போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
குமுதினி படகு படுகொலையின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் நினைவு கூறப்படுகிறது Arul11 குமுதினி படகு படுகொலையின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் நினைவு கூறப்படுகிறது Untitl11 குமுதினி படகு படுகொலையின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் நினைவு கூறப்படுகிறது Iiiiii12 குமுதினி படகு படுகொலையின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் நினைவு கூறப்படுகிறது Untitl13 குமுதினி படகு படுகொலையின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் நினைவு கூறப்படுகிறது Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

குமுதினி படகு படுகொலையின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் நினைவு கூறப்படுகிறது

Go down

குமுதினி படகு படுகொலையின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் நினைவு கூறப்படுகிறது Empty குமுதினி படகு படுகொலையின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் நினைவு கூறப்படுகிறது

Post by Admin Thu May 16, 2013 8:49 am

[You must be registered and logged in to see this image.]குமுதினி
படகு படுகொலையின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் நினைவு
கூரப்படுகிறது. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவு
துறைமுகத்திலிருந்து குறிக்கட்டுவான் நோக்கி குமுதினி படகில் பயணம் செய்த
பயணிகளை நயினாதீவில் முகாமிட்டிருந்த கடற்படையினர் வழிமறித்து வெட்டி
படுகொலை செய்தனர். இதில் பெண்கள், குழந்தைகள், உட்பட 36பேர் படுகொலை
செய்யப்பட்டதுடன் பெரும்பாலானவர்கள் கை,கால்களை இழந்து அங்கவீனமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கத
குமுதினியில் பயணம் செய்து... கொண்டிருந்த தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா படையினரால் அழிக்கப்பட்டது


குமுதினியில் பயணம் செய்து... கொண்டிருந்த மக்கள் ஸ்ரீலங்கா படையினரால்
அழிக்கப்பட்டது நடந்தேறி 28 ஆண்டுகளாகி விட்டன.‘குமுதினி” நெடுந்தீவுக்கு
பயணிகளை ஏற்றிச் செல்லுகின்ற படகு.1960களிலிருந்து இன்று வரை நெடுந்;தீவு
மக்களை வெளியுலகத்தொடர்பில் வைத்திருக்க உதவிய படகு.குமுதினி அந்த மக்களின்
உயிராகிவிட்டது. அது ஒரு நினைவுச்சின்னம். ஒரு போர் நினைவுச்சின்னம். அந்த
மக்களின் வாழ்வின் நினைவுச்சின்னம். அந்த சடப்பொருள் இன்று வரலாறாகி
விட்டது.

இப்போது நயினாதீவுக்கு செல்வதற்காக, குறிகாட்டுவான்
இறங்குதுறைக்குள் ஸ்ரீலங்கா கடற்படையினர் மக்களை மூடியிருந்த கதவைத்திறந்து
அனுமதிக்கின்றனர். அப்பொழுதுதான் என் வரலாற்றில் முதல் தடவையாக ‘குமுதினி”
என் கண்களில்படுகின்றது. உண்மையில் குமுதினியில் மக்கள் உயிர்கள்
ஸ்ரீலங்கா கடற்படையினரால் காவு கொள்ளப்பட்ட வேளையில் குமுதினியின் தோற்றம்
எனக்குத் தெரியாவிட்டாலும், அந்த முதல் கடற் படுகொலையால் குமுதினி எல்லா
மக்களின் மனங்களிலும் நிலைத்துவிட்டதைப் போலவே. தோன்றாப்பொருளாக
நிலைத்துவிட்ட குமுதினியின் நேர்த்தோற்றம் எனக்குள்ளும் நிலைத்துவிட்டது
என்பதை என்னால் உணரமுடிந்தது.

அவ்வேளை அதன் தோற்றம் ஒரு
சடப்பொருளாய் வெறும் படகாய் இருக்கவில்லை. கொல்லப்பட்ட எமது மக்களின்
உயிராகவும் தெரிந்தது. குறிகாட்டுவான் இறங்குதுறையின் முழு நீளத்ததையும்
தாண்டி அறுபது அடி நீளத்தில் இறங்குதுறையில் குமுதினி
கிடந்தது.குமுதினியின் அரசியல் வரலாற்றின் முதற்பகுதி.குமுதினி 1960களில்
இலங்கை பொது வேலைத்திணக்களத்தினால்நெடுந்தீவுக்கு
போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இது திருகோணமலை
‘டொக்யாட்டில்” கட்டப்பட்டு ஜேர்மனியின் புக் எந்திரம் பொருத்தப்பட்ட ஒரு
குட்டிக்கப்பலின் பரிமாணத்தில் மரக்கலமாக குமுதினி உருவாகியிருந்தது.
தீவகத்தின் ஆழக்கடலில் தனித்துநின்ற நெடுந்தீவு மக்களின்
வெளியுலகத்ததரிசிப்புக்கான பாதையை திறந்துவைத்தது.


குமுதினியுடன் காலத்துக்கு காலம் பல படகுகள் நெடுந்தீவுக்கான
போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டாலும் குமுதினிதான் தன் வாழ்வை உழைப்பை 40
ஆண்டுகளாக தொடர்ந்துவந்தது.1980களில் போர்முனைப்புற்ற காலத்தில்
போராட்டப்பணிகளையும் ஒரு வகையில் அது ஆற்றியது.அ தனால் குமுதினிமீது
நயினாதீவு ஸ்ரீலங்கா கடற்படையினர் கண்வைக்கத்தொடங்கினர்.நடுக்கடலில் வைத்து குமுதினி அடிக்கடி கடற்படையினரால் சோதனைக்குள்ளாக்கப்படத்தொடங்கியது.
கடலில் குமுதினிக்கே இந்த விசேடகவனிப்பு. இதற்கு அடிப்படை காரணம்
நெடுந்தீவு இந்திய கடல் எல்லைக்கு மிக அருகில் இருப்பதாகும். அத்தடன்
நெடுந்தீவின் ஒரு கிராமசேவையாளர் பிரிவின் கீழ் உள்ள இந்திய கடற்கரைக்கு
அண்மையாக உள்ள கச்சதீவும் ஒரு காரணமாகும். நடுக்கடல் சோதனையைத் தவிர
நயினாதீவில் உள்ள ஸ்ரீலங்கா கடற்படைத்தளத்திலும் அதிக சோதனைக்கு குமுதினி
உள்ளாக்கப்பட்டு வந்தது. அதில் செல்லும் மக்கள் விசாரிக்கப்படுவது,
தாக்கப்படுவது வழமையானதாகியும் விட்டது. அன்றும் அப்படித்தான்பொழுது
விடிந்தது. நெடுந்தீவின் மாவலித்துறை இறங்குதுறையில் குமுதினி காலை 7
மணிக்கு பயணத்துக்கு தயாராகியிருந்தது.

குமுதினியின் அரசியல் வரலாறின் தொடக்கம
1985 மே 15 நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் காலை
7.00 மணிக்கு புறப்பட்டது. முதலில் பொது வேலைகள் திணைக்களத்தின் படகாக
இருந்து, தற்போது வீதி அபிவருத்தி அதிகார சபையின் கீழ் இயங்கி
வருகிறது.குமுதினிப்படகு அரைமணி நேரத்தின் பின் கடலில் ஸ்ரீலங்கா
கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது. இயந்திர அறை முன்பகுதி பின்பகுதி என
மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் குமுதினியை
நிறுத்தினர். எட்டு கடற்படையினர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள்
இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். பின் புறமிருந்த பயணிகளை
இயந்திர அறையின்; முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும்
சென்றுவிட்டனர். பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால்
இயந்திரத்தில் இருந்து பின்புறம் ‘புறொப்பிலருக்கு” செல்லும் ஆடு
தண்டுப்பகுதி மூடப்பட்டிருந்தது மூடப்பட்டிருந்த அப்பலகைகளை கடற்படையினர்
அகற்றினர். இருக்கை மட்டத்தில் இருந்து சுமார் 4அடி ஆழமானதாக அது இருந்தது.
இதன்பின் முதலில்படகுப்பணியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர்.
குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர்
இருந்தனர். ஒவ்வொருவராக கடற்படையினர் அழைத்து கத்தியால் குத்தியும்
கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொன்று அந்த
நடுப்பள்ளத்தில் போட்டனர். இப்படி கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி
முன்புறம் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும்
ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும்
உரத்துச் சொல்ல அதில் பின்புறம் கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி
மறைந்தது.பின்புறம் செல்பவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது முன்புறம்
இருப்பவர்களுக்கு தெரியவே தெரியாது. பின்புறம் செல்பவர்கள் உள்ளே சென்று
கிடங்காக உள்ள பகுதியில் குத்திக்கிடப்பவர்களை காணும் வரை அவர்களுக்கு முன்
சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது.
அவலக் குரல் எழுப்ப
முடியாது செத்தவர் போல் இருந்தவர்களும் உண்டு. கடுமையாகத் கடற்படை தாக்க
குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என
கடற்படையினரால் கருதப்பட்டும் போடப்பட்டனர். உள்ளே பள்ளமாக இருந்த
பகுதியில் உடல்கள் போடப்பட்டதால் முன்புறம் இருந்து செல்லுபவர்களுக்கு
முதல் சென்றவர்களும் கொல்லப்படுவது தெரியாது மறைக்கப்பட்டது. கார்த்திகேசு
நுழைவாயிலிலேயே கொலையுண்டோரைக் கண்டு கடலில் குதித்தார். வேட்டி
அணிந்திருந்த படியால் அவர் கடலில் மிதக்கத் தொடங்கினார். துப்பாக்கியால்
சுடப்பட்டு அவர் கொல்லப்பட்டார். ஏழு மாத குழந்தை; முதல் வயோதிபர் வரை
ஈவிரக்கமின்றி கொலை செய்யப்பட்டனர். அதில் செத்தவர் போல் கிடந்து மூன்று
அல்லது நான்கு படகுப்பணிகள் மட்டுமே உயிர் தப்பினார்.



நடுக்கடலில் இப்படியாக சகலரும் கொல்லபட்டும் காயப்பட்டும்போக அனைவரையும்
கொன்று விட்டதாக கடற்படையினர் கருதிக் கொண்டு திருப்திப்பட்டனர்.அந்த
திருப்தியால் மகிழ்வடைந்த கடற்படையினர் தமது படகில் நயினாதீவு தளத்துக்கு
சென்று தமக்கும் இச் சம்பவத்திற்கும் தொடர்பில்லாதது போன்று இருந்து
விட்டனர்.குமுதினி எந்திரம் நிறுத்தப்பட்டதால் அது நடுக்கடலில்
தத்தளித்தது. குமுதினியில் சென்றோர் அனைவரும் இறந்தும் குற்றுயிரும்
குலைஉயிருமாக பின்புற புறப்பலரை சுழற்றும் ஆடுதண்டு கிடங்குக்குள்
கிடக்கின்றனர். படகின் ஓட்டிகள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர். சம்பவ
வேளையில் ஏழு படகுப்பணியாளர்களில் ஆறு பேர் மட்டும் இருந்துள்ளனர்.
அவர்களுடன் இருவர் ஒட்டிகளான ஹொக்ஸன்கள் அவர்கள் இருவரும்
கொல்லப்பட்டுவிட்டனர். இவர்களை விட படகை ஒட்டக்கூடிய நிலையில் காயமடைந்து
ஒருவரும் இல்லை.படகின் இயந்திர இயக்குனர் மட்டும் மண்டையில்
கத்திக்குத்துடன் மயங்கிக் கிடந்தார். முப்பது நிமிடங்களாக குமுதினி
ஆழக்கடலில் தத்தளித்துக்கொண்டலைந்தது.பின்புறக்கிடங்கில்
மயங்கிக் கிடந்தவர்களில் தெளிந்த திடகாத்திரமான மயிலிட்டி வாசி தம்மை
சுதாகரித்து எழுந்து மயங்கிக் கிடந்த இயந்திர இயக்குனரை எழுப்ப முயன்றார்.
ஆனால் அவர் அரை மயக்கத்திலிருந்து எழ வில்லை. இருந்தும் அந்த நிலையில் அவரை
இழுத்துக்கொண்டு இயந்திர அறைக்குள் அவரை அவர்கள் இழுத்துச்செல்கின்றனர்.
இயந்திர இயக்குனரை இயந்திர அறைக்குள் அவர்கள் கொண்டு செல்கின்றனர். அவரை
இயந்திரத்தை இயக்குமாறு செய்யச்சொல்கின்றனர். ஆனால் அவர் மயக்கமடையவே
இயந்திரம் இயக்கப்பட முடியாது போனது. அவர் சுதாகரித்து இயந்திரத்தை
இயக்கியிருந்தால் மிகுந்த ஆபத்து உருவாகியிருக்கும். ஏனென்றால் குமுதினியை
ஸ்ரீலங்கா கடற்படையினர் மறித்தபோது அது இயக்கநிலையில் கியரிலேயே
நிறுத்தப்பட்டது.

இதனால் அந்தவேளை எந்திரம் இயக்கப்பட்டிருந்தால்
இயந்திரம் சுழல் ஆடுதண்டு புறப்பலரை சுற்றியிருக்கும். அந்த ஆடுதண்டுக்கு
மேலேயே கொல்லப்பட்ட மக்களும் காயப்பட்ட மக்களும் போடப்பட்டிருந்தனர்.
ஆடுதண்டு சுழன்றிருந்தால் அவர்கள் சக்கையாக்கப்பட்டிருப்பர். எந்திரம்
இயங்காத நிலையில் குமுதினி நடுக்கடலில் அலைந்து கொண்டிருந்தது.கடல்
நீரோட்டத்தில் அது அடித்துச் செல்லப்பட்டது. புங்குடுதீவு கண்ணகை அம்மன்
கோயில் கரையை நோக்கி தானாகவே நகரத் தொடங்கியது. கடலில் அலைந்து திரிந்த
குமுதினி புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயிலுக்கு நேராக சென்றது. அதன் பின்
நீரோட்டத்தால் நயினாதீவு நோக்கி அலையத் தொடங்கியது. குறிகாட்டுவானில் எட்டு
மணிக்கு வரவேண்டிய குமுதினி வந்து சேராததால் பதட்டம் ஏற்பட்டது. எந்திரக்
கோளாறா, எரிபொருள் தீர்ந்ததா என்ற கேள்வியே அங்கு எழுந்தது. ஆனால் படுகொலை
ஒன்று நடந்திருக்கும் என எவரும் எதிர்பார்க்கவில்லை. குமுதினியை தேட
ஆயத்தம்நடந்தது.

குமுதினி நயினாதீவு நோக்கி அலைந்தது நயினாதீவு
அருகே ஆழ்கடல் ஆரம்பிக்கும் பகுதியை அடைந்து களப்பு கடலின் ஒரு மேடருகே
பொறுத்துப் போனது.குறிகாட்டுவான் துறையின் நுழைவாயிலில் ஒரு சில கடைகள்
இருந்தன. உணவுக்கடைகள் அவை. திடீரென கடையொன்றின் உரிமையாளரான திருமதி.
திருநாவுக்கரசு அவர்கள் இச் சம்பவத்தைக் கண்டு பரபரப்படைந்தார்.

தொலைவில் குமுதினி அலைவதைக்கண்டார். குமுதினிக்குள் இருந்து ஒரு
வெள்ளைத்துணி ஒன்று அசைவதைக் கண்டார். குமுதினிக்குள் தப்பியவர் ஒருவர்
காட்டிய அழைப்பு அது. அப்போது குமுதினி பழுதடைந்ததாகவே கருதி உடனடியாக
அதனைநோக்கி படகில் மீட்புப்பணிக்காக குறிகாட்டுவான் இறங்குதுறையிலிருந்து
குழு ஒன்று சென்றது. அவர்கள் குமுதினியை நெருங்கி அதனுள் ஏறிப்பார்த்தபோது
இரத்தத்தை உறைய வைக்கும் பிணக்குவியலை கண்டனர். உடனடியாக குமுதினி
குறிகாட்டுவான் நோக்கி இழுத்து வரப்பட்டது.


விடுதலைப்புலிகள் அங்கு விரைந்து மீட்பு நடவடிக்கையைத் தொடங்கினர்.
காயமடைந்தோர் உடனடியாக புங்குடுதீவு மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டனர்.
இறந்தோர் உடல்கள் யாழ் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
புங்குடுதீவு மருத்துவமனையிலிருந்து கடுமையாக காயமடைந்தோர் பின்னர் யாழ்
போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இப்படுகொலையின்
பின் காயமடைந்தவர்கள் புங்குடுதீவு மருத்துவமனையிலும் யாழ் போதனா வைத்திய
மனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் தாக்கப்பட்ட விடயம்
மருத்துவமனை ஸ்ரீலங்கா பொலிசாரிடம் முறையிடப்பட்டும் எதுவித நடவடிக்கைகளும்
எடுக்கப்படவில்லை. பதிலாக சில நாட்களில் தப்பியவர்களை மருத்துவமனைக்கு
வந்த ஸ்ரீலங்கா கடற்படையினர் தேடத் தொடங்கினர்.

உடனடியாக
மருத்துவமனையில் இவர்கள் விடுதிகளுள் இடம் மாற்றி மறைக்கப்பட்டனர். உயிர்
தப்பிய படகுப்பணியாளர் மருத்துவமனையில் கடற்படையினர் தேடப்படுகின்றபோது
அவர் மறைக்கப்பட்டு கடைசிவரை தலைமறைவிலேயே சிகிச்சை பெற்றார். இரு
பெண்களைத்தவிர ஏனையோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். படுகொலை
சாட்சியங்கள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக கடற்படையினர் அவர்களை
தேடித்திரிந்தனர். இன்றும் தேடிக்கொண்டிருக்கின்றனர். எதுவித விசாரணைகளும்
நீதி வழங்கலும் இல்லாது அந்த கடற்படுகொலை மறைக்கப்பட்டுவிட்டது.ஆனால்
ஆட்களை தேடுவதில் இன்றும் ஸ்ரீலங்காப்படையின் அக்கறை தீவிரமாக இருப்பது
தெரிகின்றது.குமுதினி குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு கொண்டு வரப்பட்டு
அதற்குள் இருந்த இறந்தோரையும் காயமடைந்தோரையும் வெளியேற்றும் பணி
விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டது.அப்போதைய
தீவகப் பொறுப்பாளர் உடனடியாக களத்தில் இறங்கி செயற்பட்டார்.காயமடைந்தோர்
முதலுதவிக்காக புங்குடுதீவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு
முதலுதவியின் பின் யாழ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இறந்த
முப்பத்தி மூன்று பேரின் உடல்கள் புங்குடுதீவு மருத்துவ மனையில்
வைக்கப்பட்டன. புங்குடுதீவுமக்கள் அங்கு திரண்டனர். சிங்களப்படைகளின்
கொடுமை கண்டு கொதிப்புற்றனர். அம் மக்கள் உடனடியாகவே பணம் திரட்டிக்
கொடுத்தனர்.அந்த பணத்தைக் கொண்டு உடனடியாக தீவகப் பொறுப்பாளர் பாய்களை
கொள்வனவு செய்து இறந்தோர் உடல்களை அவற்றைக் கொண்டு கட்டி யாழ் போதனா
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அடுத்த கட்டமாக இறந்தோரின்
இறுதிக்கிரியைக்காக புங்குடுதீவு மக்களின் பணத்தைக்கொண்டு சவப்பெட்டிகள்
கொள்வனவு செய்யப்பட்டன. மரண விசாரணையின் பின்னர் மருத்துவ மனையிலும்
இறந்தவர்களுடன் முப்பத்தியாறுபேரின் உடல்கள் அவரவர் இடங்களுக்கு கொண்டு
செல்லப்பட்டன.

நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய
உடல்களை கொண்ட சவப் பெட்டிகள் புங்குடுதீவு மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டன. அங்கு இனவாதத்தில் பலியான மக்களின் நினைவு கூரல் நிகழ்வு
இடம்பெற்றது.குமுதினியில் கொலையுண்ட மக்களின் குடும்பங்களிற்காக அம் மக்கள்
திரட்டிக் கொடுத்த பணத்தில் மிகுதியான பணத்தில் தமிழர் வரலாறில்முக்கியமான
ஒர் பதிவு நடந்தது. எஞ்சிய பணத்தில் படுகொலைக்கான நினைவுப் பிரசுரம் ஒன்று
அச்சிடப்பட்டது. அதில் முக்கிய விஞர்களான சு.வில்வரத்தினம்,மு.பொன்னம்பலம்
ஆகியோரின் கவிதைகளும் நிலாந்தனின் முதல் கவிதையும் பிரசுரமானது.
சு.வில்வரத்தினத்தின் கவிதை ‘காலன் கடைவிரிக்கிறான்” என்ற தலைப்பில்
அமைந்தது என்ற தகவல் மட்டும் இருக்கிறது. ஆனால் கவிதையை
காணக்கிடைக்கவில்லை. மு.பொவின் கவிதையும் அப்படியே. ஆனால் நிலாந்தனின்
‘கடலம்மா” கவிதைதான் அழியாப் பதிவாக இலக்கிய சாட்சியமாக இன்றும்
இருக்கிறது.காலத்தால் அழியாத பதிவாக அது இருக்கிறது. கடல் என்ற சடப்பொருளை
‘கடலம்மா” என விழித்து கடலுக்கு உயிர்ப்பைக் கொடுத்த கவிதை. கடலை தமிழருடன்
உயிர்ப்பாக பிணைத்த கவிதை. கடலை கடலம்மாவாக கருத்துருவாக்கிய
முதல்கவிதையாகவும் அதுதான் அமையும் என கருதலாம்.அந்த கடலம்மா என்று
கடலுக்கு உயிர்கொடுத்தது அந்த கவிதை. கடலுடன் குமுதனி என்ற சடப் பொருளான
படகுக்கும் உயிர் கொடுத்த கவிதை.இன்றும் குமுதினி தமிழ்மக்களின் உயிர்களின்
இருப்பிடமாக இல்லாமல் குமுதினியாகவே மாறி இருக்கிறாள். இதனையும்
நிலாந்தனின்கவிதை சாதித்துக் கொடுத்திருக்கிறது.

கடலம்மா……
நீயே சொல்குமுதினி ஏன் பிந்தி வந்தாள்? எம்மவரின் அவலங்களைச்சடலங்களாய்ச்
சுமந்துகொண்டுகுமுதினி குருதி வடிய வந்தாள்கடலம்மா கண்டாயோகார்த்திகேசு
என்னவானான்?எந்தக்கரையில் உடலூதிக்கிடந்தானோஓ….! சோழகக் காற்றேநீ,வழம்மாறி
வீசியிருந்தால்….குமுதனி வரமாட்டாள் என்றுநெடுந்தீவுக்குச்
சொல்லியிருப்பாய்.பாவம்மரணங்களின் செய்தி கூடக்கிட்டாத தொலைவில்ஏக்கங்களையும் துக்கங்களையும்கடலலைகளிடம் சொல்லிவிட்டுக்காத்திருக்கும்
மக்கள்…….கடலம்மா நீ மலடிஏனந்தத் தீவுகளைஅனாதரவாய்த் தனியே
விட்டாயகடலம்மாஉன் நீள் பரப்பில்அனாதரவாய் மரணித்த எம்மவரைபுதிய கல்லறைகளை
எழுப்பிஅனாதைக் கல்லறைகள் என நினைவூட்டுஆனால்,இனிவருங்
கல்லறைகள்வெறும்இழப்புகளின் நினைவல்லஎமதுஇலட்சியங்களின் நினைவாகட்டும்.

1985 அலை 26 கவிஞர் நிலாந்தன
இதை மையமாக கொண்டு 1990களின் பிற்பகுதியில்குமுதினியின் படுகொலை அவலத்தை
சுவிசில் ஏ.ஜி.யோகராஜாவின் எழுத்தில் அன்ரன் பொன்ராஜாவின் நெறியாள்கையில்
கடலம்மாஎன்ற நாடகத்தை அரங்கேற்றினர்.அது அங்குள்ள மற்றைய
மொழிக்காரரின்கவனத்தை ஈர்த்தது.
குமுதினி ஒரு மிதக்கும்
ஒஸ்ட்விசஎன்ன இது புதிதான சொல் என திகைக்கவேண்டாம்.ஒஸ்ட்விச் என்பது
ஜேர்மனியை ஆண்ட ஹிட்லர் யூதர்களை படுகொலை செய்த வதை முகாம்.அந்த
வதைமுகாமில் நடந்த மாதிரிதான் குமுதினியில் எமது மக்கள் சிங்களப்படைகளால்
படுகொலை செய்யப்பட்டனர். தாம் கொல்லப்படும் வரை என்ன நடக்கப்போகின்றது
எனத்தெரியாமலே குமுதினியில் மக்களின் படுகொலை நடந்தது. குமுதனி படுகொலை
நடந்த விதம் எப்படி என்பதை நாம் அறிந்திருக்கிறோம் .இப்போது ஒஸ்ட்விச் கொலை
பற்றி யூதர்களின் ஆவணம் ஒன்றிலிருந்து பார்ப்போம்.அறுபது ஆண்டுகள்
கடந்தோடிவிட்டன. ஆயினும் மனித குலவரலாற்றில் ஆறாத காயாமாகவே இந்நிகழ்வு
பதிந்துவிட்டது. உலகமே வெட்கித் தலை குனியும் அந்;த நாளை பத்திரிகைகள்
,வானொலிகள், தொலைக்காட்சிகள் யாவும் முக்கியத்துவம் அளித்துப் பேசின.
வளர்ந்து வரும் இளம் சந்ததியிடம் – மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த அந்த
அநீதியை மறக்கக்கூடாத ஒரு பாடமாகக் கையளிப்பதற்காகவும்,அவர்களை மனிதநேயம்மிக்கவர்களாக வளர்ப்பதற்காகவும் இந்த நாள் நினைவுகூரப்படுகிறது.இரண்டாம்
உலக மகாயுத்தக் காலத்தில்,நாசிப்படையானது பல வதைமுகாங்களை
உருவாக்கியுள்ளது. பல லட்சக்கணக்கான மக்களை, குறிப்பாக யூதர்களை உலகத்தின்
பார்;வையிலிருந்து மறைத்து இரகசியமாக சிறையில் அடைக்கவும்,சித்திரவதை
செய்யவும்,கொல்லவுமாக அமைக்கப்பட்டதே இந்த வதை முகாம்கள்.இவற்றுள் போலந்து
நாட்டில், Nஐர்மனியின் எல்லைக்கு அருகிலுள்ள ஒஸ்விச் என்ற நகரத்தில் 1940
ஆம் ஆண்டளவில் அமைக்கப்பட்ட வதைமுகாம் மிகவும் ுக்கியமானது. இங்கு 1942
க்கும் 1945 இடையில், பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட யூத மக்கள்
கொல்லப்பட்டிருக்கிறார்கள். 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏனையோர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதனால் ஒஸ்விச்சினுடைய பெயர் என்றென்றும் மறக்க முடியாததாக
இருக்கிறது.அங்கே துன்பங்களும் அதைத் தொடர்ந்த மரணங்களும் பின்னிப்
பிணைந்திருக்கின்றன.அம் முகாமில் யூத மக்களை அழிப்பதற்காகவென்றே நச்சுவாயு
அறைகளும்,இறந்தவர்களது உடல்களை எந்த அடையாளமுமின்றி எரிக்கக்கூடிய மின்சார
அடுப்புக்களும் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தன அந்நேரம் ஒரு ரயில்
கூவலின் சத்தம் அந்த அமைதியை கிழித்துக்கொண்டு கேட்கும். அங்கு நாய்களின்
சத்தத்தைக் கேட்கமுடியாது. அல்லது அந்த அவலத்துக்குட்பட்ட
பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிப்பதன் கதறல் >ஒலிகளைக்
கேட்கமுடியாது. அமைதி மட்டும்தான்; அங்கு குடியிருக்கும்.அப்போது பொதுவாக
யாருடைய மனக்கண்களிலும்,பல லட்சக்கணக்கான பெண்களை விரியும்.அப்படி
அனுப்பப்பட்ட அம் மக்களுக்கு தாம் எங்கே கொண்டு செல்லப்படுகின்றோம் என்பது
தெரியாது.அவர்கள் தங்களது குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டவர்களாக,
நிர்வாணமாக்கப்பட்டவர்களாக, தலை மொட்டையடிக்கப்பட்டவர்களாக, அழுதுகொண்டேயிருப்பவர்களாக,
தொடர்ச்சியான உடல் வதைக்குட்பட்டவர்களாக, தாங்கள் வாழ்ந்த இடங்களை விட்டு
பிரிக்கப்பட்டவர்களாக, பல கொடுமைகளை சுமந்து அந்த வதை முகாம்களுக்குள்
அடைக்கப்பட்டார்கள். பின்பு அவர்கள் வி~சவாயு மூலம் கொல்லப்பட்டார்கள்.
கடைசிவரை தாம் கொல்லப்படப்போகிறோம் என்பது தெரியாது ஒஸ்டவிச்சில் யூதர்கள்
படுகொலையானதைப்போல சில அடி தூரத்துக்குள் தம் சக மக்கள் கொல்லப்படுவது
தெரியாது கொல்லப்பட்ட அவலம், ஏழு மாத குழந்தை பறித்தெடுக்கப்பட்டு குத்திக்
கொல்லப்பட்ட கொடுமை குமுதினியில் நிகழ்ந்தது. யூதமக்களின் படுகொலையை
நினைவில் வைத்திருக்க அந்த வதை முகாம் இன்றும் பராமரிக்கப்படுகின்றது.நமது
தாயகத்திலும் இன்றும் வாழும் படுகொலை வரலாற்றுச்சின்னம் குமுதினி.
யாழ்பொது நூலக அழிப்பு மறைக்கப்பட்டது போல விடக்கூடாது எம் உயிர்களை
பலிகொண்ட அந்த கொடுமை மறக்கப்படக்கூடாது. எம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட
நினைவுச்சின்னங்கள் வேறு எமக்கு இல்லை. குமுதினியில் கொல்லப்பட்ட மக்களின்
சடலங்களை நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
குமுதினி குறிகாட்டுவான் இறங்குதுறையில் கட்டப்பட்டுக்கிடந்தது.அதனுள்
மக்களின் இரத்தமும் கடல்நீரும் டீசலும் கலந்து இருந்தன. அந்தப்பக்கமே
மக்கள் செல்லமுடியாத படி நிண நாற்றம் எடுத்தது. இந்தக் குமுதினியில்தான்
உடல்கள் நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்படவேண்டும் .அதற்கு குமுதினி
சுத்தப்படுத்தப்பட வேண்டும். ஆனால் எல்லோருமே அதற்குக் கிட்ட செல்ல
பயப்பட்டார்கள். ஒன்று நிணநாற்றம், அடுத்தது அதற்குள் மக்கள் படுகொலை
செய்யப்பட்டதால் ஏற்பட்ட பயம். இறுதியாக சாராயம் வாங்கிக் கொடுக்கப்பட்டு
சிலரைக்கொண்டு குமுதினி கழுவப்பட்டது. மூன்றாம் நாள் தனது மக்களை சடலங்களாக
காவிக்கொண்டு குமுதினி நெடுந்தீவு நோக்கி புறப்பட்டது. இந்தக் கல்வெட்டு
நெடுந்தீவின் மாவலித்துறையில் அமைக்கப்பட்டுள்ள குமுதினிப்படுகொலை
நினைவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum