போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
"பிரபாகரனைச் சந்தித்தாரா சிதம்பரம்?!- 'இருக்காது' என்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்" Arul11 "பிரபாகரனைச் சந்தித்தாரா சிதம்பரம்?!- 'இருக்காது' என்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்" Untitl11 "பிரபாகரனைச் சந்தித்தாரா சிதம்பரம்?!- 'இருக்காது' என்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்" Iiiiii12 "பிரபாகரனைச் சந்தித்தாரா சிதம்பரம்?!- 'இருக்காது' என்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்" Untitl13 "பிரபாகரனைச் சந்தித்தாரா சிதம்பரம்?!- 'இருக்காது' என்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்" Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

"பிரபாகரனைச் சந்தித்தாரா சிதம்பரம்?!- 'இருக்காது' என்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்"

Go down

"பிரபாகரனைச் சந்தித்தாரா சிதம்பரம்?!- 'இருக்காது' என்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்" Empty "பிரபாகரனைச் சந்தித்தாரா சிதம்பரம்?!- 'இருக்காது' என்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்"

Post by Admin Thu Apr 18, 2013 8:41 am

"பிரபாகரனைச் சந்தித்தாரா சிதம்பரம்?!- 'இருக்காது' என்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்"

"பிரபாகரனைச் சந்தித்தாரா சிதம்பரம்?!- 'இருக்காது' என்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்" 532112_363533397083912_1604293276_n
இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் தங்களுக்கும் ஈடுபாடு உண்டு என்பதைக்
காட்டிக் கொள்ள படாதபாடுபடுகிறது காங்கிரஸ். 'கோடம்பாக்கத்தில் இருந்த
பிரபாகரனை நானே கார் ஓட்டிச் சென்று சந்தித்தேன்’ என்று, ப.சிதம்பரம் ஒரு
கூட்டத்தில் பேசினார்.
அந்த நாளில் இருந்து இன்றுவரை இலங்கைப் பிரச்சினைகளில் தீவிரமாகச் செயல்பட்டுவரும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அதுகுறித்து விரிவாகப் பதில் அளிக்கிறார்.

கே: 1984-ம் ஆண்டு, கோடம்பாக்கத்தில் தங்கி இருந்த பிரபாகரன்,
பாலசிங்கத்தை சந்தித்து இலங்கை பிரச்னையில் தீர்வு ஏற்படுத்த முயன்றதாக
நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியுள்ளாரே?

ப: பாண்டி பஜார்
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை முன்னிட்டு விடுதலைப்புலிகள் தலைவர்
பிரபாகரன், ராகவன், பிளாட் தலைவர் முகுந்தன் ஆகியோர் 1983-ல்
கைதுசெய்யப்பட்டு சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பிரபாகரனுக்காக மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலையும் நானும் ஆஜராகி பெயில்
வாங்கிக் கொடுத்தோம். முகுந்தன் சென்னையிலும், பிரபாகரன் மதுரையிலும்
தங்கி இருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதன்பிறகு,
திருவான்மியூர் காமராஜர் நகரில் சிறிது காலம் பிரபாகரன் தங்கியிருந்தார்.
பின்னர், அடையாறு இந்திரா நகருக்குக் குடிபெயர்ந்தார்.
1983 இறுதியில்
பாலசிங்கம் சென்னை வந்தார். நானும் பேபி சுப்பிரமணியன் என்ற இளங்குமரனும்
அவரை இரண்டு வாரங்கள் நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் தங்கவைத்தோம். அதன்பிறகு,
பெசன்ட்நகர் வேளாங்கன்னி மாதா கோயில் அருகிலுள்ள வீட்டில் பாலசிங்கம் தங்கி
இருந்தார். பின் அவர் அடையாறு இந்திரா நகரில் தங்கினார். ஆக, 83-க்குப்
பிறகு அவர்கள் கோடம்பாக்கத்தில் தங்கவே இல்லை. பிரபாகரன், பாலசிங்கம்
ஆகியோர் கோடம்பாக்கத்தில் தங்கி இருந்தபோது 1984-ல் சந்தித்து, இலங்கை
பிரச்னை குறித்து பேசியதாக நிதி அமைச்சர் சிதம்பரம் கூறுவது வியப்பாகவும்
வேடிக்கையாகவும் இருக்கிறது. 80 தொடக்கத்தில் இருந்து பாண்டி பஜார் சம்பவம்
வரை மயிலாப்பூர் சாலைத் தெருவில் நெடுமாறனின் பழைய வீட்டில் என்னுடன்
பிரபாகரன் தங்கியிருந்தார்.

கே: தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி
மீன்பிடித்து வீணாகப் பிரச்னையை உருவாக்குவதாக இலங்கைத் தமிழ் மீனவர்கள்
புகார் தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசிவருகிறாரே?


ப: தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய மத்திய அமைச்சர்
நாராயணசாமி, இலங்கைக்கு வக்காலத்து வாங்குவது தமிழக மீனவர்கள் நெஞ்சில்
வேல் பாய்ச்சுவது போன்றது. அவர், இந்திய அமைச்சரா? இலங்கை அமைச்சரா?

1974-ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த போது, தலைவர் கலைஞர் அதைக்
கடுமையாக எதிர்த்தார். கலைஞர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக்
கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் கலந்துகொண்ட அரங்கநாயகம் அரசுத்
தீர்மானத்துக்கு ஆதரவாக இல்லை. பிரதமர் இந்திரா, வெளியுறவுத் துறை அமைச்சர்
ஸ்வரண் சிங்கிடம், கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்கக் கூடாது என்றார்
கலைஞர். நாடாளுமன்றத்திலும் தி.மு.க. கடுமையாக எதிர்த்தது. அதே கோரிக்கையை
வலியுறுத்தி, தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும்
நடத்தப்பட்டன. ஆனாலும் கச்சத்தீவை மத்திய காங்கிரஸ் அரசு கொடுத்தது. மீன்
வலைகளை உலர்த்தவும் அந்தோணியார் கோயிலுக்குச் செல்லவும் மீனவர்கள் ஓய்வு
எடுக்கவுமான உரிமை, கலைஞரின் போராட்டத்தால் அந்த ஒப்பந்தத்தில்
சேர்க்கப்பட்டது. ஆனால், 1976-ம் ஆண்டு நெருக்கடி நிலையில் அந்த மூன்று
ஷரத்துக்களையும் காங்கிரஸ் அரசு விட்டுக் கொடுத்து விட்டது. அப்போது,
தி.மு.க. ஆட்சியில் இல்லை. கச்சத்தீவை இழந்ததால்தான் தமிழக மீனவர்கள்
இப்போது இத்தனை கொடுமைகளை அனுபவிக்கின்றனர். இதையெல்லாம் தெரிந்துகொண்டு
அமைச்சர் நாராயணசாமி பேச வேண்டும்.

கே: இலங்கை பிரச்னையில் இந்திய
ஆட்சியாளர்கள் பொறுப்புடன் செயல்படவில்லை என்று, இலங்கை பாதுகாப்புத் துறை
செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே குற்றம்சாட்டியுள்ளாரே?

ப: இந்தியா
இல்லை என்றால் இலங்கை இல்லை. சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற பிரதமர்
நேரு அமைச்சரவை 1963-ல் ஒப்புதல் அளித்தது. 'சேதுத்திட்டம் நிறைவேறினால்
இலங்கையின் பொருளாதாரமே சீர்குலைந்துவிடும்’ என்று, இலங்கை ஆட்சியாளர்கள்
மன்றாடினர். அண்டை நாடு என்ற ரீதியில் அந்தத் திட்டத்தை நேரு கைவிட்டார்.
சாஸ்திரி- ஸ்ரீமாவோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய வம்சாவழி தோட்டத்
தொழிலாளர்கள் திரும்ப அழைக்கப்பட்டனர். அந்த நடவடிக்கையே தவறு என்று
கண்டித்தோம். ஆனாலும், இலங்கையின் பொருளாதார சிக்கலைத் தவிர்க்க அந்த
முடிவை இந்தியா ஏற்றுக்கொண்டது. இந்திரா காந்தி காலத்தில் இருந்து
தொடர்ந்து இன்றளவும் உதவுகிறோம்.

இந்தியாவின் செயல்பாட்டைக் குறை சொல்ல சிங்கள ஆட்சியாளர்களுக்கு அருகதையே கிடையாது.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum