Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...

" ஏன் இன்னும் சிங்களத்தின் குகைக்குள் பதுங்கல் "

Go down

" ஏன் இன்னும் சிங்களத்தின் குகைக்குள் பதுங்கல் "

Post by Admin on Mon Apr 08, 2013 9:19 am

" ஏன் இன்னும் சிங்களத்தின் குகைக்குள் பதுங்கல் "
===============
தமிழர்களுக்கு எதிரான போரினை முன்னெடுத்த காலங்களில்தான் முஸ்லிம்களின்
உதவி சிங்களத்திற்கு தேவைப்பட்டது. தமிழர்களை கேள்வி பார்வையின்றி கைது
செய்வதற்கும், வதை செய்வதற்குமான சட்ட மூலத்தை மாதத்திற்கு மாதம்
நீடித்துக் கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் முஸ்லீம் அரசியல் கட்சிகளை
பயன்படுத்திக் கொண்டது சிங்களம்.

அன்றைய காலகட்டத்தில் பதவிக்கும்
பட்டத்திற்கும் ஆசைப்பட்ட முஸ்லீம் அரசியல் தலைவர்கள் பெரும்பான்மையான
சிங்களத்துடன் சேர்ந்து தமிழ் இனத்தை கொன்றுகுவித்தனர். சிங்களத்துடன்,
இணைந்து ஊர்காவல் படை என்ற போர்வையில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில்
பல இடங்களில் படுகொலைகளையும் மேற்கொண்டனர்.

1985 ஆண்டுக்குப்
பின்னர் முஸ்லீம்களின் அரசியல் வளர்ச்சியென்பது, தமிழர்களை கொலை செய்வதும்,
சிங்களத்திற்கு பக்கவாத்தியம் பாடியும்தான் வங்கோரோத்து அரசியல் செய்தனர்.
அதனையே இன்றும் தொடர்ந்து கையாண்டுவருகின்றார்கள். முஸ்லீம்களின் அரசியலை
கடந்த 2009 ஆம் ஆண்டு வரைக்கும் கச்சிதமாக பயன்படுத்திய சிங்களம்,
சர்வதேசத்தின் மூலம் இலட்சக் கணக்கான தமிழர்களை இனப் படுகொலை செய்து போரை
முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர் முஸ்லீம்களையும் கையுதறிவிட்டனர்.

ஒரு சிறுபான்மை இனத்தை கொன்றொழிக்கும் போது வேடிக்கை பார்த்தவர்கள், இன்று
தனது சமூகத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படுகின்ற வேளையில், தமிழர்களின்
உதவிகளை நாடுவது அரசியல் தர்மமா? அல்லது சுயநல அரசியல் தேவைக்கான தாகமா?

சிறீலங்கா பௌத்த நாடு, பௌத்தம் மாத்திரம்தான் இங்கு வாழ முடியும் எனத்
திண்ணம் கொண்டுள்ள சிங்களத்துடன் ஏனைய மதத்தவர்கள் வாழ முடியாது என்பதை
அறுபது ஆண்டு காலமாக தமிழ் இனம் உரத்து குரல் கொடுத்துவருகிறது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் மூர்க்கத்தனமாக, மனிதகுலமே அருவருக்கத்தக்க
செயலில் சிங்களம் ஈடுபட்ட போதிலும், இன்றுவரை சிங்களத்தின் காலில் விழாத
இனம்தான் தமிழ் இனம்.

தமிழனுக்கு தன்மானம் பெரிதென்று
வாழ்பவன்தான் தமிழன். அற்ப சொற்ப சலுகைக்காக சிங்களம் போடும் எலும்புத்
துண்டைக் காவுதல் தமிழனின் வழக்கமல்ல. தமிழர்கள் வந்தான்-வரத்தான் அல்ல,
பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவுக்கு தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்த
இடம் எமது தாயகப் பூமி. நாம் பூர்விக மக்கள். நாங்கள் யாரிடமும் மண்டியிட
வேண்டியதில்லை. சில புல்லூருவிகளினாலும், சில தேசத் துரோகிகளினதும் தேசத்
துரோகத்தனத்தினால் தமிழ் இனத்தின் மன்னர்களை வெற்றி கொண்ட சிங்களம் இன்றுரை
அதனையே செய்து முள்ளிவாய்க்காலில் பாரிய இனப் படுகொலையை
அரங்கேற்றியுள்ளது.

அப்போதும், எமது உரிமைக்காக தாயகத்தில்
மாத்திரமல்ல, புலம்பெயர் இடங்ளிலும் போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர்.
எமது தொப்புள் கொடி உறவுகளும் தமிழகத்தில் எமக்காக குரல்
கொடுத்துவருகின்றனர். எவ்வாறாயினும், கடந்த காலக் கசப்பான சம்பவங்கள்
அனைத்தையும் மறந்து கடந்த ஆண்டு 2012 இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில்
அறுதிப் பெரும்பான்மையைக் கொண்ட சிறுபான்மையினர் ஒன்றிணைந்து ஆட்சி
அமைப்போம் எனச் சில விட்டுக் கொடுப்புக்களை மேற்கொண்டனர்.


பெரும்பான்மை சிங்களத்தின் நெடுங்கயிற்றை விழுங்கிக் கொண்டு சுயஉரிமைக்கான
அனைத்தையும் உதறித்தள்ளினர் முஸ்லீம் அரசியல் தலைவர்கள். உரிமைப்
போராட்டம், உரிமைப் போராட்டம் என மேடை போட்டு கத்தும் முஸ்லீம்
அரசியல்வாதிகள் இன்று தனது இனத்தின் அனைத்து உரிமை மாத்திரமல்ல, கலை,
கலாச்சார விழிமியங்களையும் சிங்களம் ஆதிக்கம் செய்ய முற்படுகிறது.
பத்துக்கு மேற்பட்ட இடங்களில் மதச் சின்னங்களை உடைத்துள்ள சிங்கள ஆதிக்கம்
கொண்ட அரசு, மறுபுறத்தில் பௌத்தம், பிற மதங்களை மதிப்பதாக உலகுக்கு
சாக்குப் போக்கான கருத்துக்களை கூறித் தப்பித்துக் கொள்கிறது.


போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சுருக்குக் கயிறு
கழுத்தில் ஏறுவதைத் தடுப்பதற்காக ஐ.நாவில் முஸ்லீம் நாடுகளின் உதவிகளைப்
பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறான கருத்துக்களை தெரிவித்துக் கொள்ளும் மகிந்த
அரசு, அதேசமயத்தில் இன்று முஸ்லீம்களின் பொருளாதாரத்தில் கைவைக்கத்
தொடங்கியுள்ளது.

இது ஒரு சாதாரண பௌத்த துறவிகளின் நடவடிக்கையல்ல,
மிகப் பெரியளவில் திட்டமிட்டு இராணுவத்தின் பின்புலத்திலேயே இவ்வாறான
நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகிறது. விசஜந்தான ‘பொது பல சேனா’ எனும் கொடிய
நச்சுத் தன்மையான அமைப்பின் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய
ராஜபக்சவே செயற்பட்டுவரும் நிலையில் இது நன்கு புலனாகும். சிறுபான்மை இனம்
தமது தன்மானத்துடன் வாழ்வோம் என கடந்த மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய
கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது, அதனையெல்லாம் காலால் உதைத்து தள்ளிவிட்டு
இன்று வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டவுடனேயே தமிழ் தரப்புடன் பேசுவதற்கு
தயார் என சிங்கள அரசுடன் இணைந்து செயற்படும் முஸ்லீம் அமைச்சர் ஒருவர்
தெரிவித்துள்ளார்.

உண்மையில் தனது இனத்திற்காக குரல்
கொடுப்பவர்கள் என்றால், தம்புள்ளையில் பள்ளிவாசல் தாக்கப்பட்டவுடனேயே
சிங்கள அரசாங்கத்திலிருந்து உடனடியாக வெளியேறியிருக்க வேண்டும்.
முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் தலைக்கு மேல் சென்ற போதும்,
சிங்களத்துடன் இணைந்துகொண்டு தமிழர்களை பேச்சுக்கு அழைப்பது எந்த வகையில்
நியாயம்?, தமிழ் தலைமைகள்தான் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளுமா?


முஸ்லீம்களை ஏமாற்றும் கருத்துக்களை கூறிக் கொண்டு சிங்களத்தின் குகைக்குள்
பதுங்காமல் மகிந்தாவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள அனைத்து முஸ்லீம்
அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் தமது பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு
தமது மக்களுக்காக குரல் கொடுப்பார்களாயின் அவர்கள் உண்மையில்
வரவேற்கப்படுவார்கள். ஆனால் அவ்வாறு செய்வதற்கு இன்றுவரை முஸ்லீம் தலைமைகள்
தயாராக இல்லையே..?

- கிழக்கில் இருந்து எழுவான்
avatar
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

View user profile http://porkutram.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum