Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...

"தமிழர்களைக் கொண்டே தமிழர்களின் கண்களில் குத்த நினைக்கிறது சிங்கள அரசு"

Go down

"தமிழர்களைக் கொண்டே தமிழர்களின் கண்களில் குத்த நினைக்கிறது சிங்கள அரசு"

Post by Admin on Thu Dec 13, 2012 12:15 pm

"தமிழர்களைக் கொண்டே தமிழர்களின் கண்களில் குத்த நினைக்கிறது சிங்கள அரசு"
===================
[You must be registered and logged in to see this image.]
சிறீலங்காவின் படையில் தமிழர்களை இணைக்கும் பணியில் சிங்கள அரசு தற்போது
தீவிரப்படுத்தியுள்ளது. சென்ற நவம்பர் மாதம் கிளிநொச்சியில் 109 தமிழ்
யுவதிகளை இராணுவத்தின் தொண்டர் படையில் இணைப்பதற்குத் தெரிவு செய்தது
சிங்கள அரசு. அதில் இணைந்து கொண்ட தமிழ் யுவதிகள் கூறுகையில் சிவில்
வேலைக்காகவே தம்மைச் சேர்த்துள்ளதாகவும
்,
தங்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்படமாட்டாது என்று இராணுவ அதிகாரிகள்
தங்களிடம் தெரிவித்ததாகவும். குடும்ப வறுமை, தொழிலின்மை என்பன காரணமாகவும்,
30 ஆயிரம் ரூபா மாதாந்தச் சம்பளம், மற்றும் வசதிகள், சலுகைகள் தரப்படும்
என கூறியிருப்பதனால் தாங்கள் இதில் சேர்வதற்கு முன்வந்துள்ள போதிலும்,
இராணுவப் பயிற்சியென்றால் தங்களுக்கு விருப்பமில்லை என்று அவர்கள்
தெரிவித்திருந்தார்கள்

வடக்கில் இராணுவமும், அதனுடன் இணைந்து
செயல்படும் ஒட்டுக்குழுவினரும் தமிழ் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும்
ஆசைகாட்டி வலுக்கட்டாயமாக இராணுவத்தில் இணைக்கும் பணியில்
ஈடுபட்டுவருகிறார்கள். தமிழ் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும்
சிறீலங்காவின் படையில் இணைந்து கொள்வதனால் ஏற்படப்போகும் விளைவுகளை சற்றும்
ஆராயாமல் சிலர் இணைந்து கொள்ளுகிறார்கள். யுத்தம் முடிவடைந்த பிறகும்
சிங்களவர்கள் பலர் இராணுவத்தில் இருந்து தப்பியோடுகிறார்கள், அவர்களைத்
தேடிக்கண்டுபிடித்து அவர்களுக்குத் தண்டனைகளும் அழித்து வலுக்கட்டாயமாக
மீண்டும் இராணுவத்தில் இணைக்கிறது சிங்கள அரசு. இராணுவத்தில் இணைந்து
இருப்பதால் அதிக சம்பளமும், பல வசதிகளும், பல சலுகைகளும் கிடைத்தாலும் அது
நரகமாகக் கருதி சிங்களவர்கள் படையில் இருந்து தப்பியோடுகிறார்கள்.
இராணுவத்தில் உள்ள சிலர் ஒரு வகையான மனநோயாளிகளாக இருக்கிறார்கள் என்று சில
மாதங்களுக்கு முன் தகவல் வெளியாகி இருந்தது. மற்றும் இராணுவத்தில் உள்ள
பலர் தற்கொலை செய்து வருகிறார்கள். சிறீலங்காவின் இராணுவத்தில் உள்ள
நிலமைகளை அறியாமல் அதில் இணைந்துகொண்டு பல நரகவேதனைகளையும் அனுபவித்த
பின்பு அதில் இருந்து இலகுவில் வெளியேறுவதற்கு சிங்கள அரசு
அனுமதிக்கப்போவதில்லை. சிங்களவர்களுக்கே சிறீலங்காப் படையென்பது நரகம்
போன்று தென்பட்டால் அதில் இணையப்போகும் தமிழ் இளைஞர்களுக்கும்,
யுவதிகளுக்கும் அது எப்படி அமையப்போகிறது என்பதனை அவர்கள்
சிந்திக்கவேண்டும்

இறுதி யுத்தத்தின் போது சிறீலங்காப் படையினர்
தமிழ்ப் பெண்கள் மீது வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாத வகையில் பாலியல்
வன்கொடுமைகளைச் செய்தும், சித்திரவதைகளைச் செய்தும் படுகொலைகளையும்
செய்தது. இவ்வாறு பல ஆண்டுகளாக சிறீலங்காப் படையினர் தமிழர் தாயகப்
பிரதேசங்களில் தமிழ்ப் பெண்கள் மீது பல வன்முறைகளில் ஈடுபட்டு வருவதனை
உணராமலா தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைகிறார்கள்? முதலில் சிறீலங்கா
இராணுவம் என்பது தமிழ் யுவதிகளுக்கு பாதுகாப்பான இராணுவமா? தங்களின்
மானத்திற்கும், உயிர்களுக்கும் ஆபத்துவந்த பின்னர் இராணுவத்தினால்
வழங்கப்படும் சலுகைகளைப் பெற்று என்ன நன்மையை அடையப்போகிறார்கள் தமிழ்
யுவதிகள்?. இவ்வாறு பல வகையில் சிந்திக்காமல் சில தமிழ் யுவதிகள்
சிறீலங்காவின் படையில் இணைவது அவர்களுக்குக் கடுமையான பாதிப்புக்களை
கொடுத்து எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கி விடும், தமிழ் இளைஞர்களும்,
யுவதிகளும் சிறீலங்காப் படையில் இணைவதனால் அவர்களுக்கு ஏற்படப்போகிற
பின்விளைவுகளை எடுத்துக் கூறுவேண்டியவர்கள் தமிழ் அரசியல்வாதிகளே, அதனைச்
செய்யாமல் அவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.


சிறீலங்காப் படையென்பது சிங்கள மயமாக்கலான சிங்களப் படையாகும். அது
மேறகொண்ட அட்டூழியங்களைத் தமிழர்கள் மறக்கமாட்டார்கள். அதில் சில தமிழர்களை
பலவந்தமான முறையில் சிங்கள இராணுவமும் அதன் ஒட்டுக்குழுவினரும் படையில்
இணைப்பதனூடாகப் பல சதித்திட்டங்களைப் போட்டுள்ளனர், தமிழர்களின் உரிமைகள்
வழங்கப்படாமல் மறுக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து அவர்கள் அடக்கப்பட்ட
நிலையில் வடக்கிலும், கிழக்கிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் மிக
மோசமான படுகொலைகள், கடத்தப்படுதல், காணாமல்போதல், நிலஆக்கிரமிப்பு மற்றும்
போர்க்குற்றங்கள் போன்ற நடவடிக்கைகளின் காரணமாக தமிழர் தாயகப்
பகுதியிலிருந்து சிங்களப் படையினர் விலக்கிக் கொள்ளப்படவேண்டும் என்று
தமிழ் மக்களாலும், சர்வதேச அளவிலும்பேசப்படும் பெரும் பிரச்சனையாக
உருவெடுத்துள்ள நிலையி்லேயே தமிழர்களை வலிந்து இராணுவத்தில் இணைக்கிறது
சிங்கள அரசு. உண்மையில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிங்களப் படையினர்
இல்லை என்று பொய்யான செய்தியைச் சர்வதேசத்திற்கு கூறுவதற்குச் சிங்கள அரசு
முனைகிறது.

தமிழர்களை இராணுவத்தில் இணைத்தனூடாக நல்லிணக்கத்தை
ஏற்படுத்திவிட்டோம் என்று கூறி சிறீலங்கா அரசு பெரும் பிரச்சாரங்களை
முன்னெடுத்துள்ளது. இவ்வாறு சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் சதி வேலையிலும்
இறங்கியுள்ளது. அண்மையில் வடக்கில் சுமார் 2500 வரையான முன்னாள் போராளிகள்
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். அதனைத்
தொடர்ந்து தமிழ் யுவதிகளுக்கு ஆசைகாட்டியும், பொய்யான வாக்குறுதிகளைக்
கொடுத்தும் அவர்களை வலிந்து இராணுவத்தில் இணைத்துள்ளது சிங்கள அரசு,
தற்போது அங்கிருந்துவரும் செய்திகள் கூறுவது வீடுவீடாகச் சென்று தமிழ்ப்
பெண்களைப் பலவந்தமாக இராணுவத்தில் இணைத்துக் கொண்டதாகவும், தங்களை
ஏமாற்றிப் படையில் இணைதார்கள் என்றும், தங்களின் பெற்றோரைப் பார்வையிட
படையினர் அனுமதிக்கவில்லை என்றும் கடுமையான குற்றச்சாட்டுக்களைக்
கூறியிருக்கிறார்கள் இராணுவத்தில் இணைந்திருக்கும் தமிழ் யுவதிகள்.
அண்மையில் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளின் உறவினர்கள்
அவர்களைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படாத நிலையில் அவர்களுக்கும்
படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து
அங்கிருந்த உறவினர்கள் சிங்கப் படையினரால் விரட்டப்பட்டார்கள்.


சில தமிழ் யுவதிகள் தங்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்படமாட்டாது என்ற
பொய்யான தகவல்களை உள்வாங்கி படையில் இணைந்திருக்கிறார்கள் ஆனால் இராணுவப்
பயிற்சி வழங்கப்படும் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஒட்டுக்குழுக்களைப் பலப்படுத்துவதற்கும் தமிழர்களை வலிந்து இராணுவத்தில்
இணைக்கிறார்கள் சிங்கள அரசும் அதன் ஒட்டுக்குழுவினரும். சில தமிழ்
இளைஞர்களும், யுவதிகளும் இராணவத்தில் இணைந்துகொள்வதனால் தங்களுக்கும்,
தமிழினத்திற்க்கும் பாதிப்பினைத் தேடிக்கொள்ள முனைகிறார்கள். சிங்கள
அரசிற்கு எதிராகச் சர்வதேச ரீதியில் எழுந்துள்ள நெருக்கடியின் காரணமாக பல
நாடகங்களை அரங்கேற்றுவதில் சிங்கள அரசு முனைப்புக் காட்டி வருகிறது, அதற்கு
தமிழர்கள் துணை சென்று தங்களின் தலையில் தாங்களே மண்ணை
வாரிக்கொட்டிக்கொள்ளக் கூடாது. தமிழர்களைக் கொண்டே தமிழர்களின் கண்களில்
குத்த நினைக்கிறது சிங்கள அரசு. இது தொடர்பாக தமிழ் அரசியலவாதிகள் கடுமையான
கவனத்தைச் செலுத்த வேண்டும். வடக்கில் தமிழ் இளைஞர்களுக்கும்,
யுவதிகளுக்கும் அறிவுரைகளைக் கூறிப் பிரச்சாரம் செய்யவேண்டும். தமிழ்
இளைஞர்களையும், யுவதிகளையும் சரியான பாதையில் கொண்டு செல்லுவது தமிழ்
அரசியல்வாதிகளின் கடமையாகும்.

இதற்கிடையே பலவந்தமாக இராணுவத்தில்
இணைக்கப்பட்ட தமிழ் யுவதிகளுக்கு பேய் பிடித்துள்ளதாம் என்று கூறி சுமார்
21 வரையிலான யுவதிகளை நேற்றிரவு கிளிநொச்சி அரச வைத்தியசாலையில்
ஒப்படைத்துள்ளதாக சிங்களப் படை அதிகாரி கூறியுள்ளார். இவ்வாறு படையில்
இணைக்கப்பட்ட தமிழ் யுவதிகள் மீது பல மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட சிங்களப்
படையினர் ஆரம்பித்துள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

விஸ்வா
avatar
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

View user profile http://porkutram.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum