Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
10 இளைஞர்கள் புலியாக மாறவேண்டும்! Arul11 10 இளைஞர்கள் புலியாக மாறவேண்டும்! Untitl11 10 இளைஞர்கள் புலியாக மாறவேண்டும்! Iiiiii12 10 இளைஞர்கள் புலியாக மாறவேண்டும்! Untitl13 10 இளைஞர்கள் புலியாக மாறவேண்டும்! Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

10 இளைஞர்கள் புலியாக மாறவேண்டும்!

Go down

10 இளைஞர்கள் புலியாக மாறவேண்டும்! Empty 10 இளைஞர்கள் புலியாக மாறவேண்டும்!

Post by nilavu on Sat Dec 01, 2012 9:45 pm

மாவீரர் தினமான நவம்பர் 27-ம் தேதி, சேலத்திலும் புதுச்சேரியிலும்
எழுச்சியை நடத்தி இருக்​கிறார்கள், திராவிடர் விடுதலைக் கழகத்தினர்!

தனி ஈழம் வேண்டி தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட கரும் புலிகள், வான்
புலிகள், கடற் புலிகள் மற்றும் மூத்த தளபதிகள் என 120 பேரின் அரிய
புகைப்படங்கள், புதுச்சேரி, திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்
அரியாங்குப்பம் மில்லர் அரங்க வளாகத்தில், வைக்கப்பட்டு இருந்தன.

வீர மரணம் அடைந்த புலிகளுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர்
கொளத்தூர் மணி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்
ஆகியோர், தியாக தீபத்தை ஏற்றி வீர வணக்கம் செலுத்தினர்.

முதலில் பேசிய வேல்முருகன், ”உலகில் வாழும் தமிழர்களின் முகவரியான நம்
தேசியத் தலைவரின் கனவையும் லட்சியத்​தையும் சிங்களப் பேரின​வாத அரசு
அழித்ததை, இளைய தலைமுறையினர் மறந்துவிடக் கூடாது.

இது ஒரு சம்பிரதாய நிகழ்வோ, சடங்கோ அல்ல. 10 மைல் தொலைவில் நடந்த இனப்
படுகொலையைத் தடுப்பதற்கு ஆறரைக் கோடி தமிழர்களும் தவறி விட்டோம்.

இன அழிப்புகளை, இனப் படுகொலைகளை, கற்பழிப்பு​களை, கோயில்கள், மசூதிகள்,
தேவாலயங்கள், வீடுகள், மீன்பிடி வலைகள் என்று அந்த மக்களின்
வாழ்வாதாரத்தையே அழித்து வரும் சிங்களவாதிகளின் அட்டூழியங்களை இந்த
நாட்களில் இளைய தலை​முறைக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். என்றைக்கு இந்த 10
கோடி தமிழர்​களில் இருந்து 10 இளைஞர்கள் புலிகளாக மாறுகிறார்களோ… அன்றுதான்
தமிழ் ஈழ விடுதலை சாத்தியம்” என்று பொங்கினார்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, ”தமிழர்களுக்கு
மட்டுமே சொந்த நாடாக இருந்த இலங்கைத் தீவில் வந்தேறியவர்கள் சிங்களவர்கள்.
தமிழர் தயவால் வாழ்ந்தவர்கள். அவர்கள் தமிழர்களை அடிமைப்படுத்திய வரலாறு,
நீண்ட நெடியது. உலகில் பல விடுதலை இயக்கங்கள் இருந்தாலும், அவர்கள்
அனைவரும் கெரில்லா போர் முறையைத்தான் நடத்தினர். ஆனால், விடுதலைப் புலிகள்
இயக்கமானது, மரபுவழிப் போர் நடத்தும் அளவுக்குத் தனி ராணுவத்தையே வைத்து
இருந்தனர். அது, தமிழனுக்கான தனிப் பெருமை. 1989-ல் நடந்த போரில் போராளி
சங்கர் வீரமரணம் அடைந்த நாளையே, ‘மாவீரர் நாள்’ என்று அறிவித்தார்
பிரபாகரன்.

இந்த நாளில் நான் பெருமையாகக் கருதுவது, முதல் மாவீரர் நாளின்போது
தலைவர் என்னை அழைத்து இருந்ததைத்தான். அது, இந்திய அமைதிப் படை இருந்த
காலம். தலைவரைச் சுட்டுக்கொன்று விட்டனர் என்று பரவி இருந்த வதந்திக்கு,
நான் அவரைச் சந்தித்து வெளியிட்ட படமே முற்றுப்புள்ளி வைத்தது. இப்போதும்
தலைவர் இருக்கிறார் என்பதைச் சொல்ல ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என்று
ஏங்குகிறேன். தமிழ் ஈழத்துக்கு ஆதரவாகப் பேச, தமிழ்நாடு ஒன்றுதான்
இருக்கிறது. நாம் எழுச்சியும் எதிர்ப்பும் எழுப்பாத காரணத்தால்தான் இன
அழிப்பு நடந்தது. ராஜபக்ஷே மற்றும் அவர்களுக்குத் துணையாக நின்ற இந்தியா,
பாகிஸ்தான், சீனா மட்டும் இன அழிப்புக்குக் காரணம் இல்லை. அமைதியாக நின்ற
தமிழ்நாடும்தான் காரணம். அடுத்த தலைமுறையாவது, ஈழத்தில் ஆதரவுக் குரல்
எதிர் பார்க்கும்போது, நிச்சயம் தன் குரலை உயர்த்தும் என்று நம்பிக்கையோடு
காத்திருக்கிறேன்” என்று முழங்கினார்.

இந்தக் கூட்டத்தைப் போன்றே உணர்ச்சி​மயமாக, புலியூரிலும் வழிபாடு
நடந்தது. இந்தப் புலியூர், சேலம் மாவட்டம் கொளத்தூருக்கு அருகில்
இருக்கிறது. தமிழகத்தில் புலிகள் பயிற்சிபெற்ற இடம். கொளத்தூர் மணியின்
சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் இந்தக் கிராமத்திலும் எழுச்சி விழா
நடந்தது.

ஊருக்கு மத்தியில் இருக்கும் தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில்
தமிழ் உணர்வாளர்கள் கூடி இருந்தனர். ‘தாயகக் கனவில் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே…’ என்ற மாவீரர் தினப் பாடல் ஒலிக்க குழந்தைகளும்,
பெண்களும், முதியவர்களும் வரிசையாக நின்று மெழுகுவத்தி ஏந்தி, ஈழப் போரில்
உயிர் நீத்த தியாகிகளுக்கு செங்காந்தள் மலர்களைத் தூவி வீர வணக்கம்
செலுத்தினர். அஞ்சலிக்குப் பிறகு, ஈழ விடுதலைப் போரின் கருத்தியல் நாடகம்
நடத்தப்பட்டது. புலிகள் பயிற்சி பெற்றபோது நடந்த நிகழ்வுகளை, அந்தக்
கிராமத்தில் இருந்த பெரியவர்கள் கூட்டத்தினரோடு பகிர்ந்து கொண்டனர்.

ஈழ ஆதரவாளர்களை மீண்டும் தட்டி எழுப்பி இருக்கிறது இந்த விழாக்கள்!

[You must be registered and logged in to see this link.]

-ஜூனியர் விகடன்-

nilavu

தமிழீழம்
Posts : 224
Join date : 14/10/2012

Back to top Go down

10 இளைஞர்கள் புலியாக மாறவேண்டும்! Empty Re: 10 இளைஞர்கள் புலியாக மாறவேண்டும்!

Post by aarul on Sat Dec 01, 2012 10:00 pm

நூறு இளைஞர்கள் புலிகளாக மாறலாம்

aarul
aarul

தமிழீழம்
Posts : 38
Join date : 26/07/2012

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum