போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
<உணர்வுத்துளிகள்> (நன்றி - பாரிஸ் தினமுரசு) Arul11 <உணர்வுத்துளிகள்> (நன்றி - பாரிஸ் தினமுரசு) Untitl11 <உணர்வுத்துளிகள்> (நன்றி - பாரிஸ் தினமுரசு) Iiiiii12 <உணர்வுத்துளிகள்> (நன்றி - பாரிஸ் தினமுரசு) Untitl13 <உணர்வுத்துளிகள்> (நன்றி - பாரிஸ் தினமுரசு) Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

<உணர்வுத்துளிகள்> (நன்றி - பாரிஸ் தினமுரசு)

Go down

<உணர்வுத்துளிகள்> (நன்றி - பாரிஸ் தினமுரசு) Empty <உணர்வுத்துளிகள்> (நன்றி - பாரிஸ் தினமுரசு)

Post by Admin Sat Aug 18, 2012 11:29 am

<உணர்வுத்துளிகள்> (நன்றி - பாரிஸ் தினமுரசு)

எமது தேசவிடுதலைப் போரின் இணையற்ற வீரமும், ஒப்பற்ற ஈகமும் நாம்
நன்கறிந்தவையே. வெடிசுமந்த மில்லராக.. விடமுண்ட செல்வமாக... கடல் நீந்தி
கலம் தகர்த்த அங்கயற்கண்ணியாக... உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகி
திலீபனாக இன்னும் எத்தனையோ மாவீரர்களாக அவர்தம் தீரமும் தியாகமும்
ஒப்பபிடமுடியா உன்னதங்கள்.

இவற்றிற்கு அப்பால் இப்போராட்ட
வாழ்வியலில் எமது இளைய தலைமுறை வெளிக்காட்டிய உரமிக்க உணர்வுகள் அநேகம்
இன்னும் அறியப்படதவையே. ஒப்பீட்டு ரீதியில் பார்க்கும் போது, இவை சிறு
துளிகளாகத் தெரியலாம். எனினும் தமது முன்னிருபதுகளையே எட்டியிராத இந்த இளைய
தலைமுறையின் உள்ளத்து உணர்வுகள் எப்படி இருந்தன என்பதற்கு இச்சிறு துளிகள்
இரத்த சாட்சியங்கள்.

இவை கற்பனையில் உதித்த கதைகளல்ல. பெற்ற தகவல்களில் இருந்து பிறந்தவையுமல்ல. உடனிருந்த நாட்களில் உணர்வில் கலந்தவை..


துளி 1

அது மன்னார் களமுனை. பரந்த வெளிகளையும் ஆங்காங்கே விடத்தல் புதர்களையும்
கொண்டிருந்த களப்பரப்பு. தொடர்ந்து பெய்துகொண்டிருந்த பெருமழையால், ஆளுயர
மண்ணனை கரைந்துபோய் அரையடி உயரத்தில் கிடந்தது. காப்பரன்கள் முட்டத்
தண்ணீர்... நகர்வகழி நீர் நிரம்பி வழிந்தோடிக் கொண்டிருந்தது. தூக்கம்
தொலைத்த கண்களுடன் நனைந்த கோழிகளாய் போராளிகள்.

தொலைவில்
எதிரியின் உளவியல் ஒப்பாரி ஒலிபெருக்கியில் ஒலித்துக்கொண்டிருந்தது.
இடையிடை 60 மி.மீ எறிகணை முதல் ஆட்டிலறி வரை ...எதிரியின் டாங்கிகளும் தமது
பங்கிற்கு தரை மட்டத்திற்கு மேல் தெரியும் எல்லாவற்றையும்
தகர்த்துத் தள்ளிக்கொண்டிருந்தன. வழமையான செயற்பாடு போல் தோன்றிய நிகழ்வுகள் திடீரென மாற்றமடைகின்றன.

அந்த விடிகாலைப் பொழுதில் எதிரியின் மற்றுமொரு முன்னகர்வு
ஆரம்பிக்கின்றது. என்றுமில்லாத சூட்டாதரவுடன் எதிரியின் பாரிய முன்னகர்வு.
இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்ற முயற்சிகள் யாவற்றையும் அந்த
இளம் போராளிகள் தம் உயிர் கொடுத்து உதிரம் சிந்தி முறியடித்திருந்தார்கள்.

இம்முறை எப்படியாவது அப்பகுதியை கைப்பற்றிவிடவேண்டும் என்ற முழு முனைப்புடன் படைநகர்வு இடம்பெறுவதுபோல் தோன்றியது.

வழமைபோல், அந்த சிக்கலான காப்பரண் பகுதிக்கு அவள் பொறுப்பாக
விடப்பட்டிருந்தாள். ஆபத்தான இறுக்கமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளக் கூடிய
ஆற்றலும், துணிச்சலும் அவளிடம் நிரம்பவே இருந்தன.
அவற்றை அந்தக் களமுனையில் அவள் ஏலவே நிரூபித்திருந்தாள்.

உறுதியான உடல்வலுவும் மனத்திடமும் மட்டுமன்றி, ஆயுதங்களையும்
படைத்துறைசார் தொழிநுட்பக் கருவிகளையும் நன்கு கையாளக்கூடிய திறனும்
அவளிடம் மிகுந்திருந்தது. எந்த இறுக்கமான சூழ்நிலையிலும் கட்டளைப் பீடம்
கோரும் களநிலமைகளை, துல்லியமாக உரியவகையில் வழங்குவதும் அவளின்
சிறப்பம்சமாகும்.

இத்தனைக்கும் இவள் ஒரு மூத்த போராளியோ, நீண்ட
களமுனைப் பட்டறிவு கொண்டவளோ அல்ல. தனது சகோதரன் இத்தேச விடுதலைப் போரில்
வீரச்சாவடைய, இரண்டு வருடங்களுக்கு முன்பே தன்னை இப்போராட்டத்தில்
இணைத்துக் கொண்டவள். மன்னார் சமர்முனையே அவளின் முதற்களம் .


கடும் குளிரில் விறைத்துப் போயிருந்த போராளிகள் சூடாகி எதிர்த்தாக்குதலில்
இறங்குகிறார்கள். இவளின் காப்பரண்பகுதி நோக்கியே பிரதான நகர்வு
மேற்கொள்ளப்படுகிறது. எமது எறிகணைச் சூட்டாதரவை நெறிப்படுத்தியபடி எதிரிகளை
நோக்கித் தாக்குதல் நடத்துகிறாள்.

கட்டளைப் பீடம் களநிலவரம் கோருகிறது.
"வழமை போலில்லை பெருமெடுப்பு" என்றவள் நிலைமைகளை பரிபாசையில் விளக்குகிறாள்.

சற்று நேரத்தில் "என்னிலிருந்து 75 மீற்றரில் வந்து விட்டார்கள்..
பக்கவாட்டுக் காப்பரன்கள் அமைதி யடைந்துவிட்டன" என கட்டளைப் பீடத்திற்குத்
தெரியப்படுத்துகிறாள்.

சற்று நேரத்தில் "50 மீற்றரில்....தற்போது நான் மட்டுமே நிற்கிறேன்"

"நல்லா கிட்டவந்துட்டானுகள்... நிறையப்பேர்... என்னுடைய நிலைக்கு விரைவாய் மோட்டரை இணையுங்கோ"

"நான் சொல்லேக்க அனுப்புங்கோ"

"சரி".... கட்டளைப்பீடம்

"இப்ப அடியுங்கோ"

"நீங்கள் இப்போது எங்கே" கட்டளைப் பீடம்.

"நான் அதே இடந்தான்... விரைவாய் அடியுங்கோ நிறையப்பேர் சாவானுகள்"

"நீங்கள் உடனே மை-10௦ க்கு வாருங்கள்."... கட்டளைபீடம்

"இல்லை. என்னைச்சுற்றி முழுக்க அவர்கள்.... விரைவாய் அனுப்புங்கோ"

“எனைப்பற்றி யோசிக்கவேண்டாம் விரைவாய் அடியுங்கோ"

ஒன்றிணைக்கப்பட்ட எறிகணைகள் இலக்கு நோக்கி ஏவப்படுகின்றன.

அன்று கிளிநொச்சி படைத்தளத் தகர்ப்பில் லெப்.கேணல் செல்வி....

இன்று மன்னர் களத்தில் லெப். வல்லவள்...


<கீர்த்தி>
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum