Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
“ஈழமே தீர்வு. அந்த இலக்கை நோக்கியே ஈழத் தமிழர்கள் நகர வேண்டியுள்ளது”
போர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1

•கிளிநொச்சி விசுவமடுவில் மாடு மேய்க்க ஒரு பதினான்கு வயது சிறுவன்
சென்றிருந்தான். அவன் மேய்த்துச்சென்ற மாடு வெசாக் தினத்தை முன்னிட்டு
இராணுவத்தினரால் கட்டப்பட்டு இருந்த வெசாக் கூடுகளைத் தட்டி உடைத்து
விட்டது. அந்தச் சிறுவனை இராணுவத்தினர் துரத்திய பொழுது அவன் ஓடத்
தொடங்கினான். அந்தச் சிறுவன் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு
நடத்தினார்கள். அவன் மிகுந்த காயங்களுக்கு உள்ளானான்.
• இராணுவம்
அப்பாவி மக்களின் தேசத்தில் ஆக்கிரமித்து நின்றால் இது போன்ற சம்பவங்கள்
குறைவில்லாமல் இடம் பெறும். இன்றைய ஈழம் என்பது இலங்கை அதிபர் ராஜபக்சே
நிறுத்தியுள்ள இராணுவத்தால் எதையும் செய்யக்கூடிய கொலைக்களமாக
மாறியிருக்கிறது. ஈழம் என்பது இன்று சிங்கள இராணுவத்தின் கோட்டையாக
மாறியிருக்கிறது. அதனால், இராணுவத்தின் துப்பாக்கிகள் அப்பாவி மக்களுக்கு
எதிராக பெரும் அதிகாரமாக நிற்கின்றன.
•ஈழத்தில் தமிழ் மக்களின்
வாழ்க்கையும் , எதிர்காலமும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. இராஜபக்சே
அரசின் ஈழத்தமிழின ஒடுக்குமுறையை நடைமுறைப்படுத்தும் இயந்திரங்களாக
இராணுவத்தினரே பயன்படுத்தப் படுகின்றனர். ஆனால், இராஜபக்சேவின் ஈழத் தமிழின
ஒடுக்குமுறை அரசியல் பேச்சுகளுக்கும் இராணுவத்தினரின் இன அழிப்புச்
செயற்பாடுகளுக்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை. அவை சிங்களப்
பேரினவாதச் சகதியிலிருந்து வருபவை.
•ஈழத் தமிழர்களை அழித்தல்
என்கிற ரீதியில் ராஜபக்சேவின் அனுமதியும், ஆசீர்வாதமும் எப்பொதும்
இராணுவத்தினருக்கு உண்டு. சிங்களப் பேரினவாத அரசு இன்று ஈழ மக்கள் மீது பல
வகையிலும் தாக்குதல்களை ஆரம்பித்து இருக்கிறது. ஈழத் தமிழர்கள் வந்தேறு
குடிகள் என்று சிங்கள பெளத்த பிக்கு ஒருவர் சொல்வது முதல், இராணுவத்தை வட
கிழக்கிலிருந்து அகற்ற மாட்டேன் என்று ராஜபக்சே சொல்லுவது வரை, ஈழத்
தமிழர்களைப் பெரும் அபாயத்திற்குள் தள்ளியிருக்கிறது.
•தமிழ்
மக்களுக்காகக் குரல் கொடுத்து ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபடும் யாழ்
பல்கலைக் கழகத்தின் மாணவர் ஒன்றியச் செயலாளராக போர் நடந்த காலத்தில் நானும்
செயற்பட்டு இருக்கிறேன். அந்த ஒன்றியத்தின் தற்போதைய செயலாளரான தர்சானந்த்
பரமலிங்கம் என்ற மாணவனை இராணுவம் கடுமையாக தாக்கியிருந்தது. அவன் கடுமையான
காயங்களுடன் இரத்தம் பெருகிய கோலத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
இருந்தான். நான் மாணவர் ஒன்றியத்தில் செயற்பட்ட காலத்திலும் கூட இராணுவம்
தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்தது. உன்னைச் சுடுவோம் என்றும் நாளை மாலை
சுடப் போகிறோம் என்றும் மிரட்டியது. எனக்குப் பின்னர் தலைவர்களாக இருந்த
மாணவர்களில் தவபாலனையும் இராணுவம் கடுமையாக தாக்கியது. கூரிய
இரும்பாயுதங்களால் கடுமையாகத் தாக்கிய பொழுது அவனும் அதிர்ஷ்டவசமாக உயிர்
தப்பியிருந்தான்.
•இந்தத் தாக்குதல்களை இராணுவம் தான் தாக்கியது
என்று சொல்லுவதற்கு எங்களுக்கு யாருமில்லை. இவற்றை மர்மத் தாக்குதல்களாகவே
கண்டிக்கும் சில அறிக்கைகள் மட்டும் வெளிவருகின்றன. ஆனால், இந்தத்
தாக்குதல்கள் குறையாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன என்பது தான் வேதனையான
உண்மை. ஏன் இவ்வாறு இளைஞர்களைத் தாக்க வேண்டும்? இராணுவம் தாக்குதல்
நடத்தியோர் யாரும் ஈழம் வேண்டும் என்று கேட்டிருக்கவில்லை. ஆனால், ஈழத்
தமிழ் இளைஞர்கள் ஈழம் கேட்கக் கூடும் என்று அஞ்சியே தொடர்ந்து ராஜபக்சேவின்
இராணுவம் இளைஞர்களைத் தாக்கி ஒடுக்க நினைக்கிறது.
•யாழ்ப்பாணப்
பல்கலைக் கழகத்தில் இளைஞர்கள் செல்லும் தெருக்களில் ஈழம் வேண்டாம் என்று
ஒரு சுவரொட்டியை இராணுவம் ஒட்டி இருந்தது. இந்த அச்சம் முள்ளிவாய்க்கால்
போர் நடந்து கொத்துக் கொத்தாய் மக்கள் கொல்லப்பட்டது முதல் இன்றுவரை
இராணுவத்தினரிடையே பெரும் மனக்காய்ச்சலை உருவாக்கி இருக்கிறது.
•கிளிநொச்சிக்கு அருகில் உள்ள முறிகண்டி என்ற இடத்தில் வசிக்கும் மக்கள்
தங்கள் நிலத்திற்காக இராணுவத்திற்கும் இராஜபக்சே அரசிற்கும் எதிராக போராடி
வருகிறார்கள். அந்த மக்கள் எங்கள் கிராமம் முழுவதையும் விடுவியுங்கள் என்று
கோரினார்கள். உங்கள் நிலத்தை கேட்டோமா? உங்கள் நிலத்தை யாருக்கும்
விட்டுக் கொடுப்பீர்களா? எங்கள் நிலத்தை எங்களிடம் தாருங்கள் என்று அனலாய்
தகிக்கும் வார்த்தைகளை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தாய் இராணுவத் தளபதி
பிரிகேடியர் ரேணுகா ரொவலவைப் பார்த்துக் கேட்ட பொழுது அவர் பதில் சொல்ல
முடியாமல் நின்றார்.
•எங்களுடைய நிலத்தையும் உயிரையும்
பறிக்கவும், அழிக்கவும் ராஜபக்சேவும் இராணுவமும் இன்றைய நிகழ்ச்சி நிரல்களை
அமைத்திருக்கிறது. இதுதான் இன அழிப்பு. ஆனால், இதற்கு இராஜபக்சே அரசு வேறு
சில பெயர்களை வைத்திருக்கிறது. நிலத்திற்கான போராட்டங்கள் கிராமத்திற்கு
கிராமம், நகரத்திற்கு நகரம் நடக்கின்றன. ஈழத்தின் பல்வேறு பகுதிகளில்
முகாமிட்டுள்ள இராணுவத்தினர் அவற்றை விடுவிக்க தயங்குவதுடன் தொடர்ந்தும்
மக்களின் இடங்களைக் கைப்பற்றி முகாம்களை அமைக்க முற்படுகிறார்கள்.
•தமிழ் அரசியல்வாதிகள்தான் ஈழம் கேட்கிறார்கள் என்று இராணுவத்தினர் தமது
சுவரொட்டியில் எழுதியுள்ளனர். அதன் மூலம் தமிழ் அரசியல்வாதிகளை இனவாதிகளாக
சித்தரித்துவிட்டு அவர்களின் கோரிக்கையை அரசியல் ரீதியாகப்
பலவீனப்படுத்துவதே இதனுடைய நோக்கம். இப்போது ஈழம் என்று எதை சிங்கள அரசு
கருதுகிறது என்பதே வியப்பானது? வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் ஈழம்
அமைப்பதற்கு ஒப்பானது என்று சிங்கள இனவாதிகள் கூச்சலிடுகிறார்கள்.
ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்குரிய தீர்வை ஒரு போதும் சிங்கள அரசு முன்
வைக்கப்போவதில்லை.
•கிழக்கு மகாண சபை தேர்தல் நடந்த பொழுது அந்தத்
தேர்தலை நிராகரிக்குமாறு விடுதலைப் புலிகள் அறிவித்தார்கள். அரசாங்கத்தின்
பொம்மைக் கட்சிகள் போட்டியிட்டு போட்டியின்றி வென்று ஆட்சி அமைத்தன.
இப்பொழுது யுத்தம் முடிந்து மூன்றாண்டுகள் அரசாங்கம் வடக்கு கிழக்கில்
செய்த அநீதிகள் மத்தியில் தமிழர் தாயக ஆட்சிக்கு தேர்தல் நடத்தினால் அதில்
ராஜபக்சே அரசாங்கம் படுதோல்வியடையும் என்பது அவர்களுக்கே தெரியும்.
•இப்பொழுது தமிழ் மக்களுக்கு உண்மையுணர்வுடன் பணியாற்றும் ஒரு
கலெக்டரைக்கூட பணியமர்த்தக் கூடாது என்ற திட்டத்தில் ராஜபக்சே
அரசுஇருக்கும் போது ராஜபக்சேவின் ஆட்சியில் தமிழர்களுக்கு என்ன அதிகாரம்
வழங்ககப்படும்? எந்த அதிகாரங்களையும் ராஜபக்சேவிடம் ஈழத் தமிழர்கள்
எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஈழத் தமிழர்கள் தனி ஈழம் கோரவில்லை என்று
இந்திய எம்.பி.க்கள் குழு இந்தியாவில் வெளியிடும் செய்திகள் ஈழத் தமிழ்
மக்களை அதிர்ச்சியடைய வைக்கக் கூடியது. அந்தக் கருத்து ஈழத்தமிழ் மக்கள்
இத்தனையாண்டுகள் விடுதலை வாழ்வுக்காக செய்த தியாகங்களை மறைக்கின்றன.
அத்துடன் இதே காலத்தில் சிங்களப் பேரினவாத அரசு தமிழ் மக்கள் மீது நடத்திய
இனப்படுகொலை அழிவு அநீதிகளை மறைத்து நியாயப்படுத்துபவை. இன்றும்
இராஜபக்சேஅரசு ஈழத் தமிழ் மக்களை எங்கள் நிலத்திலிருந்து இல்லாமல்
செய்வதற்கு மேற்கொள்ளும் இன அழிப்பை மூடி மறைக்க இது உதவுகிறது.
•ஒன்றுபட்ட இலங்கையில் வாழ்தல் என்பது ஈழத் தமிழர்களை அழிக்கும் ஒரு
அரசியல் திட்டமே. இலங்கை அரசிடம் தமிழர்களுக்கு எதையும் பகிரும் எண்ணம்
இல்லை. மாறாக அழிக்கும் எண்ணமே உள்ளது. அப்படி இருக்கையில்
எல்லாவற்றுக்கும் ஈழமே தீர்வு. அந்த இலக்கை நோக்கியே ஈழத்தமிழர்கள் நகர
வேண்டியுள்ளது.
தகவல் :- தீபச்செல்வன்.
நன்றி :- வடக்குவாசல் மற்றும் சங்கொலி.

Similar topics
» ஈழத் தமிழர்கள் / ஈனத் தமிழர்கள் எவ்வழிகளினால் வீழ்த்தப்பட்டோமோ அவ்வழிகளினால் எழுவோம்.
» ''ஒரு இனத்தை அழிக்க அந்த இனத்தின் புத்தகங்களைக் கொளுத்துங்கள்'' என்பார்கள்.
» 20 ஆண்டுகளுக்குப் பிறகு அரச அனுமதியோடு சென்னையில் ஒன்று கூடும் ஈழத் தமிழர்கள்!
» "ஈழத் தமிழர்கள் விரும்பும் வெளிநாடுகளுக்கு அரச செலவில் அனுப்ப வேண்டும் ".. விஜயகாந்த்.
» நம்புங்கள் இது தமிழ்நாடுதான்.. இனப்படுகொலையில் இருந்து தப்பி அடைக்கலம் தேடி வந்த பல ஈழத் தமிழர்கள் பூந்த மல்லி எனும் இடத்தில் இப்படித்தான் பல வருடங்களாக அடைத்து வைக்கபபட்டுள்ளார்கள்..
» ''ஒரு இனத்தை அழிக்க அந்த இனத்தின் புத்தகங்களைக் கொளுத்துங்கள்'' என்பார்கள்.
» 20 ஆண்டுகளுக்குப் பிறகு அரச அனுமதியோடு சென்னையில் ஒன்று கூடும் ஈழத் தமிழர்கள்!
» "ஈழத் தமிழர்கள் விரும்பும் வெளிநாடுகளுக்கு அரச செலவில் அனுப்ப வேண்டும் ".. விஜயகாந்த்.
» நம்புங்கள் இது தமிழ்நாடுதான்.. இனப்படுகொலையில் இருந்து தப்பி அடைக்கலம் தேடி வந்த பல ஈழத் தமிழர்கள் பூந்த மல்லி எனும் இடத்தில் இப்படித்தான் பல வருடங்களாக அடைத்து வைக்கபபட்டுள்ளார்கள்..
போர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum