போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
” உறுதியின் வடிவம் “ Arul11 ” உறுதியின் வடிவம் “ Untitl11 ” உறுதியின் வடிவம் “ Iiiiii12 ” உறுதியின் வடிவம் “ Untitl13 ” உறுதியின் வடிவம் “ Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

” உறுதியின் வடிவம் “

Go down

” உறுதியின் வடிவம் “ Empty ” உறுதியின் வடிவம் “

Post by Admin Sat May 04, 2013 8:05 am

” உறுதியின் வடிவம் “
------------------------------

[You must be registered and logged in to see this image.]


அம்பாறையில் நிந்தவூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் செல்வன்
பொறிவெடி செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த இவர் தவருதலான ஒரு
வெடிவிபத்தின்போது தன் இரு கைகளையும் – இரு கண்களின் பார்வையையும்
இழந்தவர்.

தற்போதைய நிலையில் ( 1992 காலப்பகுதி ) வட –
தமிழீழத்தின் பல பகுதிகளில் பிரச்சார வேளைகளில் ஈடுபட்டிருக்கும் அவரை ,
உங்களுக்கு அறியத்தருகின்றோம். விடுதலையின் சுவடாக …..

1985

” என்ரை காலை எடுத்துப்போட்டினம் அண்ணை ” – அந்த வைத்தியசாலையின்
கட்டிடங்கள் முழுவதும் அதிரும் வண்ணம் பரிதாபமாகக் கத்திக்கொண்டிருந்தான்
அறிவு.

அவனுக்கு அருகில் கிட்டண்ணை நின்றார். மற்றத் தோழர்கள்
சற்றுத் தள்ளி நிலத்தைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். அறிவு , வயதில்
குறைந்தவன். ஒரு இடத்தில் நிற்காமல் எந்நேரமும் சுறுசுறுப்பாக நிற்கும்
அவனுக்கு ஏற்ப்பட்ட அந்த நிலையை எவராலும் தாங்க முடியாமல் இருந்தது.

கிட்டண்ணைதான் அவனுக்கு அருகில் இருந்து அவனது தலையத் தடவிக்கொண்டிருந்தார்.

” ரஷ்யாவில் ஒரு விமானஒட்டி – நீ கேள்விப்பட்டிருப்பாய் , இரண்டு
கால்களையும் இழந்த பின்பும் விமானம் ஓட்டினார் , சண்டைக்குப் போனார் ”

அறிவுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு கிட்டண்ணை சொல்லிக்
கொண்டிருந்தார். அவரின் கண்கள் கலங்கிப் போயிருந்தன. முதன் முதலில் எம்மில்
ஒருவன் கால்களை இழந்தபோதும் நாம் இப்படித்தான் அதிகமாகக் கலங்கினோம்.

விடுதலைப் போராட்டத்தின் வளர்ட்சியின் பொது நாங்கள் எத்தனை சம்பவங்களைச்
சந்தித்திருக்கின்றோம் …. ? இயக்கத்தின் வளர்ட்சியுடனேயே அங்கங்களை இழந்த
போராளிகளின் தொகையும் அதிகரித்தது.

கால்கள் … கைகள் … கண்கள் …
இழப்புக்கள் துயரம் நிறைந்தவைதான். ஆனால் இந்த இழப்புகள் எதுவுமே எந்தப்
போராளியின் நெஞ்சத்து உறுதியையும் குறைக்கவில்லை ; அவர்களின் போராட்ட
நடவடிக்கைகளையும் இடை நடுவில் நிறுத்தவில்லை. இன்று அங்கமிலந்தவர்களில்
பலர் இயக்கத்தின் முக்கியமான பொறுப்புகளில் செயற்படுகின்றார்கள்.


செல்வனும் இப்படிபட்டவந்தான். அம்பாறையில் ஒரு கிராமமான நிந்தவூர்தான்
அவனது கிராமம். அவன் பொறி வெடி செய்வதில் திறமையானவன். ஆனால் , வழமையாக
அந்நியர்களின் பாதங்களை இலக்கு வைத்து வெடிக்கும். பொறி வெடி இவனது கையில்
வெடிக்கும் என்று , எவருமே எதிர்பார்க்கவில்லை.

சில நாட்களின்
பின்பு – செல்வன் தனது நிலையை உணர்ந்து கொண்டான். அருகிலேயே இருந்து
அதிகமாக ஆறுதல் வார்த்தைகள் சொல்லும் தோழர்களின் செயல் எதற்கு என்பது
அவனுக்கு அப்ப்போது நன்றாக விளங்கியது. அவனால் பார்க்க முடியவில்லை
மணிக்கட்டுக்குக் கிழே இரண்டு கைகலுமே இல்லை.

செல்வனின் துயரமான இந்த நிலையை தோழர்களெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தபோது , அவன் வித்தியாசமானவனாக இருந்தான்.

வாழ்வின் இறுதிக் கணம்வரை ஒளியை அவன் காண முடியாது ; அது அவனுக்குத்
தெரியும். அது மட்டுமல்ல அவனால் எந்த வேலையையும் செய்யமுடியாதபடி கைகளையும்
இழந்திருந்தான். இந்த நிலையில் அந்த நாடக்ளைப் பற்றிச் செல்வனே
சொல்கின்றான்.

” மனித வாழ்க்கையில் செய்யமுடியாதது என்பது எதுவுமே
இல்லை என்பதில் நான் நிறைய நம்பிக்கை உடையவன். எதற்கும்
பழக்கபடுத்துவதர்க்குச் சிலகாலம் செல்கிறது. அந்த நாட்கள் தான் கடுமையான –
துயரம் நிறைந்த நாட்களாகும். நானும் அப்படித்தான். பழகிய – அன்பான
முகங்களைப் பார்க்க ஏங்கினேன். அது முடியாதது எனக்குத் தெரிந்தபோது
தவித்தேன். ஆனாலும் தன்னபிக்கையை என்றுமே நான் கைவிடவில்லை. ”


எப்போதுமே செல்வன் தன்னம்பிக்கை நிறைந்தவந்தான். அது இந்தியர்கள் சென்று
சில காலம் – அன்னைபூபதியின் நினைவு நாள் நிகழ்வுகள் மட்டக்களப்பில் நடந்து
கொண்டிருந்தன. மிதிவண்டி ஓட்டப் போட்டியில் செல்வனும் கலந்து கொண்டான்.

மட்டக்களப்பின் தார் வீதிகளில் போட்டியாளர்களின் மிதிவண்டிகள் பறந்தன.
செல்வன் தோர்க்க விரும்பவில்லை , முடிவிற்கு இன்னும் சிலமைல்கள்தான்
இருந்தது.

செல்வனின் மிதிவண்டியின் பின் சில்லு காற்றுப் போகத்
தொடங்கியது … சிறிது நேரத்தில் , அவன் காற்றில்லாத மிதிவண்டியில்
ஓடிக்கொண்டிருந்தான் … அந்தப் போட்டியில் செல்வன் முதலாவதாக வரவில்லை.
ஆனால் அவனுக்குப் பின்னால் நாற்பது போட்டியாளர்கள் வந்தார்கள்.


தலைவர் செல்வனைச் சந்தித்து அன்றே அவனுக்கு ஒரு பணிகிடைத்தது. அவனது
வியக்கத்தக்க மனவுறுதியைப் பார்த்த எமது தலைவர் அவனை உற்சாகப்படுத்தினார் ;
” தன்னால் தொடர்ந்து போராட முடியும் ” என்ற அவனது நம்பிகையை மேலும்
வளர்த்தார் – அதற்க்கு வடிவமும் கொடுத்தார்.

” மக்களுக்கான எமது
கருத்தரங்குகளில் – கூட்டங்களில் கலந்து கொள்ளும்படியும் –
வைத்தியசாலைக்குச் சென்று காயமடைந்த எமது போராளிகளைச் சந்தித்து , அவர்களை
தளர்ந்து போகவிடாமல் உற்சாகப்படுத்தும் படியும் , செல்வனுக்குச் சொன்னார்.

செல்வன் இப்போதெல்லாம் வைத்தியசாலைக்குப் போகிறான். காயமடைந்த தோழர்களுடன்
கதைக்கின்றான். பெரும் பாதிப்பைச் சந்தித்தும் தளராமல் தங்கள் முன்
நிற்கும் தோழனைப் பார்த்து , மற்றவர்கள் வியக்கின்றார்கள். அந்த வியப்பே
அவர்களின் மனங்களில் நம்பிக்கைகளை விதைக்கின்றது.

உலகில் வாழும்
ஒவ்வொரு மனிதனும் ஏதோவொரு எதிர்காலக் கனவுடனேயே வாழ்கின்றான். இது எல்லா
மனிதர்களிற்கும் பொதுமையானது. செல்வனிடம் அவனது எதிர்காலத்தைப் பற்றி
கேட்டபோது …..

” எங்கள் போராளிகள் எவரும் தம் சொந்த வாழ்க்கையின்
நலன்களை எதிர்பார்த்து வாழ்பவர்களில்லை நானும் அப்படித்தான் இருந்தேன்.
இப்போது ஒன்றும் நடந்துவிடவில்லை. கண்களும் கைகளும்தான் இல்லை. மனதில்
உறுதி குறையவில்லை. காதும் வாயும் இருக்கிறது. என்னால் தொடர்ந்து போராட
முடியும். நான் இப்போ எங்கள் கருத்தரங்குளுக்கும் கூட்டங்களுக்கும்
செள்ளத்தொடங்கியுள்ளேன். என்னால் ஓரளவு மேடையில் நன்றாகப் பேசமுடிகின்றது.
முன்னேறுவேன் என்றும் நம்பிக்கையோடு இருக்கின்றேன் “ என்று
குறிப்பிட்டான். தொடர்ந்தும் போராட்டக் களத்தில் செல்வன் தன்னைத் தயார்
செய்கின்றான்.

ஒருநாள் , யாழ் நகரின் பிரபல பாடகசாலை ஒன்றின்
மாவீரர் நாள் நிகழ்ட்சிகள் நடந்து கொண்டிருந்தன. திரண்டிருந்த
மாணவர்களிற்கும் – ஆசிரியர்களுக்கும் முன்பாக , மேடையில் ஒரு ஓரமாக இருந்த
செல்வனை , எவருமே கவனிக்கவில்லை. அவன் வேருபட்டவனாகவும் தெரியவில்லை.

அவன் பேசத்தொடங்கினான் நீளக் காற்சட்டையின் பைகளிற்க்குள் – இரண்டு
கைகளையும் , ஒழித்துக் கொண்டு ஓர் கறுப்புக் கண்ண்டாடியுடன் தமக்கு
முன்னாள் நின்ற போராளியின் பின்னால் ஒரு நீண்ட கதை இருக்கின்றது என்பது
அங்கிருந்தவர்கள் எவருக்குமே தெரியாது.

அவனது பேச்சு முடியும்
நேரம் ” உங்களுக்கு முன்னாள் கறுப்புக் கண்ணாடியுடன் காற்சட்டைப்
பைகளிற்க்குள் கைகளை வெளியே எடுக்காமலும் பேசிக்கொண்டிருக்கும் என்னைப்
பார்க்க அதிசயமாக இருக்கும். மனதிற்குள் சாத்துவான் வெறுப்பாகவும்
இருக்கும். உங்களுக்கு என்னைப் பற்றிச் சொல்லாமல் போவது சரியில்லை . “
என்று சொல்லிவிட்டு கைகளை வெளியே எடுத்துக் காட்டினான்.

” எனக்குக் கைகள் இரண்டும் இல்லை. என்னால் உங்களைப் பார்க்கவும் முடியாது ” என்றான்.

அவனுக்கு முன்பாக இருந்தவர்களின் இதயங்கள் அதிர்ந்தன. அந்தக் கூட்டத்தில்
எழுந்த நெஞ்சை வருடும் வித்தியாசமான் சத்தமும் சலசலப்பும் , செல்வனுக்கு
மக்களின் உணர்வுகளை விளக்கியது. எங்கோ – ஒரு போர்முனையில் தன அங்கங்களை
இழந்துவிட்ட அந்தப் போராளி , இந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடச் சொல்லி
மற்றவர்களை வேண்டி நிற்கின்றான் என்பதை , அங்கு கூடி இருந்தவர்கள்
விளங்கிக்கொண்டார்கள்.

தனால் இந்த நாட்டவர்களைப் போராட்டக் காலத்துக்கு அனுப்ப முடியும் என்று செல்வன் , உறுதியாக நம்புகின்றான்.

செல்வன் மட்டுமல்ல , அவனைப் போன்று பெரிய பாதிப்புகளைச் சந்தித்த ஒவ்வொரு
போராளியும் தளர்ந்து விடாமல் , புதிய வழிமுறையில் போராடத் தன்னைத்
தயாற்படுத்துகின்றான்.

இங்கு , தன் ஒரு கலை இழந்துவிட்ட மேஜர்
சுரேஷ் ஆனையிறவுத் தாக்குதல் நடவடிக்கையில் கவச வாகனம் ஒன்றின்
பாதுகாப்புப் பொறுப்பாளராகச் சென்று வீரச்சாவை சந்தித்தது.
குறிப்பிடத்தக்கது.

உறுதியின் விளக்கமாக நிற்கும் செல்வனும் ஓர் ஏக்கத்துடன் இருக்கின்றான்.

” நான் விடுதலையை மிகவும் நேசிக்கின்றேன் சுதந்திரத் தமிழீழத்தில்
நிற்கின்றேன் என்ற உணர்வுக்காக நான் காத்திருக்கின்றேன் ” எனச்
சொல்கின்றான்.

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum