Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...

"கடலில் காவியமான அப்பாவுக்கு ஒரு கப்பல்"

Go down

"கடலில் காவியமான அப்பாவுக்கு ஒரு கப்பல்"

Post by Admin on Fri Aug 31, 2012 8:45 am

"கடலில் காவியமான அப்பாவுக்கு ஒரு கப்பல்"
கடந்த இருவாரங்களாக மட்டக்களப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில
முன்னாள் போராளிகளைச் சந்தித்து அவர்களின் இன்றைய வாழ்க்கைச் சிக்கல்களைத்
தீர்க்கும் வகையில், வெளிநாட்டில் உள்ள சில நண்பர்களின் மூலம் அவர்களுக்கு
சிறு கைத்தொழில் முயற்சி ஒன்றினை அமைத்துக் கொடுத்து அவர்கள் முகம்
கொடுக்கும் ஒரு சில பிரச்சனைகளையாவது தீர்க்க முயன்று வருகிறேன்.
[You must be registered and logged in to see this image.]

எனது நண்பர்கள் சிலரின் பேருதவியினால் சில குடும்பங்களுக்கு உதவ முடிந்திருக்கிறது.

அவர்களை அழைத்துக் கொண்டு ஒரு சுற்றுலா சென்றிருந்தோம் நேற்று.

மறக்க முடியாத அந்தச் சுற்றுலா பற்றிய பதிவே இது.

மாமா என்னும் பெயரின் பின்னாலிருக்கும் மகத்துவத்தை நேற்றைய நாள் உணர்ந்து கொண்டேன்.

11 குழந்தைகளுடனும் அவர்களின் பெற்றோருடனும் ஒரு சுற்றுலா சென்றிருந்தோம்.

கதைகள் கன பேசி பின் கையில் தூங்கிப் போன சிறுமி,

எனக்கருகிலேயே உட்கார்ந்திருந்த சிறுவன்,

வாழ்க்கையில் முதன் முதலாக புகையிரதப் பாதையையும், புகையிரதத்தையும் கண்ட அவனின் ஆச்சரியம் கலந்த உணர்ச்சிகள்,

கோயிலுக்குச் செல்லும் வீதியில் அமைந்திருந்த சிறு சிறு கடைகளை கடந்த போது அவர்களின் ஏக்கமான பார்வைகள்,

குழந்தைகளின் 10 ரூபா பெறுமதியான விளையாட்டுப் பொருளையே வாங்கிக் கொடுக்க
முடியாது தவித்த, ஆளுக்கு இரண்டு விளையாட்டுப் பொருட்களை வாங்கிக்
கொள்ளுங்கள் என்றதும், மாமா எனக்கு அது .. இல்லை இல்லை இது என்று தெரிவு
செய்ய தடுமாறிய அவர்களின் குதூகலம் கலந்த மனநிலை,
மாமா இன்னும் ஒன்று
வாங்கித் தாங்களேன் என்ற போது இல்லை என்று சொல்ல முடியாது தடுமாறிய நான்,
என்னைத் தடுத்த குழந்தைகளின் பெற்றோர்,

எத்தனை கண்ணாடி இருக்கி ஒண்ணையும் வாங்கித்தாறாவு இல்லை அம்மா என்று மட்டக்களப்புத் தமிழில் தன் தாயைப்பற்றி குறைகூறிய குழந்தை,

கோயிலில் அவர்களது பக்தி, அப்பா ஆமிக்காரனிடம் இருந்து வரணும் என்று கல்லுக் கடவுளிடம் வரம் கேட்ட குழந்தை,

அதைக் கண்டு அழுத தாய்,

அரைமணி நேரத்தில் உணவு தருகிறேன் என்று கூறி ஒன்றரை மணித்தியாங்களின் பின் உணவு தந்த ஹோட்டல் முதலாளி,

அதுவரை கொளுத்தும் வெய்யிலில் பொறுமை காத்த குழந்தைகள்,

கடற்கரையில் இறங்கியதும் அவர்களின் கூச்சமும் அவர்களின் ஓட்டமும், குழந்தைகளை கட்டுப்படுத்த முடியாத தாய்மார்.

2009ம் ஆண்டு கடலில் காவியமான அப்பாவுக்காய் வீட்டில் இருந்தே இரண்டு கப்பல்கள் செய்து வந்து கடலில் விட்ட மூன்று வயதுச் சிறுவன்,
அலைக்குப் பயந்து என் கழுத்தை கட்டிக்கொணட சிறுமி. என்னுடன் மண்வீடு கட்டியபடியே கடலுடன் நட்பாகிப் போன அக் குழந்தை,

பின்பு என்னுடன் கழுத்தளவு நீரில் நின்றபடியே அம்மா இங்க பாரு.. இங்க பாரு என்று கத்திய அவளின் குதூகலம்.

கடலைவிட்டு வெளியேற விரும்பாத சிறுவர்கள்,

மதிய உணவினை சிந்தாது சிதறாது அமர்ந்திருந்து உண்ட அவர்களின் பக்குவம்,

ஜஸ்கிறீம் கடையில் எதை வாங்குவது என்று தடுமாறிய அவர்களின் மனது,

தடுமாறிய குழந்தைகளுக்கு விலையான ஜஸ்கிறீம்களை காட்டிய கடைக்காரர்,

இரகசியமாய் இரண்டாம் ஜஸ்கிறீம் கேட்ட குழந்தைகள்.

ஊரில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய், கடற்கரையில் 2 கிலோ நூறு ரூபாய் என்றதும் வாங்கிக்கொண்ட பெற்றோர்.

மாலை வீடு திரும்பிய போது கடற்குளிப்பின் அசதியல் தூங்கி வளிந்த குழந்தைகள்,

பெரியோரின் நகைச்சுவைப் பேச்சு, மன அழுத்தங்களை மறந்து ஒரு நாளை களித்த அவர்களின் மகிழ்ச்சி,

விடைபெறும்போது அண்ணா நன்றி என்று வாய்க்கு வாய் கூறிய பெற்றோர்.

கண்கலங்கி நின்ற பெற்றோர். மாமா பெயித்து வாறன் என்று மண்ணின் மொழியில் விடைபெற்ற குழந்தைகள்

என்று நேற்றையை நாள் எத்தனையோ வருடங்களின் பின் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருந்தது.

சில குறிப்புகள்:
தன்னை அறிந்தவர்கள் யாரும் இந்தச் சுற்றுலாவில் இருந்தால் அதனால் தனக்கும்
தன் குழந்தைக்கும் மேலும் சிக்கல்கள் வரலாம் என்று எனது அழைப்பை அன்பாய்
மறுத்த ஒரு பெண்.

பெற்றோர்கள், சகோதரர்கள், தங்கையின் கணவன் என்று தனது குடும்பத்தில் இருந்து ஐவரை இழந்த பெண் கடலில் இறங்க காட்டிய பயம்.

தன் குழந்தையின் கையை இறுகப் பற்றியபடியே காலளவு நீரில் தன் தங்கையின் கையை பற்றியவாறு குழந்தையை குளிக்க அனுமதித்தார் அவர்.

இடுப்புக்குக் கீழ் இயங்கமுடியாத கணவரை குழந்தைபோல் பராமரித்த அவரது மனைவி,

அவர் தனது கணவரை இயற்கை உபாதைகளை கழிக்க அழைத்துச் சென்ற போது தனது
குழந்தைகளை பார்த்துக்கொள் என்று 9 வயதுச்சிறுமியிடம் கூறிய போது அவள்
காட்டி பெறுப்புணர்ச்சி.

மூன்று குழந்தைகளையும் மாறி மாறி கடலில் குளிப்பாட்டிய அந்தத் தாய்.

ஓய்வே இல்லாது குடும்பத்துக்காய் உழைக்கும் அவரது மனம்.

பயணம் முழுவதையும் ஒழுங்குபண்ணித் தந்து சாரதியாய், எதையும் முகம்
சுளிக்காது சிரித்த முகத்துடன் செய்து தந்த மனிதரும் அவரது ஆளுமையும்.

இப்படி பல பலஅனுபவங்களுடன் கடந்து போன நேற்றைய நாளை மிகவும் மிகவும் இனியது

சாதாரணமானவனின் மனது.
avatar
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

View user profile http://porkutram.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum