Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழர்களுக்காக குரல் கொடுக்க உமக்கு எந்தத் தகுதியும் இல்லை - முரளிதரனுக்கு யாழ் குடாநாட்டு இளையோர் அமைப்பு பதிலடி

Go down

தமிழர்களுக்காக குரல் கொடுக்க உமக்கு எந்தத் தகுதியும் இல்லை - முரளிதரனுக்கு யாழ் குடாநாட்டு இளையோர் அமைப்பு பதிலடி

Post by Admin on Sat Mar 30, 2013 2:55 pm

தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்றும் தமிழ் மக்களை சிங்கள ஆட்சியாளர்கள் சமத்துவமாக நடத்துகின்றனர் என்றும் சிறீலங்கா கிரிக்கெட் அணியின் வீரர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளமைக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள யாழ். குடாநாட்டு மக்கள், தமிழ் மக்கள் தொடர்பில் கருத்துக் கூறுவதற்கான அதிகாரத்தை சிங்களத்தின் வால்பிடியாகிய முரளிதரனுக்கு யார் கொடுத்தது என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

முரளிதரன் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றில் தமிழர்களை சிறிலங்கா சமத்துவமாக நடத்துகின்றது என்றும் தமிழ் நாட்டில் இடம்பெறும் போராட்டங்கள் தேவையற்றவை என்ற பாணியிலும் கருத்து கூறியிருந்தார். இவரின் அந்தக் கூற்றை வன்மையாகக் கண்டித்து யாழ். குடாநாட்டு மக்களின் சார்பில் குடாநாட்டு இளையோர் அமைப்பு நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டுமென்று கூறினால் அது முரளிதரனின் துணிச்சல். அது அவரின் பணி. ஆனால், தமிழ் மக்களின் மனவுறுதியுடன், தமிழ் மக்களின் இலட்சியத்துடன் விளையாட நாங்கள் யாருக்கும் அதிகாரம் அளிக்கவில்லை.

நாங்கள் எமது சுயத்தை யாருக்காகவும் இழக்கவில்லை. சிறிலங்கா அணிக்காக பந்துவீசிய முரளிதரன் சிறந்த பந்துவீச்சாளராகத் திகழ்ந்தது உண்மை. ஆனால், தான் விளையாடச் சென்ற எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு போட்டிகளிலும் தான் ஒரு தமிழன் என்று சொல்லிக்கொள்வதற்கு வெட்கப்படுகின்றவர்.

தான் சிறிலங்கா அணியில் விளையாடும் தமிழ் வீரன் என்ற பெருமையை நிலைநாட்டி தமிழ் மக்களுக்கும் உலகளாவிய ரீதியில் நன்மதிப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய களங்கள் நிறையவே இருந்த போதிலும் முரளிதரன் அவ்வாறு செய்யவில்லை.

மாறாக, தனது ஆடுகளங்களில் தமிழில் ஒரு வார்த்தையேனும் பேசாமல் சிங்களத்திலேயே கத்தித் தீர்த்தவர். இவரின் வெற்றிகளைப் பாராட்டி தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவொன்றில் தனக்கு தமிழில் அவ்வளவாகப் பேச வராது என்று கூறி ஆங்கிலத்தில் உரையாற்றிய மேதை. தமிழே தெரியாத இவர் இன்று தமிழர்களின் பிரதிநிதி போன்று சர்வதேச அரங்கில் கருத்துக் கூறுவதை யாழ். குடாநாட்டு இளையோர் அமைப்பாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழ் மக்களின் இந்த விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான எமது சகோதரர்கள் ஆயுதம் தாங்கிப் போராடிக்கொண்டிருந்த போது தென்னிலங்கையில் சிங்களத்திற்கு சாமரம் வீசிய முத்தையா முரளிதரன் இன்று தமிழ் மக்கள் சந்தோசமாக வாழ்கின்றார்கள் என்று கூறுவதும் சிங்களத்திற்கு சாமரம் வீசுவதைப் போன்றது தான்.

முத்தையா முரளிதரன் உண்மையான தமிழனாக இருந்தால், நாங்கள் அவரை முள்ளிவாய்க்காலுக்கு அழைக்கிறோம், கேப்பாபிலவிற்கு அழைக்கிறோம், புதுமாத்தளனுக்கு அழைக்கிறோம், கிளிநொச்சியின் புறநகர் பகுதிகளுக்கு அழைக்கிறோம் வந்து பார்த்தால் தமிழர்கள் படுகின்ற வேதனை புரியும்.

நீர் வக்காளத்து வாங்குகின்ற சிங்களவர்களின் படைகள் வன்னியில் செய்த கொடுமைகளை நீர் அறிந்திருக் வாய்ப்பில்லை. ஏனெனில், இங்கே சிங்களப் படையினர் எங்கள் தலையில் எரிகுண்டுகளை வீசி எங்களைக் கொன்றொழித்த போது நீர் சர்வதேச மைதானங்களில் சிங்கள அணிக்காக, சிங்கள நாட்டுக்காக பந்து வீசிக்கொண்டிருந்தீர்.

எங்கள் போராட்டத்தைப் பற்றி உமக்கு என்ன தெரியும்??? நீர் சாமரை வீசிக்கொண்டிருந்த சிங்களத்தின் படைகள் எங்கள் தேசத்தில் ஆடிய வெறித்தனத்தால் இன்று ஈழத்தில் எத்தனை தமிழ்ப் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர் என்பது உமக்குத் தெரியுமா?? ஏத்தனை பிஞ்சுக் குழந்தைகள் குண்டுவீச்சில் கொல்லப்பட்டனர் என்ற தகவல் உமக்குத் தெரியுமா?? எமது உற்றார் உறவினர்கள் காணாமற்போயினரே அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றோ, அவர்களை இழந்த துயரத்தில் எத்தனை வீடுகளில் தினமும் அழுகுரல்கள், ஒப்பாரிகள் இடம்பெறுகின்றன என்றோ உமக்குத் தெரியுமா?? உம்மை விட கிரிக்கெட்டில் அதிக திறமையுடைய எத்தனையோ சகோதரர்கள் கையில் துவக்கு ஏந்தி விடுதலைக்காக தங்களைத் தியாகம் செய்தார்கள். அது உமக்குத் தெரியுமா???

எங்கள் தாய்மண் ஆக்கிரமிக்கப்படுகின்றது, பார்க்கும் இடமெங்கும் பௌத்த விகாரைகள், திரும்பும் இடமெங்கும் காவலரண்கள், ஆட்களற்ற காணிகளின் படை முகாம்கள், சிங்களக் குடியேற்றங்கள், இவையெல்லாம் உமது கண்களுக்கு தெரியவில்லை.??? எங்கள் கடல்களில் நாங்கள் மீன் பிடிக்க முடியாது… கடல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எங்கள் காணிகளில் நாங்கள் விவசாயம் செய்ய முடியாது…. காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இத்தனை ஆக்கிரமிப்புகளையும் இங்கே செய்பவர்கள் யார்.??? நீர் சாமரம் வீசிக்கொண்டிருக்கின்ற சிங்களச் சேனைகள்.

இத்தனைக்கும் மத்தியில் தான் தமிழர்கள் ஈழத்தில் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று நீர் அறிக்கை விடுகின்றீர். தமிழர்கள் சமத்துவமாக நடத்தப்படுகின்றார்கள் என்று நீர் சிறிலங்கா அரசுக்கு சான்றிதழ் வழங்குகின்றீர். ஐ.பி.எல் இல் விளையாடினால் உமக்கு லட்சக்கணக்கில் சம்பளம். அந்தப் பணத்திற்காக, அந்தப் பணம் கிடைக்காதா என்ற பேரவாவில் தமிழர்களை விற்றாவது பிழைப்பு நடத்தப் பார்க்கின்றீர்.

உமது செயலை இத்துடன் நிறுத்த வேண்டும். தமிழர்களுக்காக குரல் கொடுக்க உமக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஏனெனில், நீர் தமிழனே இல்லை என்று யாழ் குடாநாட்டு இளையோர் அமைப்பின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
avatar
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

View user profile http://porkutram.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum