Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபாகரன் சிறந்த போராளி, மஹிந்த ராஜபக்‌‌ஷ இன வெறியர் – விக்ரமபாகு கருணாரத்ன

Go down

பிரபாகரன் சிறந்த போராளி, மஹிந்த ராஜபக்‌‌ஷ இன வெறியர் – விக்ரமபாகு கருணாரத்ன

Post by Admin on Sat Aug 18, 2012 3:02 pm

[You must be registered and logged in to see this link.]விக்கிரமபாகு கருணரத்ன, இலங்கையின் எந்த ஓர் அடக்குமுறைக்கும் அடங்காதவர். சிங்களராக இருந்தும், ‘சிங்களர்கள் வந்தேறிகள்தான்… தமிழர்களே இலங்கை மண்ணின் பூர்வகுடிகள்’ என்ற கருத்தை முன்வைப்பவர்.

சிங்கள இனவெறியாளர்கள், புலிகளின் மீது
தாக்குதலைத் தொடுத்தபோது ‘பிரபாகரன் ஒரு மாவீரன்’ என்றவர். 2006 இலங்கை
அதிபர் தேர்தலில் இடதுசாரிகள் சார்பாக ராஜபக்ஷேவுக்கு எதிராகத் தேர்தலில்
நின்றவர். இலங்கை நவ சமா சமாஜ் கட்சியின் தலைவர். இந்த அடையாளங்களை எல்லாம்
மீறி இவருக்கு இப்போது புதிய அடையாளம், ‘இலங்கை அரசின் மிரட்டலுக்கு
அடிபணியாத ஒற்றை மனிதனாக, டெசோ மாநாட்டுக்கு இலங்கையில் இருந்து வந்தவர்’
என்பதுதான்.

டெசோ மாநாட்டுக்கு இந்தியாவுக்கு சென்றவேளை விகடனுக்கு வழங்கிய பேட்டி

”2009 பேரழிவுகளுக்குப் பின்னால் ஒரு சிங்களராக, தமிழ் ஈழம் சாத்தியம் என்று கருதுகிறீர்களா?”

”தமிழ் ஈழம் அழியவில்லை. அது அங்கேதான்
உள்ளது. அது ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இப்போது அது சிங்கள
மக்களுக்கு உரிமையாகவும் இல்லை. அந்த நிலங்கள் சீனாவுக்கும்
அமெரிக்காவுக்கும் தாரை வார்க்கப்பட்டு விட்டன. தமிழ் மக்கள், தமிழ் ஈழக்
கனவோடுதான் இன்னமும் அங்கு வாழ்கின்றனர். தமிழர்களுக்கான சுயஉரிமையோடு
ஒன்றி வாழலாம் என்றுதான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும்
விருப்பப்பட்டார். ஆனால், சிங்கள இன வெறியர்கள் அதை ஏற்கவில்லை.
வருங்காலங்களில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் இணைந்து வாழலாம் என்று தமிழ்
மக்கள் எண்ணினால் வாழலாம். இல்லாவிட்டால், அவர்களுக்கான சுயஉரிமைகொண்ட
தேசத்தை உருவாக்கிக்கொள்ளலாம். தமிழ் மக்களுக்கான விடுதலையில் ஐ.நா-வால்
எதுவும் செய்ய இயலாது. ஆனால், இந்தியாவும் அமெரிக்காவும் நினைத்தால், தமிழ்
மக்களுக்கான தீர்வை உடனே கொண்டு வரலாம்.”

”இலங்கையில் தமிழர் இனப்படுகொலையின்போது
மௌனமாக இருந்த கருணாநிதி, இப்போது அதுபற்றிப் பேசுகிறார் என்ற விமர்சனம்
உள்ள நிலையில், அவர் நடத்தும் டெசோ மாநாட்டுக்கு நீங்கள் வந்துள்ளீர்களே?”

”இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை
மகிந்த ராஜபக்ஷேவின் பின்புலத்தில் இருந்து நடத்தியது இங்கு உள்ள காங்கிரஸ்
அரசு. அவர்களின் கூட்டணியில் கருணாநிதி உள்ளார் என்றால், அவரும் தமிழர்
படுகொலைகளுக்குக் காரணமானவர்தான். காங்கிரஸும் தி.மு.க-வும் முதலாளித்துவக்
கட்சிகள். முதலாளித்துவத்திடம் எதையும் உண்மையாக எதிர்பார்க்க முடியாது.
நான் டெசோவுக்கு வருகை தந்துள்ளது தமிழ் மக்களுக்கான பணியைச் செய்வதற்காக
மட்டும்தான்.”

”தமிழ் எம்.பி-க்களே வராத நிலையில் இவ்வளவு தைரியமாக இலங்கையில் இருந்து வந்துள்ளீர்களே… ஆபத்தான பயணம் அல்லவா இது?”

”ஆம், ஆபத்தான பயணம்தான். இங்கே இருந்து
நான் கொழும்பு செல்லும்போது விமான நிலையத்தில் எனக்கு எதிராகப் பல
ஆர்ப்பாட்டங்களை இலங்கை அரசின் தூண்டுதலின் பேரில் நடத்த உள்ளனர். என்னைக்
கடுமையாகத் தாக்கியும் விமர்சித்தும் வருகின்றனர். என்னைத் தேசத்துரோகி
என்று முத்திரை குத்தியுள்ளனர். எவ்வளவு ஆபத்துகள் நிறைந்து இருந்தாலும்
தமிழ் மக்களுக்கான பணியில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன்.”

”உங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான உறவு எப்படியானது? அவர்களின் பின்னடைவுக்கு என்ன காரணம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?”

”எனக்கும் விடுதலைப் புலிகளுக்குமான உறவு
மிகவும் பிணைப்பு கொண்டது அல்ல. எங்களின் தலைவர்களில் ஒருவரையே அவர்கள்
கொன்று இருக்கின்றனர். ஆனால், அவர்களின் அரசியல் பார்வைகளில் நாங்கள்
ஒன்றுபடுகிறோம். அவர்களின் பொங்கு தமிழ் நிகழ்வில் நான் பங்கேற்றுள்ளேன்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பொறுப்பாளராக இருந்த நடேசன், அந்த
இயக்கத்துக்குச் செல்லும் முன்னர் 10 வருடங்கள் எங்கள் கட்சியில்
இருந்தவர். ஆண்டன் பாலசிங்கம் என் நல்ல நண்பரும்கூட. அவர்களின் சுயஉரிமைக்
கோரிக்கை நியாயமானது. அவர்களின் பின்னடைவுக்குக் காரணம், அவர்களின் சில
செயல்பாடுகளே. 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலை தமிழர்கள் புறக்கணித்ததுதான்,
ராஜபக்ஷேவை வெற்றி பெற வைத்தது. ராஜீவ் காந்தியைக் கொன்றது இந்தியாவின்
எதிர்ப்பை சம்பாதித்துவிட்டது. இன்னும் சில சொற்ப காரணங்களாலேதான் அவர்கள்
பெரும் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது.”

”பிரபாகரன்… ராஜபக்ஷே பற்றி உங்களது தனிப்பட்ட அபிப்பிராயம் என்ன?”

”பிரபாகரன் சிறந்த போராளி, மாவீரன்.
ஆனால், அவர் ஓர் நல்ல அரசியல்வாதி அல்ல. அவர் தன் மண் மீதும் மக்கள் மீதும்
பாசம்கொண்டவர். ராஜபக்‌ஷ இன வெறியர். அவர் ஒருபோதும் தமிழ் மக்களுக்கான
தீர்வை ஏற்படுத்தும் நன்மை செய்ய மாட்டார்!”
avatar
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

View user profile http://porkutram.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum