஞர்களையும் விடுவிக்கக் கோரி 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி
அளவில் பூவிருந்தவல்லி சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம் மதிமுக
சார்பில் நடத்தப்பெறும். அதற்கு, தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்க அன்புடன்
வேண்டுகிறேன்.

- என்று் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» "சிறப்பு முகாம்களை இழுத்து மூடும் போராட்டம் சிமான் உள்ளிட்ட 300 பேர் வரை கைது"
» "பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் ஈழத்தமிழ் அகதியொருவர் இரண்டாம் நாளாக பட்டினிப் போராட்டம்"
» இன்று பூந்தமல்லி முகாம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக வைகோ தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு சென்றார்.
» "செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடுங்கள்: தமிழக முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி கோரிக்கை"
» "பூந்தமல்லி சிறையில் 5வது நாளாக தொடரும் செந்தூரனின் பட்டினிப் போராட்டம்"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum