போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
இவன் கால் நூற்றாண்டு கவிதை ஒரு நதியின் பயணமென நகர்ந்துள்ளான் ......கவிதை  Arul11 இவன் கால் நூற்றாண்டு கவிதை ஒரு நதியின் பயணமென நகர்ந்துள்ளான் ......கவிதை  Untitl11 இவன் கால் நூற்றாண்டு கவிதை ஒரு நதியின் பயணமென நகர்ந்துள்ளான் ......கவிதை  Iiiiii12 இவன் கால் நூற்றாண்டு கவிதை ஒரு நதியின் பயணமென நகர்ந்துள்ளான் ......கவிதை  Untitl13 இவன் கால் நூற்றாண்டு கவிதை ஒரு நதியின் பயணமென நகர்ந்துள்ளான் ......கவிதை  Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

இவன் கால் நூற்றாண்டு கவிதை ஒரு நதியின் பயணமென நகர்ந்துள்ளான் ......கவிதை

Go down

இவன் கால் நூற்றாண்டு கவிதை ஒரு நதியின் பயணமென நகர்ந்துள்ளான் ......கவிதை  Empty இவன் கால் நூற்றாண்டு கவிதை ஒரு நதியின் பயணமென நகர்ந்துள்ளான் ......கவிதை

Post by Admin Fri Aug 10, 2012 9:12 am

இவன் கால் நூற்றாண்டு கவிதை ஒரு நதியின் பயணமென நகர்ந்துள்ளான் ......கவிதை  533022_394504333938195_991616351_n
இவன் கால் நூற்றாண்டு கவிதை
ஒரு நதியின் பயணமென நகர்ந்துள்ளான்
இந்த வெளியெங்கும்
எடுத்து விரிக்கும் பக்கங்களிலெல்லாம்
இருக்கிறது இவனின் சுவடுகள்

மாரடைப்புக்கும் ஒரு வரன்முறை கிடையாதா?
எவர் எவரை எடுத்துச் செல்வதென்று
எங்கள் கூட்டின் இராயாளிப் பறவையை
எப்படிக் காலனால் கவர முடிந்தது

எமன் வந்த நேரத்தில் இவன்
அயர்ந்து தூங்கியிருக்கக் வேண்டும்
இல்லையெனில் உயிர் கவர முடியாது அவனால்
தலைவன் வளர்த்த நாற்று மேடையின் நம்பிக்கை கொடி
இப்படி வேரறுந்து போகுமென்று எவர் நினைத்தார்?


பிரிகேடியர் பால்ராஜ்
இவனை முன்னிறுத்தி பின்னோக்கி விரிக்கின்றேன் நினைவுகளை
எடுக்க எடுக்க தீராது வருகிறது
இவன் தொடுத்த சாதனைச் சரம்

பாரதப் படைகளை நாங்கள் வேரறுத்த காலத்தில்
பத்ம வியூகம் உடைத்த ஓர்மம்
மாங்குள படை முகாம் தகர்த்து
ஆங்கே எடுத்து தரித்த மகுடம்
ஆனையிறவு கதவின் அகலத்திறப்பு
ஓயாத அலைகள் ஒவ்வொன்றிலும் மீதேறிச் சென்று
பகை சரித்த வீரம்
கடலேறிச் சென்று தரை மீட்டு வந்த சாதனை

எத்தனை களங்கள்
எத்தனை விழுப்புண்கள்
எத்தனைச் சாதனை தடங்கள்
எல்லாம் கிடக்கின்றன சுவடுகளாக
இவன் மட்டும் இல்லையென்றானான் இப்போது

நேற்றுவரை நின்ற நெடுமலையென்றானவனை தோற்றோமா?
ஒரு கனவாய்த் தொலைத்தோமா?
புயலெனவே வீசி நின்ற காற்றை விட்டோமா கை நழுவ
பேசிச் சிரித்திருந்த பெரு வீரன் எமை விட்டுப் போனானே
இப்போது பேச்சிழந்து போனோமே
வாழ்நாய் முழுவதையுமே வரலாறாய் ஆக்கியவன்
நோயால் சரிந்தானே
நொடிப்பொழுதில் கரைந்தானே
ஆல மரம் சரிய அதைப் பார்த்து நின்றது போல்
காலன் நடந்து வர கை கட்டிக் கொண்டோமே

முந்தை தமிழ் வீரம் முளைத்ததென
வந்து எழுந்த எங்கள் பெரு வீரன்
இனி இல்லையென்றானான்
அருச்சுனன் பிள்ளை அபிமன்யு போல
எங்கள் பெருந்தலைவன் வளர்த்த பிள்ளை இவன் போனானே

இருந்தால் ஓர் அழகு
எழுந்து நின்றால் வேறழகு
நடந்தால் ஒரு அழகு
நாற் திசையால் பகை வருனும்
சிரிக்கும் அழகிருக்கே
அது தீராத பேரழகாய்
விரித்த பெரு வெளியே
வெற்றிடமாய் போனதம்மா


இவன் காண்டீபம் தரித்த பொழுதுகளில்
பகை நடுங்கி பதறியது
குரல் கேட்டே எதிரி குற்றுயிரானான்
இவன் வழி மறித்த வாசல்களை மீறி
எவனும் எழுந்து வந்ததில்லை இது வரையில்

விழுப்புண் தாங்கி விழுந்த பொழுதுகளிலும்
களமுனையைத்தான் இவன் கணக்கில் எடுத்தான்
எம்மண்ணை துண்டாட நினைத்துப் பகை வந்த நேரத்தில்
பண்டார வன்னியனையே பார்த்தோம் இவன் வடிவில்


நந்திக் கடலில் நாச்சியார் எறிந்த சங்கையும் வாளையும்
மீட்டெடுத்தான் எங்கள் பெருந்தலைவன்
எடுத்த வாளை இவனிடமே கொடுத்து
பகை விழுத்தி வாவென்று பரிசளித்தான்
செய்து முடித்தான் இந்த செகராசசேகரன்
அகாலமாகப் போகவில்லை இந்த அற்புதன்
பலரில் தன்னை பதியமிட்டே சென்றுள்ளான்
அவர்கள் தொடருவார்கள் மீதிப் பயணத்தை

இவனை எழுத நினைத்தாலே போதும்
பேனா தானாகவே எழுந்து கொள்ளும்
பேச நினைத்தாலே போதும்
வார்த்தைகள் தானாகவே வரிசை கொள்கின்றன


இவன் படை நடத்திய அழகை நான் பார்த்தது இல்லை
கேட்டது மட்டுமே
வந்து சொன்னவர் முகத்தில் எத்தனை பிரகாசம்
என்னே இவன் வீரம் என்று
சாட்சி சொல்ல இருக்கிறது முகமாலை
சான்றாகக் கிடக்கிறது மாங்குளம்
என்னை ஏன் மறந்தாய் எனக்கேட்கிறது ஆனையிறவு

வீரர்கள் விழுவதில்லை
ஆற்றலர்கள் அழிவதில்லை
ஆயின் இவனும் அழிய மாட்டான்
நேரில் இருந்தான் நேற்று வரை
இனி வேரில் இருப்பான் எம் தேசம் விடியும் வரை
காலம் எழுதி வைக்கும் கணக்கில்
பால்ராஜ் வரவுக் கணக்காவே வாழ்வான்


வீரம் எல்லோரிலும் விளைவதில்லை
நெருப்பு பச்சை விறகில் பற்றுவதில்லை
வீரமும் நெருப்பும் இவனில் விளைந்தன
தலைவன் சரியாக இனம் கண்டதால் இவன்
விசாலித்த மரமாகி விழுதிறக்கினான்


இனிய தோழனே
உன்னை நினைந்து நினைந்து உருகுகின்றோம்
வந்து எம் கிளையில் வாழ்ந்து விட்டுப் போகிறாய்
பெருகி நதி வழியும் காலத்தில்
படை நடத்தி விட்டு பாதியில் போகின்றாய்
கடை திறவு பாடும் காலத்தில்

இராஜ தந்திரத்தை இழந்தோம்
தேசத்தின் குரல் விடை பெற்ற போது
சிரிப்பின் சிறகை இழந்தோம்
தமிழ்ச் செல்வன் மீது இடி இறங்கிய போது
சாதனையின் சாம்ராஜ்ஜியத்தை இழந்தோம்
சாவுக்கு சாள்சை பறி கொடுத்த போது
இன்று வீரத்தின் விழுதொன்றையும் இழந்தோம்
உன்னை தொலைத்து நிற்கும் நேரத்தில்
அண்மைக்கால கணக்கு மட்டுமே இது
நீங்கள் மட்டுமல்ல
வரிசை இன்னும் நீள்கிறது
விடுதலைக்காக வீழும் ஒவ்வொரு விதைகளும்
உயிர் பெற்றெழுகின்றன உதயத்தில்
அன்று தொட்டு இன்று வரை
ஆயிரம் ஆயிரம் வீரர்களை
அள்ளிக் கொடுத்து விட்டோம்
ஆயினும் தளரோம் நாம்
ஆயினும் தளரோம் நாம்

தலைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில்
உங்களுக்கென்ன ஒரு புன்னகையுடன் போய் விடுகின்றீர்கள்
இருப்பவர்களுக்கே தெரியும் வதை
எழுதுபவர்களுக்கே தெரியும் வலி
சாவிழும் ஒவ்வொரு தருணத்திலும்
செத்துவிடலாமா என்று தோன்றுகிறது
விடுதலையையும் பாடி விட வேண்டும் என்ற பெரு விருப்பில்
வாழ வேண்டுமென்று வருகிறது ஆசை
மாறி மாறி அல்லாடுகிறது மனம்

தோழனே நீயும் போய் விட்டாய்
நாளை யாரென்று யாரறிவார்கள்
நோய் தின்று போவதெனில் நாளை
நானாகவும் இருக்கலாம்

இன்று உன் வித்துடல் மீது நாங்கள்
ஓர் சத்தியம் பறைகின்றோம்
உன்னாலும் உயிர்ப்பித்த விடுதலை வழித்தடத்தில்
எம் பயணம் தொடரும்
பாதி வழியில் எங்கள் பாதைகள் வழையாது
நீ நம்பிய தலைவனையே நாங்களும் நம்புகிறோம்
சாவுக்கு அஞ்சியோ வழியில் தள்ளாடியோ
வீசும் மயக்க வாசனைகளில் அள்ளுண்டோ
நாங்கள் திசை மாறப்போவதில்லை
நீ சுமந்த அஸ்திரங்கள் இனி மேலதிகமாக மற்ற தளபதிகளிடம்
நீ வரித்த கனவுகள் உன்னால் வளர்த்தெடுத்த
மற்ற தோழர்களிடம்
நீ நெஞ்சில் உருப்போட்ட நம்பிக்கை
அதை உனக்கே கை அளித்த தலைவனிடம்
எந்த மாரீசமும் அற்று கிடக்கிறது
விடுதலை வெளி


உன் சாவு எதிரிகளை சதோசப்படுத்தலாம்
கொண்டாடவும் செய்யலாம்
அவர்களுகு ஒன்று புரிவதேயில்லை
நீ தனி மனிதன் இல்லவே என்பது
நாங்கள் சாம்பலில் உயிர்க்கும் பீனிக்ஸ் பறவைகள்
உன்னை விதைக்கும் கல்லறைக்குள்ளும் நீ விழித்தேயிருப்பாய்
நாங்கள் தரும் நல்ல செய்திகளுக்காக
விரைவில் அறிவாய் தோழனே
நாங்கள் வென்றோம் என்ற சேதியை

எம்மைச் சுமந்தாய் தோள்களில் இது நாள் வரையிலும்
இனி உன்னைச் சுமப்போம் நெஞ்சில் நினைவுகளாக
உலகெங்கும் அறியப்பட்ட தமிழரில்
முன் வரிசையில் தான் நீ முகம் காட்டுகிறாய்
பழுதுற்று இருந்த தமிழரின் வீரம் புதுக்கி
பயணித்த வீரம் நீ
நேற்று உயிராய்
இன்று வித்துடலாய்
நாளி நினைவுகளாய்
இருந்தாய்
இருக்கிராய்
இருப்பாய் தோழனே
பிரிய மனமின்றி கையசைக்கின்றோம்
போய் வருக
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

இவன் கால் நூற்றாண்டு கவிதை ஒரு நதியின் பயணமென நகர்ந்துள்ளான் ......கவிதை  Empty Re: இவன் கால் நூற்றாண்டு கவிதை ஒரு நதியின் பயணமென நகர்ந்துள்ளான் ......கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum