போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
02. 1958ஆம் ஆண்டு;டு இனக்கொலை Arul11 02. 1958ஆம் ஆண்டு;டு இனக்கொலை Untitl11 02. 1958ஆம் ஆண்டு;டு இனக்கொலை Iiiiii12 02. 1958ஆம் ஆண்டு;டு இனக்கொலை Untitl13 02. 1958ஆம் ஆண்டு;டு இனக்கொலை Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

02. 1958ஆம் ஆண்டு;டு இனக்கொலை

Go down

02. 1958ஆம் ஆண்டு;டு இனக்கொலை Empty 02. 1958ஆம் ஆண்டு;டு இனக்கொலை

Post by Admin Thu Aug 09, 2012 9:25 pm

02. 1958ஆம் ஆண்டு;டு இனக்கொலை
[You must be registered and logged in to see this image.]
1958ஆம்
ஆண்டு இனக்கொலை என்பது திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. இதற்குப் பலமான பின்புலம்
ஒன்றுஇருக்கிறது. 1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட முப்பத்துமூன்றாம் இலக்கச்
சிங்களம் மட்டும் சட்டம்ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாகத் தமிழர்
தரப்பினர் 1956ஆம் ஆண்டு ய10ன் மாதம் ஐந்தாம் திகதி
கொழும்பு காலி முகத்திடலில் சிங்களம் மட்டும் சட்டத்திற்கு எதிராகச் சத்தியாக்கிரகப் போராட்டத்தைநடத்தினார்கள்.

இந்தப் போராட்டம் சிங்களக் காடையர்களால் வன்முறை பிரயோகிக்கப்பட்டு
ஒடுக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக 1957ஆம் ஆண்டு தமிழர் தரப்பினர்
திருமலைக்குப் பாதயாத்திரை சென்று அங்கே ஒரு மாநாடு நடாத்தினார்கள்.
பண்டாரநாயக்கா அரசிற்கு ஒரு வருட காலக்கெடு கொடுத்து அதற்குள் தமிழ்

மொழிக்குச் சமவுரிமை கொடுக்கவேண்டும் என்றும் தமிழ்ப் பிரதேச
அபிவிருத்திகளுக்காக பிராந்திய சபைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் திருமலை
மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தவேண்டுகோளுக்கு அமைய பண்டாரநாயக்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நேரடி நடவடிக்கையில்ஈடுபடுவதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதனடிப்படையில்
தான் அப்போதைய பிரதமர் S.W.R.D பண்டாரநாயக்கா தந்தை செல்வநாயகத்தோடு ஒரு
இணக்கப்பாட்டிற்கு வந்தார். இதன் விளைவாக 26.07.1957அன்று தந்தை
செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக் கட்சியோடு S.W.R.D. பண்டாரநாயக்கா ஒரு
உடன்படிக்கை செய்தார்.

இதுவே புகழ்பெற்ற 1957 பண்டா - செல்வா
உடன்படிக்கையாகும்.இந்த உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்போதைய
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜே.ஆர் ஜெயவர்த்தனா கண்டிக்குப் பாதயாத்திரை
போனார். அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சியானது _முதல் காலடி - First Step
என்ற வெளியீட்டையும் வெளியிட்டு இனவாதப் பரப்புரையில் ஈடுபட்டது. ஐக்கிய தேசியக்
கட்சியின் பரப்புரை நாளேடான சியரட்ட- மிக மோசமான இனவாதப் பரப்புரையைத் தமிழருக்கு எதிராக மேற்கொண்டது.

கண்டிக்குப் பாதயாத்திரை போகப் புறப்பட்ட ஜே.ஆர் இன் பாதயாத்திரை
இம்புள்கொட என்ற இடத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த
ளு.று.சு.னு பண்டாரநாயக்கா தலைமையில் வந்த இன்னொரு குழுவால் தடுத்து
நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் பண்டாரநாயக்காவைப் பதவிக்குக்
கொண்டுவந்த பிக்கு பெரமுனவைச் சேர்ந்த பௌத்த பிக்குமாரும்ää ஜாதிக விமுக்தி
பெரமுனவைச் சேர்ந்த வெலிமடை எம்.பி கே.எம்.பி இராஜரட்னாவும் கொழுமபு;
ஆனந்தாக் கல்லூரி அதிபர் மெத்தானந்த போன்றவர்களும் சிங்கள தேசிய
முன்னணியைச் சேர்ந்த ஆர்.ஜி. சேனநாயக்கா போன்றவர்களும் பண்டா -செல்வா
ஒப்பந்தத்தைக் கிழித்தெறியுமாறு பண்டார நாயக்காவுக்கு அழுத்தம்
கொடுத்ததுடன் பிரதமர் பண்டாரநாயக்காவின் கொழும்பு ஏழு றொஸ்மீட் பிளேசிலுள்ள
அவரது இல்லத்திற்கு முன்னால் பண்டா - செல்வாஉடன்படிக்கையைக்
கிழித்தெறியுமாறு முழக்கமெழுப்பினார்கள்.

அவர்களது முழக்கத்திற்கும்ääவேண்டுகைகளுக்கும்
அடிபணிந்த பண்டாரநாயக்காää தந்தை செல்வநாயகத்துடன் செய்துகொண்ட பண்டா
-செல்வா உடன்படிக்கையைக் கிழித்தெறிந்தார். இதனைத் தொடர்ந்து 1958ஆம் ஆண்டு
மே மாதம்
இருபத்துநான்குää இருபத்தைந்துää இருபத்தாறு ஆகிய திகதிகளில்
தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட மாநாட்டுக்கான ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டன.

வவுனியா மாநாட்டிற்கு வருகைதந்து கொண்டிருந்த
மட்டு -அம்பாறையைச் சேர்ந்த தமிழரசுக் கட்சித் தொண்டர்கள் பயணம் செய்த
தொடருந்து பொலநறுவை மாவட்டத்தில் கிங்குராகொட என்னும் தொடருந்து
நிலையத்தில் வைத்து வழிமறிக்கப்பட்டுச் சிங்களக் காடையர்களால்
தாக்கப்பட்டார்கள்.
இதே காலப்பகுதியில் நுவரெலியா மாநகரசபையின் மேயர்
செனிவிரட்ண மட்டக்களப்புக்குச் சென்றுகொண்டிருந்தபோது மட்டக்களப்பில்
வைத்து தனிப்பட்ட காரணங்களுக்காகக் கொல்லப்பட்டார்.


பிரதமராக இருந்த பண்டாரநாயக்கா இதைப் பெரிதுபடுத்தி இலங்கை வானொலியில்
பரப்புரை செய்தார்.இதைத் தொடர்ந்து தீவு முழுவதும் தமிழர்களுக்கு எதிரான
இனக்கொலை வெடித்தது. தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பல பெண்கள்
பாலியல்வல்லுறவிற்குட்படுத்தப்பட்டார்கள்.
தமிழ் மக்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பாணந்துறையில் சிறீ கதிர்
வேலாயுத சுவாமி கோயிற் குருக்கள் ஆலயத்திற்குள் வைத்து உயிரோடு
கொழுத்தப்பட்டார்.

பொலநறுவை அரசினர் வைத்தியசாலையில் சிங்கள
மக்களுக்குச் சிகிச்சை அளித்த தமிழ்த் தாதியான பாலிப்போடி என்பவரின் மனைவி
பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டார்.

இவ்வளவும் நடந்தும் பண்டாரநாயக்காவினுடைய அரசு அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தவோ
அல்லது ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தவோ இல்லை. தமிழர்கள் தாக்கப்படுவதாக புகார்
செய்யப்பட்டபோதும் பண்டாரநாயக்கா தமிழர்கள் பட்டு அனுபவிக்கட்டும்- என்று
கூறினார். இந்த இனக்கொலையின் போது தமிழ் மக்களின் பல வீடுகள் தீ வைத்துக்
கொழுத்தப்பட்டன. பல தமிழ்க் குழந்தைகள் கொதிக்கும் தாரில் போடப்பட்டார்கள்.
மேலும் இக்கட்டத்தில் இலங்கையில் தங்கியிருந்த பிரபல ஆங்கிலப்
நாளேட்டாளரான டாசி வித்தாச்சி அவர்கள் பண்டாரநாயக்கா அரசினால்
நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பின் தனது தாய் நாட்டிற்குச் சென்று அவசரகாலச் சட்டம் ஐம்பத்தெட்டு
என்ற நூலை எழுதி வெளியிட்டார்.

இன்று இந்நூல் உலகப் புகழ பெற்ற நூலாகக் கருதப்படுகின்றது.இக்காலத்தில்
எல்லாமாக முன்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக
அக்காலகட்டத்தில் வெளியான நாளேடுகள் வாயிலாக அறியமுடிகின்றது. பல
நூற்றுக்கணக்கான மக்கள் வெட்டி அங்கவீனப்படுத்தப்பட்டார்கள். தமிழ் மக்களது சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டனää அவர்களது
உடைமைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இக்காலகட்டம் பற்றி எத்தகைய
விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எத்தகைய
நிவாரணமோ நட்டஈடோ வழங்கப்படவில்லை.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum