போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
இறுதியுத்த்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்து எவரும் காணாமல் போகவில்லை" கோத்தாபய Arul11 இறுதியுத்த்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்து எவரும் காணாமல் போகவில்லை" கோத்தாபய Untitl11 இறுதியுத்த்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்து எவரும் காணாமல் போகவில்லை" கோத்தாபய Iiiiii12 இறுதியுத்த்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்து எவரும் காணாமல் போகவில்லை" கோத்தாபய Untitl13 இறுதியுத்த்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்து எவரும் காணாமல் போகவில்லை" கோத்தாபய Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

இறுதியுத்த்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்து எவரும் காணாமல் போகவில்லை" கோத்தாபய

Go down

இறுதியுத்த்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்து எவரும் காணாமல் போகவில்லை" கோத்தாபய Empty இறுதியுத்த்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்து எவரும் காணாமல் போகவில்லை" கோத்தாபய

Post by nilavu on Sun Feb 03, 2013 3:00 am

இறுதியுத்த்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்து எவரும் காணாமல் போகவில்லை" கோத்தாபய


கோத்தாபய ராஜபக்ஸவுக்கும் ஏனையோருக்கும் பகிரங்க மடல்- வன்னியில் இருந்து அற்புதன்-

எமது மின் அஞ்சலுக்கு வந்த இந்த மனக் குமுறல் எந்தவித மாற்றமும் இன்றி இங்கே பிரசுரிக்கப்படுகிறது.

ஆ.ர்

அன்புடன் குளோபல் தமிழ் பொறுப்பாளரே பல சிரமங்களுக்கு மத்தியில் இதனை உங்களுக்கு அனுப்புகிறேன். எனது உணர்வுகளை வேதனைகளை வெளிக்கொணர்வதற்கு உதவிபுரிவீர்கள் என நம்புகிறேன்.

நன்றியுடன்

அற்புதன்

'இறுதியுத்தத்தின்போது இலங்கை படையினரிடம் சரணடைந்து காணாமல் போனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையல்ல'

என்ற கோத்தபாய ராஜபக்ஸ அவர்களின் கருத்து தொடர்பாக

பாதுகாப்பு செயலாளர் அவர்களே,

வன்னிபோரின்போது தங்கள் படைகள் தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டு வீசியதையும், நச்சு வாயுக்கள் அடித்ததையும், பாரிய கிபீர் குண்டு வீசியதையும்,ஆட்லறி, ஐந்து இஞ்சி குண்டு வீசியதையும்,எம்மீது மனிதாபிமானமற்ற முறையில் சாட்சியம் எதுவும் இல்லாமல் இந்திய வல்லாதிக்க அரசின் உதவியுடனும், அமெரிக்க, சீன வல்லரசின் உதவியுடனும், ஐ.நா வின் உதவியுடனும் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்ததையும் கண்மூடிப் பார்த்திருந்த சர்வதேசத்தையும் நாம் அறிவோம் .இவை புனையப்பட்ட கதை அல்ல. உண்மை. வரலாறு எழுதப்படுகின்றது. எமது வரலாறு இவற்றை சர்வதேசத்திற்கு உணர்த்தும்.அன்றுதான் சர்வதேசம் உணரும் சிறுபான்மைத் தமிழருக்கு இழைத்த வரலாற்று துரோகத்தை.

வெறும் 35000 மக்களே மாத்தளன் பிரதேசத்தில் இருந்தனர் என அரச கைக்கூலியாகச் செயற்பட்ட முல்லைத்தீவு மாவட்ட அரசஅதிபரின் துணையோடு செய்தி வெளியிட்ட தங்கள் அரசு 450000 மக்கள் இறுதி நேரம் மாத்தளனில் இருந்து இடம்பெயர் முகாம்களில் வந்து சேர்ந்த போதே சாயம் வெழுத்துப் போனதை உணரவில்லையா? அன்றே சர்வதேசம் தங்கள் பொய்யையும் , புழுகையும் கணிப்பிட்டுவிட்டது.

16.05.2009ல் விடுதலை;புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின் 17.05.2009ல் இராணுவக் கட்டுப்பாடு வன்னி எங்கும் நிலவிய பின் முல்லைத்தீவில் பிரன்சிஸ் ஜோசப் பாதர் முன்னிலையில் 18.05.2009ல் காலை 7.00மணியளவில் பல நூற்றுக்கணக்கான தமிழீழ போராளிகள், பொறுப்பாளர்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததை கண்ட ஆயிரக்கணக்கானோரில் நானும் ஒரு சாட்சியம்.

சரணடைந்த காலப்பகுதியில் முல்லைத்தீவில் ICRCயோ, இந்திய வைத்தியக் குழுக்களோ ஏன் மனிதாபிமான அமைப்புக்களோ இருக்கவில்லை .இல்லை இல்லை தங்களால் அனுமதிக்கப்படவில்லை என்பது தாங்கள் அறியாததா?கடந்தகால சம்பவங்களை மீட்டுப்பாருங்கள்.எல்லா உண்மையும் புரியும்.

மனச்சாட்சியுள்ள, மனிதாபிமானமுள்ள தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணயக்கார அவர்களால் அறியப்பட்ட அறிவின் ஒரு சிறிதளவேனும் தங்களுக்கு இல்லை என்பதையிட்டு ஆழ்ந்த வேதனை அடைகின்றோம்.பொறுப்புள்ள பதவியில, அதிகாரத்தில் உள்ள தாங்கள் பொறுப்பில்லாமல் பதிலளிப்பது 'ஊமையர் சபையில் உளறுபவன் மகா வித்துவான்'; என்ற எமது நாட்டு பழமொழியை நினைவூட்டுகிறது.

16.06.2009 வீரகேசரி. தினமின பத்திரிகைகளில் விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொழும்பிற்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டதாக செய்தி வெளியாகி இருந்தது.

12.06.2011ல் Sunday Observer பத்திரிகையில் NOTICE, Release of Information of The Detainees Terrorist Investigation Division, Colombo 1என்ற செய்தி வெளியாகி இருந்தது. இந்த மாதிரி மூன்றுமுறைகள் வெளியிடப்படாதவர்களின் பெயர் பட்டியல் வெளியிடுவதாக அறிவித்த தங்கள் அரசாங்கம் எமது மக்களை ஏமாற்றி இன்றுவரை அந்த பெயர்பட்டியலை வெளியிடவில்லை. சர்வதேசமும் அந்த பெயர் பட்டியல் தொடர்பாக எந்த கேள்வியையும் தங்கள் அரசிற்கு பயந்து இன்றுவரை அழுத்திக் கேட்க முடியவில்லை.

சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சரணடைந்தவர்கள் , காணாமல் போனவர்கள் தொடர்பாக காலத்திற்கு காலம் தங்கள் அரசிற்கு அழுத்தம் கொடுத்தும் சர்வாதிகார அரசாட்சியில் அவர்களால் உங்கள் எவரையும் வெல்ல முடியவில்லை என்பதுதான் உண்மை.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினது உப்புச்சப்பற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத சிறிலங்கா அரசாங்கம் இனப்பிரச்சினைககான தீர்வை எங்ஙனம் காணப்போகின்றது?

இறுதி 18.05.2009ல் முல்லைத்தீவு இராணுவத்திடம் சரணடைந்த ஒரு தொகுதியினரின் பெயர்பட்டியல் இணைக்கப்படுகின்றது. இவர்களை இராணுவத்திடம் கையளித்த உறவுகள் இன்றும் கண்ணீருடன் தேடிக்கொண்டிருக்கின்றன. இவர்கள் கண்கண்ட சாட்சியங்கள்.

இலங்கை ஒரு சிறியதீவு 3ணவருடங்களாக மில்லிமீற்றர் நகர்ந்து தேடியிருந்தால் கூட காணாமல் போனோரை தெடிக்கண்டு பிடித்திருக்க முடியும்.


18.05.2009 ல் முல்லைத்தீவு இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர் பட்டியல் (இவர்களை இன்றுவரை எவருமே காணவில்லை. பிரான்ஸிஸ் ஜோசப் பாதர் உட்பட)

தொ.இல பெயர் பிரிவு பதவி

1 வேலவன் கட்டளை தளபதி கட்டளை தளபதி(இ.போ.பி.க.தளபதி)

2 மணியரசன் கட்டளை தளபதி கட்டளை தளபதி

3 குமரன் கட்டளை தளபதி கட்டளை தளபதி,மணலாறு

4 ஆரமுதன் தளபதி

5 சித்திராங்கன் தளபதி

6 செல்வராசா தளபதி

7 பாலேஸ் தளபதி

8 நரேன் கடற்புலிகள் தளபதி, கடற்புலிகள்

9 வே.இளங்குமரன்;(பேபி) அரசியல் துறை பொறுப்பாளர், தமிழீழ கல்விக்கழகம. (மூ.உறுப்பினர்);

10 யோகரட்ணம் யோகி அரசியல் துறை பொறுப்பாளர், தமிழீழ சமராய்வு

11 சஞ்சயன்; அரசியல் துறை பொறுப்பாளர்

12 சோ.தங்கன் அரசியல் துறை துணை அரசியல்துறை பொறுப்பாளர்,தமிழீழம்.(மனைவி 3பிள்ளைகளுடன சரணடைந்தவர்);

13 சி.எழிலன் அரசியல் துறை பொறுப்பாளர், திருகோணமலை அரசியல்துறை

14 ஆஞ்சினேயர் அரசியல் துறை பொறுப்பாளர், அரசியல்துறை, யாழ்ப்பாணம். (மனைவி 3பிள்ளைகளுடன் சரணடைந்தவர்)

15 பூவண்ணன் அரசியல் துறை பொறுப்பாளர், தமிழீழ நிர்வாகசேவை

16 பிரியன் அரசியல் துறை துணை பொறுப்பாளர்,தமிழீழ நிர்வாகசேவை.(மனைவி1 பிள்ளையுடன் சரணடைந்தவர் )

17 ரவி அரசியல் துறை பொறுப்பாளர், தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

18 சத்தி அரசியல் துறை பொறுப்பாளர், தமிழீழ மரநடுவம்

19 ராஜா அரசியல் துறை துணைபொறுப்பாளர், தமிழீழ விளையாட்டுத்துறை.(3ஆண் பிள்ளைகளுடன் சரணடைந்தவர் )

20 காளி அரசியல் துறை பொறுப்பாளர்

21 தங்கையா அரசியல் துறை பொறுப்பாளர். நிர்வாகசேவை, மன்னார்

22 நாகேஸ் அரசியல் துறை பொறுப்பாளர், நிர்வாகசேவை, கிளிநொச்சி

23 விஜிதரன் அரசியல் துறை பொறுப்பாளர், நிர்வாகசேவை, யாழ்ப்பாணம்

24 உதயன் அரசியல் துறை பொறுப்பாளர், நிர்வாகசேவை.

25 சுவர்ணன் அரசியல் துறை பொறுப்பாளர், நிர்வாகசேவை.

26 இன்பன் அரசியல் துறை பொறுப்பாளர்

27 முகுந்தன் அரசியல் துறை பொறுப்பாளர்

28 கந்தம்மான் அரசியல் துறை பொறுப்பாளர்

29 அரசண்ணா அரசியல் துறை பொறுப்பாளர்

30 புதுவை இரத்தினதுரை அரசியல் துறை பொறுப்பாளர், கலை பண்பாட்டுகழகம்

31 சாந்தன் அரசியல் துறை பரப்புரை

32 அன்பு அரசியல் துறை பொறுப்பாளர்

33 அருணன் அரசியல் துறை க.க.சாரதி(குமரன்-காளியின் தம்பி)

34 ஞானவேல் அரசியல் துறை பொறுப்பாளர்

35 காந்தன் அரசியல் துறை பொறுப்பாளர்

36 கார்வண்ணன் அரசியல் துறை

37 நளினி துணைபொறுப்பாளர், மகளிர் அரசியல்துறை (உதயனின் மனைவி)

38 குட்டி நிதித்துறை பொறுப்பாளர், பாண்டியன் (எம்.ஆர்.எஸ்)

39 கஞ்சா பாபு நிதித்துறை பொறுப்பாளர்

40 கோல்சர் பாபு நிதித்துறை பொறுப்பாளர், சேரன் வாணிபம்

41 போண்டா ருபன் நிதித்துறை பொறுப்பாளர், வழங்கல் பகுதி

42 விமல் நிதித்துறை

43 மனோஜ் நிதித்துறை பொறுப்பாளர்

44 மஜீத் பொறுப்பாளர்.(மனைவி 2பிள்ளைகளுடன் சரணடைந்தவர் )

45 சீலன் (தொடையுடன் கால் இல்லை) பொறுப்பாளர்

46 ஜக்குலின் அரசியல்துறை பொறுப்பாளர், மகளிர் தலைமை செயலகம் (சத்தியின் மனைவி)

47 உமையாள் அரசியல்துறை பொறுப்பாளர்

48 கொலம்பஸ்

தொ. இல பெயர் பிரிவு பதவி

1 மலரவன் அரசியல்துறை பொறுப்பாளர், நிர்வாக சேவை, வவுனியா

2 கரிகாலன் அரசியல்துறை பொறுப்பாளர், தமிழீழ பொருண்மியம்

3 பத்மலோஜினி (டொக்டர் அன்ரி) அரசியல்துறை பொறுப்பாளர், திலீபன் மருத்துவமனை

4 எழிலரசன் அரசியல்துறை பொறுப்பாளர்,விளையாட்டுத்துறை

5 ரேகா அரசியல்துறை பொறுப்பாளர்,தமிழீழ மருத்துவ பிரிவு

6 றோமியோ அரசியல்துறை பொறுப்பாளர்,மருத்துவபிரிவு

7 மனோஜ் அரசியல்துறை பொறுப்பாளர்,மருத்துவபிரிவு

8 பிரபா தளபதி

9 சுடரவன் பொறுப்பாளர்

10 சுமன் பொறுப்பாளர்,

11 செழியன் கட்டளை தளபதி,

12 சிற்றரசன்

13 பாண்டியன்;(இருகால்களும் முழங்காலுடன் இல்லை) கடற்புலி பொறுப்பாளர்

14 லோறன்ஸ் கட்டளை தளபதி

15 முகுந்தன் கட்டளை தளபதி வடபோர்முனை

16 காந்தி பொறுப்பாளர்

17 கெனடி(முழங்காலுடன் இல்லை) பொறுப்பாளர்

18 ரகு

19 மாதவன்; காவல்துறை பொறுப்பாளா, காவல்துறை

20 மதுவன் பொறுப்பாளர்

21 சூட்டி பொறுப்பாளர்

22 இனியவன்

23 மண்ணிலவன்

24 வீரமணி

25 முல்லைச்செல்வன்

26 சீரமுதன்

27 செம்பருதி

28 குமாரவேல்

29 இளங்குட்டுவன்

30 அஜந்தி

31 சேவகன்(இனியவன்) அரசியல்துறை க.பி.பு.பொறுப்பாளர்;

32 தேனமுதன் தளபதி (கால்முறிவு, தாயுடன் வந்தவர்)

33 ஆசா

34 பாலகுமார் அரசியல்துறை பொறுப்பாளர்(மூத்த உறுப்பினர்)

35 பாலகுமாரண்ணை மகன் அரசியல்துறை

36 லோறன்ஸ் திலகர் அரசியல்துறை மூத்த உறுப்பினர்

37 இசையாளன் பொறுப்பாளர்;


மல்கம் இரஞ்சித் ஆண்டகைஅவர்களே,

கத்தோலிக்க மதகுருவான பிரான்சிஸ் ஜோசவ் பாதர் ஆயிரக்கணக்கானொர் முன்னிலையில் இராணுவத்திடம் சரணடைந்தவர். இன்றுவரை அவரைக்கூட மீட்க முடியாத மிகவும் துர்ப்பாக்கிய நிலையில் கடந்த 3ண வருடங்களுக்கு மேலாக நீங்கள் உள்ளீர்கள். மக்களிற்காக மக்களின் துன்பத்தில் பங்கு கொண்டு வாழ்ந்த ஒரு மனித உரிமை ஆர்வலரும் ஒரு மத குருவுமான இவரை கூட தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக மீட்கமுடியவில்லை.

ஆண்டகை அவர்களே தாங்கள் பெரும்பான்மை இனத்தவர் என்ற வகையில் தாங்களும் பேரினவாதியே. (சிறிலங்கா அரசிற்க எதிரான போர்குற்றச்சாட்டு வலுவாக எழுந்தபோது தாங்கள் இதனை பெரிதாக எடுக்க வேண்டாமென சில நாட்டு தூதுவர்களைக் கேட்டுக் கொண்டதாக செய்திகள் எம் காதில் விழுந்தன.)

தமிழ்தேசிய கூட்டமைப்பினரே,

3ணவருட காலமாக சரணடைந்த காணாமல் போன உறவினர்களின் உறவுகள் உங்கள் அலுவலக, வீட்டுப்படலைகளை தட்டித் திரிந்திருப்பார்கள். மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் உண்மையாக, விசுவாசமாக நீங்கள் சரணடைந்த, காணாமல் போன விடுதலைப்புலிகளை அப்பாவி தமிழ் மக்களை தேடி மனச்சுத்தியோடு செயற்பட்டீர்களா? காணாமல் போன புலிகள் உங்களுக்கு எதிரான அரசியல் களம் அமைத்துவிடுவார்கள் என்ற அச்சமா? அல்லது மனிதஉரிமை தொடர்பாக நீங்கள் கதைக்க தகுதியற்றவர்கள் என்ற மனச்சாட்சிகூறும் உண்மை உறுத்துகின்றதா?

கௌரவ நீதியமைச்சர் ஹக்கீம் அவர்களே,

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தாங்கள் அக்கறை கொண்டதாகவும் கூட்டமைப்பினர் அவர்கள் தொடர்பான விபரங்களை கையளிக்கத் தவறிவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளீர்கள். அவர்கள் தான் எமக்காக எதுவும் செய்வதில்லை. தாங்களாவது மக்களை உங்களது உத்தியோகபூர்வ இடமொன்றில் வந்து பதிவுசெய்யக்கோரி இருக்கலாமே.

சரணடைந்த காணாமல் போனவர்களின் உறவுகள் தங்களுக்கு நேரடியாகவும்,எழுத்துமூலமும் முறைப்பட்டவர்களிற்கு கடந்த 3வருடங்களாக என்ன செய்தீர்கள்? நீதி இல்லாத நாட்டில் ஒரு நீதியமைச்சர் எதற்கு?

மதிப்பிற்குரிய மனிதஆர்வலர் திரு.மனோகணேசன் அவர்களே, தங்களிற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

கொழும்பு மாநகரில் சிறீலங்கா அரசின் நெருக்கடிக்குள்ளும்,அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் துணிச்சலான கருத்துக்களை கூறுவது மட்டுமல்ல செயல்வீரனாகவும் செயற்பட்டு வருகின்றீர்கள். சரணடைந்தவர்கள்,காணாமல் போனவர்கள் தொடர்பில் உங்கள் சேவை இன்னும் தொடர எமது வாழ்த்துக்கள்.

கௌரவ அமைச்சர் வாசுதேவ நாணயக்காரா அவர்களே,

தாங்கள் ஆளும்கட்சி அமைச்சராக இருந்துகொண்டு மிகதுணிச்சலாக 'இறுதிநேரத்தில் தமிழர்கள் இராணுவத்திடம் சரணடைந்தது உண்மை. முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைக்கமுடியாது' என்று கருத்து தெரிவித்திருப்பது பெரும்பான்மை இனத்தவரிடம் மனிதம் இன்னும் முழுமையாக மரணிக்கவில்லை என்ற நம்பிக்கையை எமக்கு ஊட்டுகின்றது.

அன்புடன்,

வன்னியில் இருந்து அற்புதன்.
'இறுதியுத்த்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்து எவரும் காணாமல் போகவில்லை" கோத்தாபய

nilavu

தமிழீழம்
Posts : 224
Join date : 14/10/2012

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum