Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
"உலகின் இரண்டு மிகப்பெரிய ஜனநாயக நாடுகளின் திருவிளையாடல்கள்!- அனலை நிதிஸ் ச. குமாரன்"
போர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1

தலைமையுடன் அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்ட விடுதலைப்புலிகளை மேலும்
இரண்டு ஆண்டுகள் தடை செய்யும் சட்டத்தை நீடித்தது உலகின் முதலாவது பெரிய
ஜனநாயக நாடான இந்தியா. உலகின் இரண்டாவது ஜனநாயக நாடு என்று கூறும்
அமெரிக்காவோ இந்தியா ஒரு மாதத்துக்கு முன்னர் செய்த காரியத்தையே செய்து
அறிக்கையையும் விட்டுள்ளது.
ஒரு காலத்தில் அமெரிக்காவை
எதிர்த்த இந்தியா தற்போது அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாகவும் சர்வதேச
தீவிரவாதிகளுக்கெதிரான சர்வதேச போரின் முன்னணி நாடாகவும் திகழ்கின்றது.
வேடிக்கையென்னவெனில் விடுதலைப்புலிகளினால் அமெரிக்காவின் இறையாண்மைக்கு
எந்தவித பாதிப்பும் வந்துவிடாது என்று அறிந்தும் விடுதலைப்புலிகளை
தொடர்ந்தும் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் வைத்துள்ளது அமெரிக்கா.
ஒரு அமைப்பை உலக அரங்கில் முன்நிறுத்துவதற்காகவே குறித்த அமைப்புக்களின்
பெயர்களைக் கூறுவதென்பது நியதி. அமெரிக்கா போன்ற மூத்த ஜனநாயக நாடுகள்
பின்பற்றும் யுக்திகளும் இவையே.
ஒரு அமைப்பை வளர்ப்பது பின்னர்
அதற்கு எதிரான போர் என்ற காரணத்தை முன்வைத்து நாடுகளை கைப்பற்றுவதுவே
தற்போது கடைப்பிடிக்கப்பட்டுவரும் யுக்தி.
ஒரு காலத்தில் நாடுகளை
வணிக நலன்களுக்காக கைப்பற்றினர் ஐரோப்பியர்கள். அதன் பின்னர் தமது
பிரசன்னத்தை உலகம் அனைத்தும் பரப்பினார்கள். தற்போது இராணுவக் காரணங்களை
முன்வைத்தே நாடுகளை கைப்பற்றும் வேலைகள் இடம்பெற்று வருகிறது.
இந்தியாவே அனைத்திற்கும் காரணம்
விடுதலைப்புலிகளை சர்வதேச அளவில் தடை செய்ய இந்தியாவே காரணம். ராஜீவ்
கொலையை காரணம் காட்டி விடுதலைப்புலிகளை தடைசெய்தது இந்திய நடுவண் அரசு.
இதன் தொடர்ச்சியாக பல நாடுகள் விடுதலைப்புலிகளை தடை செய்தன.
இந்தியாவும் ஒவ்வொரு இரண்டு வருடத்துக்கு ஒருமுறை இந்திய மக்களுக்கு
ஞாபகப்படுத்த ஏற்கனவே தடைசெய்யப்பட்ட அமைப்பை மீண்டும் அத் தடையை
புதுப்பிக்கும் அறிக்கை வெளிவரும்.
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும்
பொட்டு அம்மான் ஆகியோரே முக்கிய இரு பிரதான குற்றவாளிகளாக பிரகடனப்படுத்தி
அவர்களை இந்தியா கொண்டுவந்து தனியாக விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது
இந்தியாவின் நீதித்துறை.
இருபது ஆண்டுகள் கடந்த பின்னரும்
மீண்டும் ராஜீவ் கொலையை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்காரர்களின் உண்மை
முகம் என்னவென்பது இதிலிருந்து புரியும்.
ஒருவர் இறந்துவிட்டால்
அவருடைய ஆத்மாவையாவது அமைதியாக இருக்க விடவேண்டும். அதைவிடுத்து இந்த
காங்கிரஸ் அரசியல்வாதிகள் ராஜீவை மீண்டும் வம்புக்கு இழுத்து தமிழர்களை
அரக்கர்கள் என்கிற பட்டத்தை வழங்க முற்படுகிறார்கள் போலும்.
நடந்த ஒரு சம்பவத்துக்காக பல்லாயிரம் மக்களை காவு கொண்டது இந்திய அரசு.
இதற்கு துணை போனது அமெரிக்க அரசு. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும்
ஆட்டும் வேலையையே அமெரிக்கா தொடர்ந்தும் செய்து கொண்டுள்ளது.
2004-இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டது
ஈழத் தமிழர்களே. அவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதை விடுத்து சிங்கள அரச
கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு அமெரிக்காவின் இரண்டு முன்னாள்
ஜனாதிபதிகள் பயணம் செய்து சிங்கள அரசுக்கு பல்லாயிரம் கோடிகளை உலக நாடுகள்
வழங்க காரணமாக இருந்ததன் காரணமோ என்னவோ இந் அனர்த்தத்துக்கு பின்னர்
விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க மகிந்த ராஜபக்சவுக்கு வீரம்
வந்தது போலும்.
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும்
அமெரிக்காவுக்கு இலங்கையில் தமிழர் சுதந்திரத்துடன் வாழ வேண்டுமென்பது ஒரு
விடயமே இல்லை. இலங்கை விடயத்தில் இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன
என்பதுதான் அமெரிக்காவின் கொள்கை.
இந்து சமுத்திரப்
பிராந்தியத்தில் தனது அகண்ட காலை பதித்து நிற்கும் அமெரிக்காவுக்கு
இலங்கையை அண்டிய பிரதேசத்தில் அமைதி நிலவ வேண்டும். அதனூடாக பூகோள அரசியல்
மற்றும் இராணுவ திட்டங்களை மேற்கொள்ள வசதியாக இருக்கும் என்பதே
அமெரிக்காவின் நோக்கம். அதற்காக அமெரிக்கா எதனையும் செய்யத் தயாராகவே
இருக்கிறது.
கோத்தபாயவுடன் நேசம் கொண்ட நாடுகள்
இலங்கையின்
அரச பயங்கரவாதியென வர்ணிக்கப்படும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச
சமீபத்தில் கூறிய அதே கருத்தையே அமெரிக்கா மற்றும் இந்தியா கூறியுள்ளன.
இதன் மூலமாக இந் நாடுகள் கோத்தபாயவை தமது தலையில் வைத்தே ஆடுகிறார்கள்
என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.
சமீபத்தில் கோத்தபாய
கூறுகையில், “விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் வலுவான
நிலையில் காணப்படுகின்றது. விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள், புலி
ஆதரவாளர்கள், புலி அனுதாபிகள் உள்ளிட்ட தரப்பினர் தொடர்ச்சியாக பல்வேறு
வழிகளில் பல்வேறு நாடுகளில் இயங்கி வருகிறார்கள். ஜனநாயகக் கட்டமைப்பில்
இணைந்து கொண்டவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஆயுததாரிகள் என பல்வேறு
போர்வையில் புலி ஆதரவாளர்கள் செயற்பட்டு வருகிறார்கள்” என தெரிவித்தார்.
கோத்தபாயவின் அறிக்கைக்கு சற்றும் சளைக்காமலேயே அமெரிக்க இராஜாங்கத்
திணைக்களத்தின் அறிக்கை அமைந்துள்ளது. 2011-ஆம் ஆண்டுக்கான அமெரிக்க
இராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பை வெளிநாட்டுப்
பயங்கரவாத அமைப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாக 2009-ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட
போதிலும், புலிகளின் நிதி வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக
இராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2011-ஆம் ஆண்டு முழுவதும் விடுதலைப்புலிகளின் நிதி வலையமைப்பு இயங்கி
வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் சர்வதேச மற்றும்
நிதி வலையமைப்புக்கள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றமை தொடர்பில் இலங்கை
அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் நிதி வலையமைப்பை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது
விடுதலைப்புலிகள் இலங்கையில் தற்போதைக்கு மீள ஒழுங்கிணையக் கூடிய அபாயம்
கிடையாது எனவும் கூறியுள்ளது அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம். வேடிக்கை
என்னவெனில், மீள ஒழுங்கிணைய முடியாத இயக்கத்துக்கு எதற்கு மீண்டும் தடை
என்கிற கேள்வியே வலுவாக எழுகிறது.
அமெரிக்கா மற்றும் இந்தியாவின்
செயற்பாடுகளுக்கும் இலங்கை அரசின் முக்கிய தலைவர்களின் பேச்சுக்களுக்கும்
எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்பதனையே அமெரிக்க, இந்திய மற்றும்
கோத்தபாயவின் அறிக்கைகள் அமைந்துள்ளன.
தண்டனை அளிக்கப்பட வேண்டிய
நபர்களுடன் கூத்தாடும் உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகள்
சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளை செய்வது தமக்குத் தாமே கரி பூசுவது
போன்றது.
அநீதி மறுக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுடன்
இணைந்து அவர்களுக்கு விடுதலையை பெற்றுத்தர வேண்டிய நாடுகள் குறிப்பாக
இந்தியா மற்றும் அமெரிக்கா தாம் வரலாற்றில் கடந்து வந்த பாதைகளை மறந்து
செயற்படுவது உலக மனித குலத்திற்கே ஒவ்வாத செயல்.

Similar topics
» கிழக்கில் ஈழவர் ஜனநாயக முன்னணியின் தலைவர் பிரபாவின் வீட்டின் மீது குண்டுதாக்குதல் பின்ணணியில் பிள்ளையான்.
» சிறிலங்கா அரசின் ஆள்கடத்தல் பிரிவு இரண்டு தமிழ் இளைஞர்களைக் கடத்தியுள்ளது.
» நீதி கேட்டு ஐநா சபையில் கண்ணீர்: உலுக்கப்பட்ட உலகின் மனச்சாட்சி
» "கல்லணை" - வரலாறுகள் கடந்து நிற்கும் சரித்திரம் .. உலகின் மிகப் பழமையான அணை !
» உலகின் எந்த நாட்டு ராணுவத்திலும் செய்யாத ஒரு காரியத்தை தமிழீழ பிரபாகரன் செய்தார்: அறிவுமதி.
» சிறிலங்கா அரசின் ஆள்கடத்தல் பிரிவு இரண்டு தமிழ் இளைஞர்களைக் கடத்தியுள்ளது.
» நீதி கேட்டு ஐநா சபையில் கண்ணீர்: உலுக்கப்பட்ட உலகின் மனச்சாட்சி
» "கல்லணை" - வரலாறுகள் கடந்து நிற்கும் சரித்திரம் .. உலகின் மிகப் பழமையான அணை !
» உலகின் எந்த நாட்டு ராணுவத்திலும் செய்யாத ஒரு காரியத்தை தமிழீழ பிரபாகரன் செய்தார்: அறிவுமதி.
போர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum